Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

உங்களில் யாருக்காவது ஆறு தலைமுறைகளுக்கு முன்னாள் உங்கள் மூதாதையர் யார் என்று தெரியுமா ?
மலையகத் தமிழர் எல்லாரும் ஆங்கிலேயரால் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவேர்களே தவிர களவாக வள்ளங்களில் வந்தவர்கள் அல்ல. உண்மையில் இவர்கள் கள்ளத்தோணிகளும் அல்ல

கடந்த எண்ணூறு ஆண்டுகளுக்கு மேலாக கலிங்க படையெடுப்பில் தொடங்கி இருநூறு வருடங்களுக்கு முன் புகையிலை பயிரிட்டு பஞ்சம் போக்கவென வந்தவர்கள் வரை வடஇலங்கைக்கு களவாக ஆயிரக்கணக்கானோர் வள்ளங்களில் தமிழ்நாட்டில் இருந்து வந்தனர்.

பின்னர் நூறு வருடத்திற்கு முன்னர் இவர்களில் ஒரு பகுதியினர் பர்மா(மியான்மார்) சிங்கப்பூர் மலேசியா என்றெல்லாம் பணம் தேட வள்ளங்களில் போனார்கள்.

அறுபது வருடங்களுக்கு முன் இவர்களில் பலர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வந்தனர். கடந்த முப்பது வருடங்களாக மத்திய கிழக்கு இங்கிலாந்து அமெரிக்கா அவுஸ்திரேலியா கனடா பிரான்ஸ் ஜெர்மனி நோர்வே சுவிஸ் டென்மார்க் ஒல்லாந்து இந்தியா என்று பல நாடுகளுக்கு பொருள் தேடி குடும்பமாக குடி பெயர்ந்தனர்.

திரை கடல் ஓடிய் திரவியம் தேடுவதில் நாங்கள் வல்லவர்கள். வள்ளமும் தோணியும் எங்கள் வம்சமெல்லாம் இன்று உலகமெலாம் பரவ மிக முக்கியமானவை.

வெளி மாவட்டங்களில் யாழ் அகற்றி சங்கங்கள் அமைத்த முந்தி வந்த யாழ்ப்பாணி பிந்தி வந்த யாழ்ப்பாணியை யாழ்ப்பாணி என்பது போல முந்தி தோணியில் வந்தவன் பிந்தி தோணியில் வந்தவனை கள்ளத்தோணி என்றது தான் உண்மையான எங்கள் வரலாறு. இதனால் தான் சொத்து மீதும் பணத்தின் மீது நாம் கொண்ட பற்று சக மனிதர் மீதும் இருக்கும் நாட்டின் மீதும் எமக்கு கிடையாது.

எங்கள் முன்னோர் போலவே நாமும் நாடோடியாக எப்படியாவது திரவியம் தேடுவதில் வல்லவர்கள். ஆனால் வாழ்க்கையை அனுபவிக்கதான் எமக்கெல்லாம் தெரியாது.

நாங்கள் எப்படி எல்லாம் நாடுவிட்டு நாடு ஓடினோம் என்பதற்கு பிரித்தானிய புள்ளிவிபர ஆதாரங்களை பாருங்கள். 160 வருடங்களுக்கு முன் 1834கும் 1870கும் இடையில் அதாவது 36 வருடகாலத்தில் மதராஸ் பகுதியில் இருந்து மட்டும் 14 லட்சம் பேர் வடஇலங்கைக்கு குடிபெயர்ந்தனர். அதே காலப்பகுதியில் 8 லட்சம் பேர் வடஇலங்கையில் இருந்து மதராஸ் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். ஆகவே இந்த 36 வருடங்களில் மட்டும் 6 லட்சம் பேர் மேலதிகமாக வடஇலங்கையில் குடியேறி உள்ளனர். இதில் கேரளா, திருநெல்வேலி, ராமநாதபுர பகுதிகளில் இருந்து வந்தவர்கள் உள்ளடங்கவில்லை. அவர்களையும் சேர்த்தால் குடியேறியவர்களின் தொகை பத்து லட்சத்தையும் தாண்டி விடும் .

150 வருடங்களுக்கு முன் தென் கிழக்காசியாவில் உள்ள சகல பிரித்தானிய துறைமுகங்களிலும் தமிழர்தான் வேலை செய்தனர். பீஜீ, கயானா, ஜாவா, கம்போடியா, மொரீசியஸ், தென் ஆபிரிக்கா என்றெல்லாம் 150 வருடத்திற்கு முன் திரவியம் தேடி போனவர்கள் எம் முன்னவர்கள். ஜப்பான்காரனுக்கு ஜப்பான் சொந்தம் ஜேர்மன்காரனுக்கு ஜேர்மன் சொந்தம் பிரெஞ்சுகாரனுக்கு பிரான்ஸ் சொந்தம் சீனாக்காரனுக்கு சீனா சொந்தம் கொரியர்களுக்கு கொரியா சொந்தம்
எங்களுக்கோ இந்த பூமியே சொந்தம் யாதும் ஊரே யாதும் கேளீர்.

நாங்கள் எல்லாரும் பெரும்பாலும் நாடோடிகள் தான். அந்த நாடோடிகளின் திரவியம் தேடும் சிந்தனையின் விளைவே எங்களுக்குள் இருக்க கூடிய அடிமைப் புத்தி. பூர்வீகம் பூர்வீகமாக ஒரே இடத்தில் இருந்து வாழ்ந்தவர்கள் பிரச்சனைகளை விட்டு தப்பி ஓடுவதை விட்டு பிரச்சனைகளை தீர்க்க சிந்திப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.

எங்கள் தலைவர்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு
இலங்கை தமிழரசு கட்சி தலைவர் வேலுப்பிள்ளை (SJV)செல்வநாயகம் மலேசியாவில் பிறந்த மலேசியபிரஜை. பின்னர் இலங்கையில் குடியேறியவர்.

அல்வாயில் பிறந்த போஸ்ட் மாஸ்டர் காங்கேசரின் மகன் G.G பொன்னம்பலமோ மிக ஏழையான குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு புலைமைபரிசு கிடைத்து லண்டனுக்கு இயற்கை விஞ்ஞானம் படிக்க போனவர். படிக்க லண்டனுக்கு போறதுக்கு கொழும்பில் இருந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் பணத்தில்தான் போனார். அங்கே இருக்கும் போதும் இடைக்கிடை பணம் அனுப்ப சொல்லி பணம் பெற்றவர். படித்து முடித்து வந்து அந்த வர்த்தகரின் மகளை கலியாணம் செய்வதாகவும் உறுதி கொடுத்திருந்தார். இயற்கை விஞ்ஞானம் படித்துவிட்டு பின்னர் சட்டம் பயின்று சட்டவல்லுனராக கப்பலில் கொழும்பு திரும்பிய G.G.பொன்னம்பலத்தை வரவேற்க அந்த வர்த்தகர் குடும்பத்தோடு துறைமுகத்துக்கு போனால் கூடவே ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் பொன்னம்பலம் வந்திறங்கினார் அன்றிரவே வர்த்தகரின் மகள் தற்கொலை செய்து கொண்டாள். இதனால் அடுத்த கப்பலில் அந்த வெள்ளைகார பெண்ணை G.G.பொன்னம்பலம் திருப்பி அனுப்பினார்.
பின்னர் பெருமளவு சீதனத்துக்காக அல்பிரட் துரையப்பாவின் உறவுக்காரரான மலேசியாவில் ரப்பர் தோட்டங்கள் வைத்திருந்த ஒரு கிறீஸ்தவ வெள்ளாள பெண்ணை G.G.பொன்னம்பலம் கலியாணம் முடித்தார். அல்பிரட் துரையப்பாவின் குடும்பமும் பொன்னம்பலத்தின் குடும்பமும் மலேசியாவில்தான் இருந்தனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தலைவர் காங்கேசர் பொன்னம்பலம் 1956ஆண்டு மலேசியாவுக்கு குடிபெயர்ந்து அங்கு சட்ட தொழில் புரிந்து ரப்பர் தோட்டங்களை வாங்கி மலேசிய பிரஜை ஆனவர்.

எங்கள் தேசியத் தலைவர் பற்றி ஒரு சிறு குறிப்பு:
பஸ்தியாம்பிள்ளை கொலை நடந்த போது கதிர்காமபிள்ளை நல்லைநாதன் (உமா, முகுந்தன்) , செல்லப்பா நாகராஜா, இருவரும் மரத்தில் மேல் சென்றிக்கு நின்றவர்கள். சதாசிவம் செல்வநாயகம்(செல்லகிளி)தான் மிசின்கண்ணை டக்கென்று எடுத்து திடீர் தாக்குகள் செய்தவர். இன்ஸ்பெக்டர் பேரம்பலம் கிணத்தடியில் வைத்து கொல்லப்பட்டார் கார் சாரதி தப்பி ஓடும்போது ஒழுங்கைக்குள் வைத்து கொல்லப்பட்டார்.
பஸ்தியாம்பிள்ளை எதுவித துப்பும்மிலாமல் அந்த இடத்துக்கு வந்தே இருக்க முடியாது என்பது அந்த பிரதேசத்தை நன்கு தெரிந்தவர்கள் தெளிவாக புரிவார்கள். பிரபாகரன் பஸ்தியாம்பிள்ளை வர முன்னரே அன்று காலை வெளியில் போய் விட்டார்.
இதே மாதிரி தங்கதுரை குட்டிமணி தேவன் ஆகியோருக்கு மணல்காட்டில் இந்த இடத்தில் இத்தனை மணிக்கு காத்திருங்கள் இந்தியா போக வள்ளத்துடன் வாறன் என்று சொன்ன பிரபாகரன் வள்ளமும் அனுப்பவில்லை தானும் வரவில்லை போலீஸ்தான் கால்நடையாக வந்து மூவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அநியாயம் செய்தவர்கள் எல்லாம் எம் கண் முன்னே அவலமாக செத்ததை காண்கிறோம்.

Thanks

http://www.thesamnet.co.uk

Advertisements

சாதியும் மனநோயும்
1

நீண்ட காலத்திற்கு பின்னர் எனது சொந்த ஊரான தம்பலகாமம் புதுக் குடியிருப்பிற்கு போயிருந்த சந்தர்ப்பத்தில்தான் அதனை அவதானித்தேன். பொதுவாக என்னிடம் ஒரு பழக்கமிருக்கின்றது. ஒரு இடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிட்டால் மீண்டும் பழைய இடத்திற்கு செல்வதில் எனக்கு நாட்டமிருப்பதில்லை. நான் இது வரைக்கும் மூன்று வாடகை வீடுகளுக்கு மாறிவிட்டேன். ஒரு நாள் கூட முன்னர் இருந்த வீடுகளுக்கு சென்றதில்லை. அப்படித்தான் நான் எனது சிறு பராயம் முழுவதையும் கழித்த ஊரான புதுக்குடியிருப்பிலிருந்து நகரத்திற்கு குடிபெயர்ந்த பின்னர் அங்கு செல்வதில் எனக்கு எப்போதுமே விருப்பம் ஏற்பட்டதில்லை. ஆனாலும் எனது அம்மம்மா அங்கேயே வசித்து வந்ததால் அவ்வப்போது போய் வந்துகொண்டிருந்தேன். அவ எனது அம்மம்மா என்றாலும் நான் அவவை அம்மா என்றுதான் அழைப்பதுண்டு. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் ஈழத்திலிருந்து வெளியேறிய பின்னர் ஏற்பட்ட மோதல் காலத்தில் சொந்த ஊரிலிருந்து கிண்ணியாவிற்கு இடம்பெயர வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் கோழி தன் குஞ்சை பாதுகாப்பது போன்று என்னை பேணிய மனுசி. இறுதியில் நீண்ட நாட்களுக்கு பின்னர் அவரது இறப்பிற்குத்தான் போயிருந்தேன். இன்றும் அந்த சம்பவம் எனக்குள் ஒரு குற்ற உணர்வாக உறைந்து கிடக்கின்றது.

கிராமத்தில் மரணம் என்றால் அது ஒரு கிராம உறவின் குறியீடாக இருக்கும். மஹாகவி சொன்ன ஊர் கூடி தேர் இழுப்பது போன்றது. அயலவர்கள், உறவினர்கள் என்ற பேதமில்லாமல் ஒரு நெருக்கம் நிலவும். அன்றும் அப்படித்தான் நிலவியது. மரண ஊர்வலம், அடக்கம் எல்லாம் முடிந்துவிட்டது. எட்டுவீடு வரை முத்தம்மா ஆச்சி பற்றி அள்ளயலில் உள்ளவர்களின் பேச்சாக பொழுதுகள் கழிந்தன. அம்மம்மாவின் பெயர் அதுதான். அன்று எட்டு, வருவார்கள் என்று எதிர்பார்த்தவர்கள் எல்லோரும் வந்து போயாகிவிட்டது. முன் வீட்டிலிருந்து மட்டும் எவரும் வரவில்லை. பின்னர் விசாரித்து பார்த்ததில் அவர்கள் ஏன்வரவில்லை என்று தெரியவந்தது. பின்வீட்டு மாரியாச்சி சமைத்ததுதான் அவர்களது பிரச்சனை.

2

மாரியாச்சியை எனக்கு சின்ன வயதிலிருந்து தெரியும். அவரை கடைசியாக அப்போது பார்த்ததுதான் அதற்கு பிறகு ஒரு நாளும் பார்க்கக் கிடைக்கவில்லை. சின்னவயதில் என்னை கண்டால் என்ட குஞ்சு என்று வாரி அணைத்துக் கொள்வது இப்போதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்றும் அப்படித்தான் நீண்ட நாட்களுக்கு பின்னர் கண்டதும் எனது கையைப்பிடித்துக் கொண்டு மகன் எப்படி இருக்கிங்கிங்க என்று உருக்கமாக விசாரித்தார். எனக்கு சாதிகள் பற்றி பெரிய அறிவில்லை ஆனால் இதில் கலாநிதிப் பட்டம் முடித்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று பின்னர்தான் தெரிந்து கொண்டேன். ஆனால் கிராமத்தில் வாய்ச்சண்டைகளின் போதெல்லாம் சில வார்தைகள் சர்வசாதாரணமாக வந்து விழுவதை கேட்டிருக்கிறேன். டே பறப்பயலே, வண்ணாரப் பயலே, எடே பள் புனா என்றெல்லாம் வார்தைகள் போதியளவிற்கு உலவிய கிராமம்தான் எனது கிராமம். ஆனாலும் அப்போது அதன் தார்ப்பரியங்கள் எல்லாம் எனக்கு தெரியாது. ஏன் இப்போதும் கூட அது எனக்கு அதிகம் விளங்குவாதாயில்லை. நான் படித்த விஞ்ஞானவாத கோட்பாடுகள் எதுவும் எனக்கு அதன் சூட்சுமங்களை விளக்கவில்லை. நான் குறிப்பிட்ட மாரியாச்சி பறையர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்ததால் முன்வீட்டு வெள்ளாளர், பறைச்சி சமைத்ததை உண்பது தங்களுக்கு இழுக்கென்பதால்தான் எட்டு வீட்டை பகிஸ்கரித்ததாக கதைத்துக் கொண்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த வெள்ளாளன் அவனது தமையன் இறந்ததும் தனது அண்ணியுடன் பற்றைகாட்டிற்குள் உரிஞ்சிபோட்டு கிடந்ததை சிலர் பார்த்ததாக பேசிக் கொண்டதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.. சிலவேளை அதுதான் வெள்ளாள ஒழுக்கமோ என்னவோ யாருக்குத் தெரியும். அவனது தமையனை ஒரு விடுதலை இயக்கமே கொன்றதாகச் சொல்வார்கள். அது விடுதலைப்புலிகள் என்றே காதுவாக்கில் விழுந்தது. அவர்களோடு பழகிவிட்டு பின்னர் அதனை பொலிசுக்கு சொல்லிக் கொடுத்ததால் அவர்கள் போட்டனர்.அப்போது நான் மிகவும் சிறியவனாக இருந்தால் அது பற்றியெல்லாம் துருவி ஆராய முடியாமல் போய்விட்டது. போட்டனர், போட்டுதள்ளுதல் என்ற புதிய சொற்களெல்லாம் நமது உருவாக்கங்கள்தான். நம்மால் மொழியியல் கொஞ்சம் விருத்தியடைந்துள்ளது

3

பின்னர் இது பற்றி விசாரித்தபோது எனது தலைமுறையில் எனது அம்மம்மாவின் தாயாரிடம் இப்படியான மனநோய் இருந்ததாகச் சொன்னார்கள். அவர் அயல்வீட்டு சின்னத்தம்பி வளவாரை தண்ணி அள்ள விடுவதில்லையாம். இறுதியில் அந்த மனுசிக்கே தன்னி கொடுக்க யாரும் இல்லாமல் போனதுதான் கதை.

இன்று சாதி பற்றி எத்தனையோ எழுத்துக்கள் வெளிவருகின்றன. இது ஒரு தமிழ் சாபக்கேடாகவே போய்விட்டது. கவிஞர் சுபத்திரன் சாதி பார்க்கும் தமிழன் ஒரு பாதித் தமிழனடா என்பார். ஆனால் என்னைப் பொருத்தவரையில் அவன் பாதித் தமிழனல்ல நோய்த் தமிழன். அவனுக்கு தட்டிவிட்டது. மனநோய் முற்றிப் போனவர்களை காப்பாற்றும் முயற்சி விழலுக்கு இறைத்த நீருக்கு ஒப்பானது. ஆரம்பநிலையில் உள்ளவர்களை ஒரு வழிக்கு கொண்டுவரலாம். முற்றிப்போனவர்களை என்னசெய்வது? வேண்டுமானால் மர்குணியிசத்தை பயன்படுத்தி பூண்டோடு ஒழித்துவிடலாம். காரல் மார்க்சின் சமகாலத்தவரான மர்குணி போராடுவதன் மூலம் மாற்றங்களை கொண்டுவர முடியுமென்ற மார்க்சின் வாதத்தை நிராகரித்து இருக்கும் சமூகத்தை சுவடுகள் இல்லாதளவிற்கு பூண்டோடு அழித்தொழிக்கும் வாதத்தை முன்வைத்தார். அனார்க்ஸ்சி~ வாதம் என்று அழைக்கப்படும் இவ்வாதம், இன்றும் சில குழுக்கள் மத்தியில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது.

தமிழ் சமூகத்தைப் பொருத்தவரையில் சாதி என்பது ஒரு சந்ததிவழி பரவும் மனநோயாகிவிட்டது. நிட்சயமாக இது ஒரு நோய்க் கூறுதான். நாங்கள் உயர்சாதி என்று சிலர் சொல்லுவது எப்படியொரு மனநோயோ, அப்படியே தங்களை கீழ் சாதி என சிலர் நினைத்துக் கொள்வதும் மனநோய்தான். காலமாற்றத்தை விளங்கிக் கொள்ளக் கூடியவர்கள் இந்த நோயிலிருந்து விடுபட்டு சமுதாயத்தின் வளர்ச்சி குறித்து சிந்திக்க, நோய்க் கூறுள்ளவர்களோ ஒரு தலைமுறையே பாழ்படுத்தும் அவலத்தின் சொந்தக்காரர்களாக இருக்கின்றனர். ஆனாலும் கால மாற்றம் நோயாளர்களை ஒரு ஓரமாக தள்ளிவிட்டு தேவையானவர்களுடன் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 1830ஆம் ஆண்டு யாழ்பாணத்தில் நளவர்கள் என்று கருதப்படும் மக்கள் பிரிவினர் காதில் தோடு அணிய வேண்டுமானால் கிராமிய வேளாள தலைமையிடம் அனுமதி பெறவேண்டுமாம். இன்று போய்ச் சொல்லிப்பாருங்கள் செருப்பால் அடிப்பார்கள். மாற்றங்கள் மட்டுமே நிரந்தரமானது.

மு.நித்தியானந்தன்

„மப்பின்றிக் கால மழை காணா மண்ணிலே
சப்பாதி முள்ளும் சரியாய் விளையாது
ஏர் ஏறாது காளை இழுக்காது
எனினுமந்தப்
பாறைபிளந்து பயன் விளைப்பான் என்னூரான்“

என்று மகாகவி பாறை பிளந்து பயன் விளைவிக்கும் யாழ்ப்பாணத்து விவசாயியை வியந்து கவிதை வடித்தது உண்மைதான். ஆனால் கடும் பாறையை விட யாழ்மண்ணில் இறுகி வேரோடிப்போன சாதிய உணர்வினை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியாக ஆட்சி நடாத்திய ஐரோப்பிய அரசுகளாலும்கூட அசைக்கமுடியவில்லை. மாறாக யாழ்ப்பாண சமூகத்தில் மேலாண்மை செலுத்திய சாதியினர் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியைப் பயன்படுத்தி மேலும் தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதை சரித்திரம் சொல்கிறது.

பிரித்தானியப் பேரரசின் இலங்கையின் முதல் ஆளுநராகப் பதவியேற்ற பிறெடறிக் நோர்த், யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிய அமைப்பினை தங்களின் நிர்வாகத்திற்கு வசதியானதெனக் கருதி சாதியமைப்பினை அனுசரித்துச் செல்லும் போக்கினைக் காண்கிறோம்.

யாழ்ப்பாணத்தின் கிராமிய மட்ட சமூகத் தலைமைத்துவம் சாதி வெள்ளாளர்களின் கைகளிலேயே இருந்தது. யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சாதியமைப்பினை ஆதாரமாகக் கொண்டுதான் இப்பிரதேசத்தின் சமூகப் பொருளாதர நடவடிக்கைகளும் சமூக உற்பத்தி உறவுகளும் அமைந்தன. சாதி, சமூகஅமைப்பின் மேற்கட்டுமானமாக அல்ல, அதுவே அடித்தளமாகவும் செயற்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தின் பொருளாதாரச் சமூகத்தளம் சாதியினால் வடிவமைக்கப்பட்டு, வெள்ளாள மேலாண்மையால் நிர்வகிக்கப்பட்டு வந்திருக்கிறது. உயர் குடிப்பிறப்பும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் இழிவுபடுத்தப்படுதலும் யாழ்மண்ணில் தோய்ந்துபோனவை. யாழ்ப்பாணத்தின் அரும்பெரும் சுதந்திரவீரனாக போற்றப்படும் சங்கிலி தனக்கேற்பட்ட ‚வைப்பாட்டி மகன்’ என்ற இழிவினை நீக்க, தன் மூத்த சகோதரர்களை அழித்துத்தான் அரசகட்டிலேறுகிறான். இந்தச் சாதியப் பெருமைகளும் இழிவுகளும் பிரித்தானியர் ஆட்சியிலும் தொடர்ந்தன.

1806ஆம் ஆண்டு அரசு நிறைவேற்றிய 10ஆவது இலக்கக் கட்டளைச்சட்டம் உயர்சாதியினருக்கு வழங்கப்படவேண்டிய மரியாதைகள் தொடர்ந்து வழங்கப்படவேண்டும் என்பதைச் சட்டபூர்வமாக அறிக்கையிட்டது. பிரிட்டிஷ் ஆட்சி அதன் ஆரம்பக்கட்டத்திலேயே சாதியமைப்புப் பாரம்பரியத்தை வலியுறுத்திப்பேண முயன்றிருப்பதை இது குறித்து நிற்கிறது.

அஞ்ஞான இருளில் மூழ்கிக்கிடந்த நாடுகளிடையே அறிவியக்க ஒளிபாய்ச்ச வந்ததாகக்கூறும் ஆங்கிலேய அரசு வலியுறுத்திய சமூக ஒழுங்கு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு மற்றும் நீதி போன்ற அம்சங்களும் யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிய அமைப்பு, பழமையான சமூக ஒழுங்கு முறைமை, சமூகத்தின் மீதான அதிகாரக் கட்டமைப்பு, சமூக ஸ்திரப்பாடு என்பவற்றுக்கும் இடையில் முரண்பாடுகள் எழுந்தபோது இவர்களால் சமூக நீதியின் பேரில் தீர்க்கமான நிலைப்பாட்டினை எடுத்துக் கொள்ளமுடியவில்லை.

யாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பின் தளத்தில் இருந்து சிக்கல்கள் தோன்றியபோதெல்லாம் சமூக நீதியின் அடிப்படையில் அல்லாமல் சமூகத்தில் நிலவும் ‚அமைதிக்கு’க் குந்தகம் ஏற்படாதவகையில் யாழ்ப்பாணத்தில் வேரூன்றி நின்ற பழைய அதிகாரப் படிமுறையைத் தக்க வைத்துக்கொள்ளுதலே உகந்தது என்ற ரீதியிலேயே ஆங்கிலேயரின் கொள்கை உருவாக்கம் அமைந்தது.

குடியேற்ற நாட்டுச் செயலாளரும் வரலாற்றாசிரியருமான எமர்சன் டெனண்ட்(Emerson Tennen) யாழ்ப்பாணச் சாதியமைப்பின் கொடூரத்தைப் பார்த்துத் திகைத்துப் போனார் என்றாலும் அரசின் கடந்த கால அநுபவங்களைக் கொண்டு பார்க்கின்றபொழுது சாதியமைப்பின் மீது நேரடியாகத் தலையிடுவதைத் தவிர்த்துக் கொள்வதே உசிதமானது என்று கருதினார். ஆங்கிலேய அரசு கைக்கொண்ட தலையிடாக் கொள்கையை யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பைப்பொறுத்தும் உறுதியாகக் கடைப்பிடிப்பது அவர்களுக்கு வசதியாயிற்று. இந்தச் சாதியமைப்பின் கோரத்தாண்டவத்தைக் காலம்தான் மாற்றியமைக்கும் என்றும் பகுத்தறிவு படிப்படியாக வளரும் போது இது தணிந்து போகும் என்றும் டெனண்ட் எழுதினார்.

நிலமானிய அமைப்பில் போல அரசுக்கு நேரடியாகச் சரீர ஊழியம் போன்ற கடமைப்பாடுகள் தாழ்த்தப்பட்ட சாதியினர் செலுத்தத் தேவையில்லை என்று 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய அரசு கொணர்ந்த சட்டம் குறிப்பிடத்தக்கது. எனினும் சாதியமைப்பின் வேரோட்டத்தை அதனால் எதுவும் செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணத்தின் முதல் ஆங்கிலேயக் கலெக்டராகவும் பின் அரசாங்க அதிபராகவும் கிட்டத்தட்ட நாற்பதுஆண்டுகள் (1829-1867) வடமாகாணத்தில் பணிபுரிந்த பெர்சிவல் ஏக்லண்ட் டைக்(Percival Ackand Dyke) வகுத்ததுதான் யாழ்ப்பாணத்தில் சட்டமாய் இருந்தது.

யாழ்ப்பாணத்தின் தனிக்காட்டு ராஜாவாக (‚Raja of the North’) டைக் திகழ்ந்தார். கொழும்பில்லிருந்து பிரிட்டிஷ் நிர்வாகத்தின் தொலைதூர எல்லையில் தனது ராஜாங்கத்தை எந்தத் தடையுமின்றி நடத்தி வந்தார். கடுமையான கண்டிப்புமிக்க பெர்சிவல் டைக், தன் காலத்திலும் யாழ் சாதியமைப்பிலிருந்து எழுந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியிருந்ததது.

1830இல் நளவர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் காதிலே தோடு அணிந்ததை வெள்ளாளர்கள் எதிர்த்தனர். கிராமியத் தலமைப்பீடம் வெள்ளாளர் கைகளிலே இருந்ததால் இம்மாதிரி நகை அணிகளை இனிமேல் நளவர்கள் யாரும் அணியக்கூடாதென்று அறிவுறுத்தப்பட்டதோடு, பாரம்பரியப் பழக்கவழக்கத்தை மீறியதற்குத் தண்டமும் விதித்தார்கள். சமத்துவத்தைப் போதிக்கும் அரசு, சாதிரீதியான இந்தப் பாரபட்சத்தையும் கொடுமையையும் அனுமதிப்பது சாத்தியமாயிருந்தது. அதேசமயத்தில் இத்தகைய சாதியமைப்புச் சார்ந்த நடவடிக்கைகளுக்கு முடிவுகாணவும் முயலவில்லை. காதில் காதணிகளை அணிந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனையை டைக் நீக்கினார். பாரம்பரிய மரபுகளில் தலையிடுவதில் அவதானமாக இருக்கவேண்டும் என்ற ஆட்சிநடத்தும் ஜாக்கிரதை உணர்வில் இது போன்ற பிரச்சினைகளை இனிமேல் ஏற்படுத்தவேண்டாம் என்று தனது கீழ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் கூறியதோடு நின்றுவிட்டார்.

மீண்டும் ஒரு சாதி அடிப்படையிலான பிரச்சினைய டைக் எதிர்கொள்ள நேர்ந்தது. யானை ஏற்றுமதி செய்வதற்கான துறை மேடையை அமைப்பதற்காக பனை மரத்தைக் காவிச் செல்லுமாறு திமிலர் இனத்தவர்களைக் கிராம மணியகாறர் பணித்திருக்கிறார்.
திமிலர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மணியகாறர் கட்டளைக்குப் பணிய மறுத்திருக்கிறார்கள். இத்தகைய பொதுப்பணிகளின்போது இவ்வாறு தாழ்த்தப்பட்ட சமூகத்திடமிருந்து சேவைகளைப் பெறுவது, பாரம்பரியமாக நடந்துவருவதுதானென்று மணியகாரர் தெரிவித்தார். திமிலர் இனத்தவர்களின் முறைப்பாடு தம்முன்வந்தபோது அதனைப்பரிசீலனை செய்த டைக் மணியகாரரின் நடவடிக்கை அரசாங்கத்தின் கட்டளையை மீறும் செயலே என்று கருதி பனைமரம் காவிச்சென்றதற்கான கூலியை அவர்களுக்கு மணியகாரர் தனது சொந்தப்பணத்திலிருந்தே செலுத்தவேண்டும் என்று கட்டளையிட்டார். யாழ்ப்பாணதில் கடமைக்காகத் தான் வெளியிடங்களுக்குப் போகும்போது சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களின் ஊழியத்தை இலவசமாகப் பெற்றுத் தங்குமிடங்கள் அமைத்தல் மற்றும் ஏனைய பணிகளைச் செய்யும் நடவடிக்கைகளுக்கு டைக் முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால் யாழ்ப்பாண சமூகத்தில் வேரோடிப்போன சாதியமைப்பின் அகங்காரம் அவ்வளவு லேசாக அடங்கிவிடுவதில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் பரம்பரைபரம்பரையாக வழங்கிவந்த மரியாதைகளையும் கௌரவங்களையும் தங்களுக்கு வழங்குகிறார்களில்லை என்று 1831இல் அப்போது கலெக்டராக இருந்த டைக்குக்கு பெட்டிசன் அனுப்பியிருந்தார்கள். சாதியடிப்படையிலான இந்தக் கோரிக்கையை பெர்சிவல் டைக் கோட்பாட்டு அளவில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அந்த நிலைப்பாட்டை அவர் பூரணமாக நிராகரித்து விடவில்லை. நிர்வாகத்தைக் கொண்டு நடத்த சாதிவெள்ளாளர்களின் மணியகாரர் தலைமைத்துவம் அரசுக்கு அவசியமாயிருந்தது. எனவே டைக் இந்த வெள்ளாளத் தலைமையினரின் முறைப்பாட்டை நேரே கவர்னருக்குத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.
ஆட்சி நிர்வாகத்தில் தங்களுத் துணையாயிருக்கும் கிராமிய வெள்ளாளத் தலைமைத்துவம் உரிய மரியாதையோடும் தனித்துவத்தோடும் பேணப்படவேண்டுமென்பதில் அரசு அக்கறைகாட்டியிருக்கின்றது. பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்பக் கட்டத்தில் யாழ்ப்பாணத்துக் கச்சேரிகளின் வராந்தாவில் தரையில்தான் வெள்ளாள மணியகாரர்கள் உட்கார்ந்திருக்கவேண்டியதாயிற்று. இது ஏனைய தாழ்த்தப்பட்ட மக்களின்முன் தங்களுக்கு அவமரியாதையானது என்று சாதிவெள்ளாளர்கள் முன்வைத்த கோரிக்கையினை டைக் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு இருக்கைகள் வழங்க அனுமதித்திருக்கிறார்.
பொதுக் கிணறுகளில் எல்லா சாதியினரும் தண்ணீர் அள்ளுவதால் கிணறு ‚தீட்டுப்பட்டு’ தாங்கள் அத் தண்ணீரைக் குடிக்கமுடியாதென்று வெள்ளாளர்கள் கோரியதையேற்று அவர்களது அந்தஸ்தை நிலைநிறுத்த அவர்களுக்கென்று தனியே கிணறு வெட்டிக்கொடுக்கவும் டைக் ஏற்பாடுசெய்தார். அரசாங்க ஊழியர்களின் சுய கௌரவத்தை உயர்த்துவது அரசின் தொடர்ந்த ஆசை என்று கூறிய டைக் அவர்கள் விசேடமாகவும் தனி மரியாதையுடனும் நடத்தப்படவேண்டுமென்று கோருவது நியாயமென்று கருதினார்.
1849 மார்ச் மாதம் பருத்தித்துறை-புலோலியில் தட்டார் சமூகத்தவர்கள் சாதிவெள்ளாளர்களுக்கு எதிரான முறைப்பாட்டை அரசிடம் கையளித்தபோது கவர்னர் இப்பிரச்சினையை விசாரித்து அதனைத் தீர்த்து வைக்குமாறு யாழ்ப்பாண அரசாங்க அதிபரான டைக்கைக் கேட்டிருந்தபோது அவர் அந்த விசாரணையைச் சாதுரியமாகத் தவிர்த்துக்கொள்ளவே விரும்பினார். சாதியைப் பகிரங்கமாக அங்கீகரிக்கும் நிலையைக் கவனமாகத் தவிர்க்குமாறு விதிக்கப்படிருக்கும் அறிவுறுத்தல்களுக்கமைய இந்த முறைப்பாடும் சாதியடிப்படையில் எழுந்திருந்ததால் இதனை விசாரிக்க முற்படுவது அவசியந்தானா என்ற பாணியில் டைக்கின் பதில் அமைந்தது. தட்டார் சமூகத்தவர்கள் தங்களின் மணியகாரரான வெள்ளாளர் தமக்கு அநீதியாக நடப்பதால் தமது சொந்தச்சாதியிலிருந்தே தலைமைக்காரரைத் தெரிவுசெய்யுமாறு கோரியிருந்தனர். வண்ணார் மற்றும் முடிதிருத்துவோரிடமிருந்தும் வெள்ளாளருக்கெதிரான முறைப்பாடுகள் அரசாங்க அதிபரிடம் வந்தவண்ணம் இருந்தன.
யாழ்ப்பாணத்தில் சாதிச்சண்டைகள் தொடர்ச்சியாக சகல இடங்களிலும் நடந்துகொண்டிருந்தன. இத்தகைய சந்தர்ப்பங்களில் சமூக நீதி காக்கவேண்டிய நிர்வாகம் சாதுர்யமாக ஒதுங்கிக் கொண்டது. சாதிப்பிரச்சனைகள் வன்முறையில் முடிந்தபோது அவை குற்றவியல் பிரச்சனைகளாகி நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு விடப்பட்டன. ஊர்காவற்துறையில் ஒரு பிணத்தைப் புதைப்பது தொடர்பாக கத்தோலிக்கர்களின் மத்தியில் சாதிசார்ந்து பிரச்சினை எழுந்தபோது உள்ளூர்வாசிகளின் சடங்காசாரங்களில் அரசு தலையிட விரும்பவில்லையென்று அரசு பிரச்சனையைக் கைகழுவி விட்டது. நீதிமன்றத்திற்தான் நியாயம் கோரவேண்டுமென்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
Entrance to old Dutch Fort at Jaffna, Ceylon. Feb. 20, 1924. W.A.Sawyer in rickshaw

தச்சுத்தொழிலாளி ஒருவர் தனது மகளுடைய திருமணத்திற்குப் பந்தல் போட்டு வெள்ளைத்துணியால் அலங்காரம் செய்திருந்தார். வெள்ளாளர்கள் அதை எதிர்த்துப் பந்தலைக் கலைத்து திருமணத்தைக் குலைக்க முயன்றனர் . அரசிற்கு இது முறைப்பாடு செய்யப்பட்டபோது அரசின் உதவி அதிகாரி திருமணத்திற்கு நேரேசென்று அங்கு குழப்பம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியதாயிற்று.
கொள்கை ரீதியாக அரசாங்கம் சாதிப்பாகுபாடை அங்கீகரிக்கவில்லையென்றாலும் அதனை உறுதியாக நடைமுறையில் எதிர்க்கவில்லை. சாதி ஒடுக்குமுறையோடு அது சமரசம் செய்து கொண்டது. பிரஸ்தாப இந்த நிகழ்ச்சியிலும் இதற்குப் பின் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பந்தல்களில் வெள்ளைத் துணியால் அலங்காரஞ் செய்ய விசேட பத்திரங்களில் வெள்ளாளத் தலைமைக்காரர்களிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டியிருந்தது. வெள்ளார்கள் அனுமதி பெறவேண்டாத அர்களுக்கே உரித்தான விசேட உரிமையாக அது அமைந்தது.
1864 இல் நல்லூரில் நொத்தாரிஸாக தட்டார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமித்த போதும் வெள்ளாளர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு உருவானது.

அரசாங்க அதிபர் பெர்சிவல் டைக் தன் ஆட்சிக்காலத்தில் தனது அதிகாரத்திற்குச் சிறிய அச்சுறுத்தலாக எது வந்தாலும் அதனை நிர்த்தாட்சண்ணியமாக எதிர்த்து வந்திருக்கிறார். ‚பிரமச்சாரியாக’ அவர் கூறப்பட்டாலும் யாழ்ப்பாணத்தில் ஒரு பெண்ணுடன் அவருக்குத் ‚தொடுப்பு’ இருந்திருக்கிறது. கோப்பாயில் மரணமான டைக் யாழ்ப்பாணத்தை விரும்பி அங்கு பதவி வகித்துவந்திருக்கிறார் என்பதைக் குறிப்பிடவே வேண்டும்.
கிறிஸ்தவ மிஷனரிகள் கல்விப் போதனைகளில் ஈடுபடுவதையும் யாழ்ப்பாண சமூகத்தின் சாதி அமைப்புகளைத் தகர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் டைக் விரும்பவில்லை. இந்த மிஷனரிகளைத் தனது அதிகாரத்துக்குச் சவாலாக டைக் கருதினார். அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் அனாவசியத் தலையீடு மேற்கொள்பவர்களாக அவர்களை நினைத்தார். சென். ஜோண்ஸ் கல்லூரியினைக்கூட அவர் ஒரு இடையூறாகவே கருதினார். சென். ஜோண்ஸ் கல்லூரி அதிபரை அவர் பலமுறை சந்திக்க மறுத்திருக்கிறார். வேலை காலி இடங்களுக்கு தங்கள் கல்லூரி மாணவர்களை சென். ஜோண்ஸ் கல்லூரி அதிபர் டைக்குக்குச் சிபாரிசு செய்தபோது அவர் அதனை ஒருபோதுமே கருத்தில் கொண்டதில்லை.
19ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய கிறிஸ்தவ மிஷனரிகளும் அங்கு ஆழ வேரோடியிருந்த சாதி அமைப்பினை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்னையில் வெஸ்லியன் மெதடிஸ்ற் கல்லூரியில் வண்ணார் இனத்தைச் சேர்ந்த பையனை அனுமதித்ததற்காக வெள்ளாளர்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அப் பையனைப் பாடசலையிலிருந்து வெளியேற்றவேண்டியதாயிற்று. மீண்டும் 1847இல் இப்பாடசாலையில் நளவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையன் அனுமதிக்கப்பட்டபோது வெள்ளாளர்கள் எதிர்த்தபோது பள்ளிநிர்வாகம் அதற்கு இணங்கவில்லை. இதனைச் சகிக்கமுடியாத வெள்ளாளப் பெற்றோர் தமது பிள்ளைகளைப் பாடசாலையிலிருந்து நீக்கிக்கொண்டனர்.
இந்தப் பாடசாலை அனுமதிப் பிரச்சினைகள் பற்றி ஆறுமுகநாவலர் பின்வருமாறு எழுதுகிறார்: வண்ணார்பண்ணையிலுள்ள வெஸ்லியன் மிஷன் இங்கிலீசுப்பள்ளிக்கூடத்தில் ஒரு வண்ணாரப்பையன் மூன்று நான்கு வருஷம் படித்தவன். இவ்வருஷத்திலே மற்றப் பிள்ளைகள் ‚இவ்வண்ணானை எங்களோடிருத்திப் படிப்பிக்கின் நாங்கள் இப்பள்ளிக்கூடத்தை விட்டுவிடுவோம்’ என்றார்கள். அதுபற்றி முதலுபாத்தியார் தாங் கிறிஸ்தவராயிருந்தும், வண்ணானைத் தள்ளிவிட்டார். வண்ணான் பறங்கித் தெருவில் இருக்கிற வெஸ்லியன் பாதிரியிடத்தே போய், தனக்கு கிறிஸ்து மதமே சம்மதமென்றும், தனக்கு ஞானஸ்நானம் செய்து தன்னை அங்குள்ள வெஸ்லியன் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டான். பாதிரியார் தாம் அதற்கு உடன்பட்டும், அவனைச் சேர்த்துக்கொள்ளுமபடி தமக்குக் கவர்மெண்ட் ஏசண்டு எழுதிய கடிதம் பெற்றும், அப்பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும் சுதேச குருமாரும் உபாத்தியாயர்களும் உடன்படாமையால், வண்ணானைச் சிலகாலம் அடிக்கடி அலைத்துப் பின் ஓட்டிவிட்டார். அவன் இப்போது நெடுந்தூரத்திலுள்ள கத்தோலிக்கப் பள்ளிக்கூடத்திலே படிக்கிறான்.
‚அப்பள்ளிக்கூடத்திற்றானே 1847ஆம் வருடம் ஒரு நளப்பையன் படித்தலைக்கண்டு ஏறக்குறைய ஐம்பது பிள்ளைகள் ஓட்டமெடுக்கவும் அந் நளப்பையனைத் தள்ளாத பாதிரியாரைப் பித்தரென்று நினைத்தரோ! நளவனிலும் தாழ்ந்தசாதி வண்ணானென்று கொண்டாரோ! சாதி வேற்றுமை பாராட்டுதல் கிறிஸ்து நாதருக்குஞ் சம்மதமென்று விவிலிய நூலில் எங்கேயாயினும் இப்போது கண்டாரோ? வண்ணானுடைய ஆன்மா பரமண்டலத்தில் இடம்பெறாதென்று தேவதூதன் சொப்பனத்தில் வந்து சொல்லக்கேட்டாரோ! தேவவாக்கினும் பெரிது தம்மைச் சேவிக்குஞ் சுதேச குருமார், உபாத்தியாயர்கள் வாக்கென்று தெளிந்தாரோ! வண்ணானைப் பற்றி மற்றப் பிள்ளைகளெல்லாம் ஓடிவிட்டால், அவர்கள் இருக்குஞ் சம்பளத்தினாலும் அவர்கள் பொருட்டுக் கவர்மெண்டார் உதவும் பணத்தினாலும் தமது பை நிரம்பாதேயென்று பயந்து விட்டாரோ! யாழ்ப்பாணத்திலே சாதி வேற்றுமை அறுத்துக் கிறிஸ்து மதத்தை நிலைநாட்ட வல்லவர்கள் பொருள்வாஞ்சைப் பிசாசா வேசிகளாகிய இந்தப் பாதிரிமாரும் சுதேச குருமாரும் தானோ! சபாசு! சபாசு!’

ஆறுமுகநாவலரின் இந்த நீண்ட குறிப்பு யாழ்ப்பாணத்தில் அன்று ஆழ்ந்து வேரூன்றி நின்ற சாதிவெறித் தனத்திற்கு அச்சொட்டான சாட்சியாக அமைகிறது. இவ்வளவு அழுத்தந் திருத்தமான – இறுகிப்போன சாதி அமைப்பின் பின்னணியிலே கிறிஸ்தவ மிஷனரிகள் இயங்க நேர்ந்தன. இருப்பினும் மிஷனரிமாரின் கல்வித் திட்டம் யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதியமைப்பின் கோட்டைகளில் பெரும் துளைகளை ஏற்படுத்தவே செய்தது. சாதியமைப்பினால் வட்டுக்கோட்டை செமினரியில் ஆரம்பகாலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளைப் பற்றி டெனன்ட் தனது ‚Christinanity in Ceylon’ என்ற நூலிலே குறிப்பிடுகிறார்.

மிஷனரிமார் தமது மதப்பரம்பலுக்குத் தடையாகச் சாதியமைப்பு நிலவுவதாகவே அதனை நோக்கினர். இக்காலகட்டத்தில் இலங்கையில் பணிபுரிந்த மிஷன்ரிமாரின் கடிதங்களிலும் அவர்கள் வெளியிட்ட சஞ்சிகைகளிலும் சாதி பற்றிய குறிப்புக்கள் வரும்போதெல்லாம் அது மதமாற்றத்திற்கு எவ்வாறு தடையாக அமைகிறது என்ற நோக்கத்தில் மட்டுமே பார்க்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
சாதியமைப்பிற்கு எதிராக சமயம்பரப்பலில் ஈடுபட்ட கிறிஸ்தவசமயமும் யாழ்ப்பாணத்தின் சாதியக்கொடூரத்தின் முன் சரணாகதியடைய நேர்ந்தமை இந்தச் சோக நாடகத்தின் மற்றுமொரு விரிவான கதை.

1871இல் மிஷனரிமாரின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆறுமுகநாவலர் சைவபரிபாலனசபையை நிறுவினார். அவர் நிறுவிய பாடசலையிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகள் அனுமதிக்கப்படவேயில்லை. சைவ பரிலபாலனசபை ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டில்தான் 1871இல் மாவிட்டபுரத்தில் சாதிக்கலவரங்கள் வெடித்தன. வெள்ளாளர், வண்ணார், அம்பட்டர், ஆகியோருக்கிடையில் சாதிமோதல்கள் எழுந்தன. அம்பட்டர்களின் உடுப்புக்களைத் தோய்க்கமுடியாது என்று வண்ணார்கள் மறுத்ததன் பின்னணியில் வெள்ளாளர்களே இருந்திருக்கிறர்கள்.

இந்தச் சாதிக் கிளர்ச்சிகள் டைக்கிற்குப் பின் பதவியேற்ற அரசாங்க அதிபர் டுவைநாம்(Twynam) காலத்திலும் தொடரவே செய்தன. இவர்களுக்கெல்லாம் பின்னால் ‚Village in the jungle’ என்ற அற்புதமான ஆங்கில நாவலை எழுதிய சிறந்த எழுத்தாளரான லெனார்ட் வூல்வ் (Leonard Woolf) யாழ்ப்பாணஹ்தில் அரசாங்க அதிபராகப் பணியாற்றினாரெனினும் அவர் யாழ்ப்பாண வெள்ளாள எதிர்ப்பின்பேரில் வெளியேறவே நேர்ந்தது. யாழ்ப்பாணக் கச்சேரியில் லெனார்ட் வூல்வ் (Leonard Woolf) பணியாற்றியபோது பிராமண வகுப்பைச் சேர்ந்த கிளாக்கர் தரையில் எச்சில் துப்பி அசுத்தப் படுத்திவிட்டதைப் பார்த்ததும் அவரையே தரையைச் சுத்தப்படுத்துமாறு பணித்துவிட்டார். தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் அவரே தரையைச் சுத்தப்படுத்தவேண்டிய நிலை அவருக்குப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாகக் கூறப்படுகின்றது. வூல்பின் இத்தகைய கண்டிப்பான நடவடிக்கைகளால் அவர் யாழ்ப்பாணத்தில் நிலைக்க முடியவில்லை. அவர் யாழ்ப்பாணத்தவர்களைப் பற்றி நல்லபடியாக ஒன்றும் தனது குறிப்புக்களில் எழுதவில்லை.

யாழ்குடாநாட்டில் வேரூன்றி நின்ற சாதியபிமானம் யாழ்ப்பாணத்தவர்கள் 19ஆம் நூற்றாண்டில் மலாயாவை நோக்கிக் குடிபெயர்ந்தபோது அதுவும் அவர்களோடு சேர்ந்து வெளிநாடுகளிலும் செழித்தது. 1861இல் கோலாலம்பூரில் ஸ்ரீபரஞ்சோதி விநாயகர் ஆலயத்தைக் கட்ட முன்நின்ற ஊரெழுவைச் சேர்ந்த டாக்டர் ஆறுமுகம் விஸ்வலிங்கம் தான் உயர் வெள்ளாளப் பழங்குடியில் வந்தவராகக் கல்வெட்டிலே பொறித்துச் சென்றிருக்கிறார்.

இந்தச் சாதிவெறி இருபதாம் நூற்றாண்டிலும் இன்னும் கோரமாகத் தலைவிரித்தாடியது. 1907இல் பொன். அருணாசலம்கூட சாதியமைப்பு அவசியமானது, நலம் பயப்பது என்று எழுதினார். 1921இல் யாழ்ப்பாணத்தில் ‚தமிழர் நாகரிகம்’ பற்றியுரையாற்றிய மறைமலை அடிகள் தமதுரையில் வெள்ளாளரின் நாகரிகம் குறித்தே பேசினார்.

1930இல் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முதல்முறை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டபோது அவர்களுடன் வெள்ளாள மாணவர்களுக்கும் சமபோசனம் வழங்குவதை எதிர்த்து சேர் பொன். இராமநாதன் கவர்னரிடம் முறையிட்டார்.
1929ஆம் ஆண்டு பாடசாலைகளில் இன, மத, சாதி, தேசிய வேறுபாடு காட்டாமல் எல்லாப் பிள்ளைகளுக்கும் சரியாசனம் கொடுக்கவேண்டுமென அரசு அறிவித்தபோது வெகுண்டெழுந்த வெள்ளாளர்கள் பதினைந்து பாடசாலைகளைத் தீக்கிரையாக்கினார்கள்.
தம் சொந்தச் சகோதரர்களையே அடக்கியும் ஒடுக்கியும் இழிவுபடுத்திய யாழ்ப்பாணச் சமூகத்தின் கொடூரத்தின் கதை அவலம் நிறைந்த, கறை படிந்த கதையாகும்.

கட்டுரையாசிரியர் மு.நித்தியானந்தன், அறியப்பட்ட இலக்கிய விமர்சகர், லண்டனில் வசிக்கின்றார்

யாழ் வேளாள குல உருவாக்கமும் அதிகாரத்துவமும்

ச.தில்லைநடேசன்

யாழ்ப்பாண சமூகத்தின் ஆதிக்க சக்தியாகக் கொள்ளப் படும் வேளாள குழுமத்தின் உருவாக்கம், ஆட்சி மாற்றங்களுக்கு ஏற்ப தமது அதிகாரத்துவத்தைத் தக்க வைக்கும் தன்மை, அதற்கான பொருளாதார, கலாச்சார, கருத்தியல் கட்டுமானங்கள் பற்றிய தேடலே இக்கட்டுரையாகும்.

யாழ்ப்பாண சமூகம் பற்றிய புறவயமான சமூகவியல் பார்வை கொண்ட ஆய்வுகள் மிகவும் குறைவு. இருப்பவைகளும் சமூக அமைப்பை விவரிக்கின்றதேயன்றி சமூக, பொருளாதார, வரலாற்று வழி நின்று சமூக உருவாக்கம் பற்றியவையோ அதன் அசைவியக்கம் பற்றியவையோ அல்ல. யாழ்ப்பாண சமூகத்தின் மையமாக கொள்ளப்படுபவர்கள் வேளாளர் என்பது ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. இந்த வேளாளர் என்பவர்கள் யார்? இவர்கள்தான் எப்போதும் மேலாதிக்க சக்தியாக இருந்தவர்களா? இவர்களின் உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது? தமது அதிகாரத்தைக் காலமாற்றங்களுக்கு ஏற்ப பேணுவதற்கு இவர்களுக்கு உதவும் கட்டுமானங்கள் எவை?

யாழ்ப்பாண வேளாளர் சமூகம் ஒரு சாதியா? இதனை மறுக்கின்றார், 1957இல் யாழ்ப்பாண சமூகத்தை ஆய்வு செய்த பேங்ஸ். வேளாளர் பகுதி என்றே இவர் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாண சமூகத்தை ஆய்வு செய்கிற எவரும் இதனை ஒப்புக் கொள்ளுவார்கள். வேளாளர் ஒரு சாதியல்ல. யாழ்ப்பாண அரசர் காலத்தில் இருந்து ஐரோப்பியர் காலத்தினூடு விவசாய நிலத்தை மையமாகக் கொண்டு உருவான குழுமம். இதில் பல சாதிகள் பங்குபற்றியுள்ளன.

வேளாளர்-வெள்ளாளர்:

தமிழக-ஈழ சூழலில் வேளாளர், வெள்ளாளர் என்ற இரு சொற்களும் வழக்கில் உண்டு. இவை இரண்டும் ஒன்றுபோல் கருதப்பட்டாலும் இரண்டு சொற்களின் தோற்றுவாயும் வெவ்வேறு மூலங்கள் கொண்டது.

வேளாளர்:

இச்சொல்லின் மூலம் ‘வேள்’ என்பதாகும். இச் சொல்லுக்கு மூலத் திராவிட மொழியில் விருப்பம், தலைமை, ஒளிவிடு என்ற பொருள் உண்டு. யாழ்ப்பாண பேரகராதி ‘வேள்’ என்ற சொல்லுக்கு மண், தலைவன் என்று பொருள் தருகின்றது.

வேள் என்பது மன்னனுக்கும் வேந்தனுக்கும் இடையிலான அதிகாரப் படிநிலைச் சொல். வேள்கள் ஐந்திணைகளில் இருந்தும் தோன்றிய குடித் தலைவர்கள் என நிறுவுகின்றார், பழந் தமிழகத்தில் அரசுருவாக்கம் பற்றி ஆய்வு செய்த சு. பூங்குன்றன் (தொல்குடிகள்). கால் நடையுத்தத்தில் வணிக மையங்களைக் கைப்பற்றும் பூசல்களில் வெற்றி பெற்றவர்கள் ‘வேள்கள்’ ஆனார்கள். ‘வேள்’ என்பது குறிப்பிட்ட அதிகாரப் படிநிலைக் குரிய சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. வேளாளருக்கும் விவசாயத்துக்கும் ஆரம்பத்தில் எதுவிதத் தொடர்பும் இல்லை என நிறுவுகின்றார் நெல்லை நெடுமாறன். தமிழகத்தைப் போல் ஈழத்திலும் இச்சொல் சமகாலத்தில் பாவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பிராமிக் கல்வெட்டுகளிலும் மட்பாண்ட சாசனங்களிலும் இச்சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இச்சொல் இலங்கையில் பாவிக்கப்படுவதற்கு இலங்கை பெருங்கற்கால மக்கள் திராவிடராக இருந்ததே காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அத்துடன் தமிழக வாணிபத் தொடர்பும் காரணமாகச் சொல்லப் படுகின்றது.

இலங்கையில் ‘வேள்’ என்ற சொல் வாணிபத் தலைவர் களுக்கு அதிகம் பாவிக்கப்பட்டாலும் அரச அதிகாரச் சொல்லா கவும் வழக்கில் இருந்துள்ளது. அரசு நிலைபெற்று வேந்தர்கள் தோன்றிய பின்பு வேள்கள் படைத்தலைவர்களாக, சமாந்தகர்களாக, வன்னிபங்கனாக மாறினார்கள். இவர்கள் போர்களில் அரசர்களுக்கு வெற்றி ஈட்டிக் கொடுத்தார்கள். வெற்றி பெற்ற புதிய நிலங்கள் இவர்களுக்கு மானியங்களாகக் கொடுக்கப் பட்டது.

வெள்ளாளர்:

தமிழ் இலக்கிய சமூகப் பார்வை நிலங்களை ஐந்திணை களாகப் பார்த்தது. இவை குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை எனக் குறிக்கப்படும். முல்லை நிலத்திலேயே பயிர்ச் செய்கை தொடங்கியபோதும் செம்மைப்படுத்தப்பட்ட விவசாயம் மருத நிலத்திலேயே உருவானது. பெருங்கற்காலத்தில் இரும் பின் அறிமுகத்துடனும் குளநீர்ப்பாசன வசதியுடனும் ஆரம்பிக்கப்பட்ட இவ்விவசாயம் செய்த மக்களை உழவர் என இலக்கியங்கள் குறிக்கும். இவர்களின் தலைமக்களை ஊரன், மகிழன், கிழான் எனக் குறிப்பர். மழைநீரை நம்பிய இவ்விவசாய மக்களை காராளர் எனவும் குறிப்பர். கி.பி. 4ம், 5ம் நுhற்றாண்டில் ஏரி, ஆறு, நதி நீர்ப்பாசன முறைகள் பெருவளர்ச்சி கண்டது. வாய்க்கால்களில் ஓடி வரும் வெள்ளத்தை (நீர்) தேக்கி வைத்து விவசாயம் செய்தவர்கள் வெள்ளாளர்கள் ஆனார்கள். இவ்வெள்ளாளர் மருதநிலத்து தலைமாந்தரில் இருந்து தோன்றினார்கள் என்பதே யதார்த்தம். நீர்ப்பாசனத்தை அவர்களே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். பின்பு நீர்ப்பாசன அதிகாரம் முற்றுமுழுதாக அரச நிர்வாகத்துக்குள் சென்றது.

ஈழத்திலும் நீர்ப்பாசனமுறை சமகாலத்தில் வளர்ச்சி அடைந்தது. ஆயினும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் அல்லது இலங்கையின் வடபகுதியில் இது விருத்தியடையவில்லை. அதற்கான ஆறுகள், நதிகள், யாழ்ப்பாணக் குடாநாட்டில் இல்லை. உண்மையில் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர் என்ற சாதியே தோன்ற வில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஈழத் தமிழரும் வேள்களும்:

தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர்களது அரசுருவாக்கம் நடந் தேறிய பிரதேசமாக யாழ்ப்பாணமே உள்ளது. பல்வேறு குறுநில வன்னிபத் தமைமைகள் இலங்கையில் வன்னி, கிழக்கு பிரதேசங்களில் உருவாகி இருந்தாலும் ஓரளவு வலிமையான அரசுரு வாக்கம் யாழ்ப்பாண அரசுருவாக்கமே.

யாழ்ப்பாண இராச்சியம் கி. பி. 13ம் நுhற்றாண்டில் உருவானது எனக்கொள்ளப்பட்டாலும், அதற்கு முன்னோடியாக ஆட்சி அதிகார மையங்கள் இலங்கையின் வடபகுதியில் இருந்துள்ளன. நாகதீபம் எனும் ஆட்சிப் பிரதேசம்பற்றி பாளி நுhல்கள் தகவல் தருகின்றன. அது உண்மையென ‘வல்லிபுர பொன் ஏடு’ நிரூபிக் கின்றது. தொல்லியல் சாசன சான்றுகளின்படி ஆனைக்கோட் டையில் கிடைத்த ‘கோவேத’ முத்திரை, பூநகரி வேளான் சாசனம், வல்லிபுர ஏட்டில் உள்ள ‘ராய’ என்ற குறிப்பு, இவைகள் ஆட்சி அதிகாரத்துடன் தொடர்புடைய சொற்கள் ஆகும். வன்னிப் பிரதேசத்திலும் வேள் ஓட்டைக் கொண்ட சாசனங்கள் மகாவம்சம் குறிப்பிடும் வேள்நாடு, வேள்கம, வடபகுதி தலைவர் பற்றிய குறிப்புகள் ஆட்சி அதிகார மையங்கள் இருந்ததற்கான சான்றுகள் ஆகும். இதனுடன் வெடி அரசன் பற்றிய ஐதீகமும் கவனிக்கப்படவேண்டியது.

யாழ்ப்பாண இராச்சியமும் – வேளாந்தலைவர்களும்

யாழ்ப்பாண இராச்சியம் என்று குறிக்கப்படும் அரசு 13ம் நுhற்றாண்டில் பாண்டியர் சார்பாக படை எடுத்து வந்த ஆரியச் சக்கர வர்த்தி தலைமையில் உருவானது என்பது ஆய்வாளர்கள் நிறுவிய ஒன்று. எனினும் இதற்கு முன்னோடியாக நாகதீப அரசு, சோழர் அரசு, கலிங்க மகான் அரசு, சாவகன் அரசு ஆகியன இருந்தன. சோழர்கள் இலங்கையில் ஆட்சியை நிறுவியபோது முன்பிருந்த ஆட்சி அலகுகளை நிலமானிய கட்டுமானங்கள் மூலம் பலப்படுத்தினார்கள். ஊர், பற்று, நாடு, வாணிபம், வளநாடு போன்ற ஆட்சிக் கட்டுமானங்கள் ஈழத்திலும் உருவானது.

யாழ்ப்பாண அரசு உருவானபோது ஆரியச் சக்கரவர்த்தியின் படைத் தளபதிகள், பிரதானிகள், வடஇலங்கை நிர்வாகிகளாக, முதலிகளாக, வன்னிபன்களா, உடையார்களாக பதவி பெற்றார்கள் என்கிறார் வரலாற்றாய்வாளர் சி. பத்மநாதன். இவர்களே வேளாந் தலைவர்கள் எனவும் வன்னியர்கள் எனவும் அழைக்கப்பட்டவர்கள். இப்படைத் தளபதிகள் பல்வேறு குல, சாதிகளில் இருந்து உருவாகி வந்தவர்கள். இதற்கு கைலாய மாலையும் யாழ்ப்பாண வைபவமாலையும் வையா பாடலும் சான்று தருகின்றது.

இலக்கியங்கள் குறிக்கும் 24 வேளாளர் தலைவர்களில், மழவர்-9, தேவர்-2, பாணர்-2, உடையார்-1, செட்டியார்-1, முதலிகள்-2, மீதி 6 வேளாந்தலைவர்களின் சாதி தெரியவில்லை என்கிறார் முத்துக்குமாரசாமிப் பிள்ளை (யாழ்ப்பாணக் குடி யேற்றம்).

முதலி, பிள்ளை:

முதலி, பிள்ளை என்பனவும் பதவிநிலைப் பெயர்களே. இவை ஊர், பிரதேசத் தலைவர்களைக் குறிக்க தமிழகத்தில் வழக்கில் இருந்தது. தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் (சோழநாடு, தொண்டைநாடு) முதலி என்ற பெயரும், தெற்குப் பகுதியில் (பாண்டிநாடு) பிள்ளை என்ற பெயரும் வழக்கில் இருந்தது. ஈழத்தில் சோழர் வழக்கான முதலி என்ற பெயரே வழக்குக்கு வந்தது. எனினும் பிள்ளை என்பது சாதிப்பெயராக வழக்கில் உண்டு.

தமிழக வேளாளரும் – ஈழ வேளாளரும்:

தமிழகத்தில் சாதிய வடிவம் காலகட்டங்களுக்கு ஏற்ப மாற்றம் பெற்றே வந்துள்ளது. தொழில்வழிக் குழுக்களாக இருந் தவை, அகமணம் மூலம் சாதியாக நிறுவனப்படுத்தப்பட்டதும் ஏறுவரிசையில் சமூகத்தில் அவை கட்டமைக்கப்பட்டதும் நெடுங்கால சமூக இயக்கத்தில் நடந்தேறியது. சாதியத்தின் உச்ச வடிவம் விஜயநகர சாம்ராஜ்ய காலத்திலேயே நிகழ்ந்தது. ஆட்சிமொழி வேறுபாடு, பார்ப்பனிய செல்வாக்கு அதிகரிப்பு, வைணவமதம் அரசமதமாக மாறியது போன்றவை நிகழ்ந்த இக்காலத்தில் பூர்வீக வேளாளர் (பூர்வீக குறுநிலத் தலைவர்கள் + வெள்ளாளர்) சைவத் தமிழ் இறுக்கத்தைக் கொண்டு வந்ததும் மடங்கள் அமைத்து செயற்படத் தொடங்கியதும் நடந்தது. இக்காலத்தில்தான் வேளாளர் + வெள்ளாளர் இணைப்பு அல்லது கலப்பு தமிழகத்திலே முழுமை பெற்றது.

ஈழத்தில் வேறுமாதிரியான இயக்கம் நிகழ்ந்தது. யாழ்ப்பாண இராச்சியம் விஜயநகர மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டாலும் தனது தனித்துவத்தைப் பேணியது. போர்த்துக்கேயர் வந்து தலையிடும்வரை சுதந்திர அரசாகவே யாழ்ப்பாண அரசு இயங்கியது. அதன் அரசர்களாக ஆரியச் சக்கரவர்த்தி பரம்பரை திகழ்ந்தாலும் அதன் தூண்களாக இருந்தவர்கள் வேளான் முதலிகளே. இவ் வேளான் முதலிகள் பல்வேறு சாதிகளில் இருந்து வந்திருந்தாலும் தங்கள் அதிகாரத்தைப் பேணுவதற்கு தங்களுக்குள் திருமண உறவுகளைப் பேணிக் கொண்டார்கள். அத்துடன் யாழ்ப்பாண அரச குடும்பத்துடன் திருமணம் செய்து தங்கள் அந்தஸ்தையும் பறைசாற்றிக் கொண்டார்கள்.

போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தில் தலையிட்ட போது பல்வேறு நெருக்கடிகளை யாழ்ப்பாண அதிகார வர்க்கம் சந்தித்தது. அரச குடும்பத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் போட்டியில் இரு மூத்த அரச குமாரர்கள் மரணத்தைத் தழுவ சங்கிலியன் ஆட்சிபீடத்தில் ஏறினான். பரநிருபசிங்கன் போர்த்துக் கேயர் பக்கம் சாய்ந்தான். முதலிகள் சங்கிலியன் சார்பானவர்கள். பரநிருபசிங்கன் சார்பானவர்களை இரு பகுதியாகப் பிரித்தார்கள். போர்த்துக்கேயரால் பரநிருபசிங்கனுக்கு அரச பதவியைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனாலும் கி. பி. 1591இல் யாழ்ப்பாண இராச்சியத்தை தங்கள் மேலாதிக்கத் துக்குள் கொண்டு வந்தபொழுது பரநிருபசிங்கன் வாரிசுகளுக்கு (பேரன்மாருக்கு) யாழ்ப்பாணத்தின் முக்கிய ஊர்களின் முதலி பதவிகளை வழங்கினார்கள். ஏற்கனவே முதலிகளாக இருந்தவர்கள் இதனால் அதிருப்தி அடைந்தார்கள். அரச குடும்ப முதலிகள் (மடப்பள்ளி வேளாளர்) ஓ வேள முதலிகள் முரண் இக் காலத்தில் உருவாகத் தொடங்கியது.

யாழ்ப்பாண இராச்சியம் முழுமையாக போர்த்துக்கேயர் கையில் கி. பி. 1619இல் விழுந்தபோது முடிக்குரிய அரச குடும்பம் நாடு கடத்தப்பட்டு கோவாவுக்கும் போர்த்துக்கல்லுக்கும் கொண்டு செல்லப்பட்டது. மற்றைய அரச குடும்பத்தவர்களுக்கும் நிர்வாகப் பதவிகள் வழங்கப்பட்டது. இவர்களும் இவர்கள் சார்ந்த குடும்பத்தவருமே பின்பு மடப்பள்ளி வேளாளர் என அழைக்கப்பட்டார்கள். இவர்களைச் சார்ந்து போர் மறவர்களான கள்ளர், மறவர், அகம்படியார், மலையாள அகம்படியார் (நாயர், தீயர், பணிக்கர்), கரையார், சிவியார் செயல்பட்டதாகத் தெரி கின்றது.

போர்த்துக்கேயர் காலம் யாழ்ப்பாண வரலாற்றில் பல மாறுதல்களை ஏற்படுத்தியது. தோம்புகள் எழுதப்பட்டு காணிகள் விற்கப்பட்டன. இதனைப் பொருளாதார பலமுள்ள சாதிகள் வாங்கின. இத்தோம்புகளை எழுத உதவியவர்கள் வேளான் முதலிகளே. இத்தோம்புகளிலேயே விவசாய நிலம் வைத்திருந்தவர்கள் ‘வேளாளர்’ என முதன்முதலில் குறிக்கப்பட்டார்கள். வேளாளர் தலைமையில் மடப்பள்ளி வேளாளருக்கு எதிரான குழுமம் அணி திரண்டது. பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் ‘வேளாளர்’ எனப் பதிவுரீதியில் அங்கீகரிக்கப்படல் இதன்மூலம் நடந்தது.

ஆரம்பத்தில் தோன்றிய இவ்வேளாள குழுமத்துக்குள் பாணர், மழவர், தேவர், உடையார், செட்டி, சீர்பரதர், வேளாள சாணார் போன்றோர் கலந்தனர். இவ்வேளாள குழுமம் ஒல்லாந்தர் வருகையை ஊக்குவித்தது. ஒல்லாந்தரும் இவர்கள் விசுவாசத் துக்குத் தக்கபடி பதவிகளை வழங்கினார்கள். இதனால்தான் மடப்பள்ளி வேளாளனான பூதத்தம்பி முதலி போர்த்துக்கேயருடன் இணைந்து சதி முயற்சியில் இறங்கினான். அது மேலும் ஆபத்தில் முடிந்தது. இருந்த பதவிகளும் பறிபோனது. இதனைத் தங்களுக்குச் சார்பாக்கிய வேளான் முதலிகள் மக்களைச் சுரண்ட ஒல்லாந்தருக்குத் துணை போனார்கள். மக்கள் நேரடியாக ஒல்லாந்தருடன் தொடர்பு கொள்ளும் வழிகளைத் தடுத்து தமது அதிகாரத்தினைப் பேணினர்.

மடப்பள்ளியினரும் மற்றவர்களும் தங்களுக்குப் பதவிகள் வேண்டுமெனக் கோரிக்கை வைத்தனர். வேளான் முதலிகளிடம் முழுப் பதவிகளும் இருப்பது ஆபத்தென உணர்ந்த ஒல்லாந்தர் கி. பி. 1694இல் மடப்பள்ளியினருக்கும் ஏனையோருக்கும் பதவிகளை வழங்கினர். இதனை எதிர்த்து வேளாளர் கிளர்ச்சி செய்தனர். கிளர்ச்சி அடக்கப்பட்டது. ஒல்லாந்தர் காலத்தில் கி. பி. 1694க்குப் பின்பு முதலி பகுவகித்த சாதிகள்:

1. வேளாளர், 2. மடப்பள்ளி வேளாளர், 3. செட்டிமார், 4. பரதேசி (கள்ளர், மறவர்), 5. மலையாளி (மலையாள அகம்படியார்), 6. கரையார், 7. தனக்காரர், 8. சிவியார்

இம் முதலி பதவி வகித்த சாதிகளுக்கும் நிலமானியங்கள் கிடைத்தன. இது இவர்கள் பின்பு வேளாள குழுமத்துக்குள் கலக்கக் காரணமாக இருந்தது. வேளாள ஒ மடப்பள்ளி வேளாள மோதல் ஆங்கிலேயர் கால முற்பகுதிவரை நீடித்தது. கி. பி. 1833இல் ககூல்புறூக் சீர்திருத்தம் அமுல்படுத்தப்பட்டபோது ஒன்றுபட்ட இலங்கை உருவானது. தனியார் பொருளாதாரம் ஊக்குவிக்கப்பட்டது. ஆங்கிலம் கற்றவருக்கு வேலைவாய்ப்பு, புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர் எனில் உத்தியோகங்களுக்கு முன் னுரிமை கொடுக்கப்பட்டது. பணப்பயிர் செய்கை ஊக்குவிக்கப் பட்டது. இது சமூக மட்டத்தில் பலத்த தாக்கத்தைச் செலுத் தியது.

ஒன்றுபட்ட இலங்கை, ஆங்கிலேயர் ஆளுகைக்கு உட்பட்ட தென்னாசிய, தென்கிழக்காசிய சூழல், முதலாளித்துவ சமூகக் கட்டுமானம் என்ற பின்புலத்தில் வேளாள ஒ மடப்பள்ளி வேளாள முரண் காணாமல் போனது. இவர்களுடன் கள்ளர், மறவர், அகம் படியார், மலையாள அகம்படியார், தனக்காரர், செட்டி, தவசிகள், சிவியார் (வேளாள சிவியார்) என்பவர்கள் இணைந்த வேளாளர் குழுமம் ஆங்கிலேயர் காலக் கடைசியில் தோன்றி இருந்தது. இதற்கு ஆங்கிலக்கல்வி முறைகளும் உத்தியோகங்களும் நிலஉடைமையோடு சேர்ந்து உதவியது.

மறுபுறத்தில் கி. பி. 1810இல் கொண்டு வரப்பட்ட இலவச சேணுமுறை தடைச்சட்டம், கி. பி. 1844இல் கொண்டு வரப்பட்ட அடிமைமுறை ஒழிப்புச் சட்டம் என்பன நடுத்தர தலித் மக்களை நகர வைத்தது. இவர்களும் ஆங்கிலக் கல்வியை உத்தியோக வாய்ப்புகளை நாடினர்.

அதிகாரத்துவமும் கருத்தியலும்:

யாழ்ப்பாண வேளாளர் அதிகாரத்தைத் தொடர்ந்து பேணு வதற்கு பல காரணிகள் துணை நின்றன.
1. பொருளாதாரம் 2. எண்ணிக்கை 3. கலாச்சாரம் 4. சமயம் 5. சட்டம் 6. கோயில் 7. பள்ளிக்கூடம் 8. இலக்கியம் 9. அரசியல்

பொருளாதாரம்:

விவசாய நிலத்தைப் பொருளாதார மையமாகக் கொண்டு சுழலும் வேளாள குழுமம் பல்வேறு சாதிகளின் இணைவில் தோன்றி இருந்தாலும் இவர்களின் இணைவைச் சாத்தியமாக் கியது நிலமே ஆகும். இவர்களது மேலாதிக்கத்துக்கு காரண மாக உள்ளவற்றில் நிலத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

எண்ணிக்கை:

1957ம் ஆண்டு பாங்ஸ் கொடுத்த புள்ளி விபரத்தின்படி வேளாளர் எண்ணிக்கை 50% ஆகும். இது வேளாளரை எண்ணிக்கை அடிப்படையில் வலிமையானவர்களாக மாற்றுகின்றது. இது எப்போதும் இருந்த நிலைமையில்லை என்பதுவும் உண்மையாகும். கி. பி. 1690க்கு முன்பு யாழ்ப்பாணச் சனத்தொகையில் வேளாளர் வீதம் கிட்டத்தட்ட 10ம% ஆகும். கிபி 1990இல் 30ம% ஆகவும் 1830இல் 40% ஆகவும் 1950 அளவில் 50% ஆகவும் மாறியது. இது வேளாளர் பல சாதிகளை உள்ளிழுத்துக் கொண்டதனால் ஏற்பட்ட மாற்றம் என்பது வெள்ளிடைமலை. இதன் மூலம் வேளாளர் பாராளுமன்றம் முதல் உள்ளுராட்சிச் சபை வரை தமது ஆதிக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. வேளாள குழுமம் உள்ளுர எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் அதனை வெளித் தெரியாமல் மறைப்பது இதனால்தான்.

கல்வி:

அரசர் காலம் தொடக்கம் போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேயர் காலம்வரை கல்விபெற்ற சமூகமாக வேளாள குழுமமே இருந்தது. அத்துடன் கல்வியை மற்ற சமூகங்களுக்கு மறுத்தவர்களாகவும் வேளாளர்கள் உள்ளார்கள். கல்விமூலம் கிடைத்த பதவிகளைத் தக்க வைக்கும் சமூகமாகவே வேளாளர் இருந்தனர். வேளாளர் பாடசாலைகள் நிறுவியபோதும் ஆரம் பத்தில் மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

கலாச்சாரம்:

கலாச்சார ரீதியில் தீண்டாமையையும் புறம் ஒதுக்கலையும் மற்றைய சமூகங்களுக்கு வழங்கிய வேளாளர் கலாச்சாரத் தளத்தில் மற்றையவரை விளிம்புநிலையில் வைத்திருக்கவே விரும்பினர். உடை, பாவிக்கும் பொருட்கள், கலாச்சார சின்னங்கள் போன்றவற்றை மற்றையவர்களுக்குத் தடைசெய்தார்கள்.

சமயம்:

யாழ்ப்பாண வேளாள குழுமத்தை பொதுவாக சைவத்துடனும் தமிழுடனும் இணைத்துப் பார்க்கும் போக்கு உள்ளது. உண்மையில் இதுவும் கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான். இதனைக் கட்டமைத்தவர் ஆறுமுக நாவலர் (1822-1879). இந்துத்துவத் திற்கு எதிராக நாவலர் இதனைக் கட்டமைத்தார். இதன்மூலம் சைவ சித்தாந்தத்தையும் ஆகமநெறிகளையும் தூக்கிப் பிடித்தார். இது மறுபுறத்தில் சாதிய ஒடுக்குமுறை உக்கிரம் பெறவும் உதவியது.
போர்த்துக்கேயர் காலத்தில் கி. பி. 1638இல் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்கள் கத்தோலிக் கராக இருந்தார்கள். ஒல்லாந்தர் காலத்தில் கி. பி.1671இல் டச்சு அறிக்கையின்படி 142357 பேர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழ்ந்ததாகவும் அதில் 141456பேர் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். ஆங்கிலேயர் கால ஆரம்பத்தில் கி. பி. 1802க்குப் பின்பே பலர் இந்துமதத்திற்குத் திரும்பினர். எனினும் 1812க்குப் பின்பான மிசனரிமாரும் 1833க்குப் பின்பு புரட்டஸ்தாந்து கிறிஸ் தவர்களுக்கு உத்தியோகத்தில் முன்னுரிமை கிடைத்ததும் கல்விக்காவும் உத்தியோகத்துக்காகவும் பலர் மதம் மாறத் தொடங்கினர். இதற்கு எதிராக, கி. பி. 1842இல் சைவவேளாளரின் எதிர்வினையாக ‘சைவத்தமிழ்’ கருத்து வைக்கப்பட்டு அது வேளாளர் கருத்தியலாக மாறியது.

சைவவேளாளர் நவீனத்துவத்தை ஆதரித்தார்கள். ஆனால் அதனை மற்றையவர்களுக்குச் சுவற விடுவதற்குத் தயாராக இல்லை. இதுவே ஆறுமுக நாவலர் தொடக்கம் சேர் பொன் இராமநாதன்வரை தொடர்ந்தது. இதற்கு இவர்கள் தேசவழமைச் சட்டத்தை துணைக்கழைத்துக் கொண்டார்கள்.

சட்டம்:

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் வேளாளர் மேலா திக்கத்தைப் பேண வழிவகை செய்தது தேசவழமைச் சட்டமே. போர்த்துக்கேயர் காலத்தில் தேச வழமைகள் அங்கீகரிக் கப்பட்டு இருந்தது. ஒல்லாந்தர் காலத்தில் அவை தொகுக்கப்பட்டு எழுதப்பட்டது.

கோயில்:

யாழ்ப்பாண சமூக கட்டமைப்பைக் கட்டிக் காக்க அரசர் களுக்கும் பின்பு வேளாளருக்கும் கோயில்களும் உதவியது. ஒல்லாந்தர்கால நடுப்பகுதியில் கோயில்கள் தோன்றத் தொடங்கினாலும் ஆங்கிலேயர் காலத்திலேயே ஆகம முறைப் படுத்தல் முறையாக அமுல்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் பல கோயில்களில் சாதிமுறையில் திருவிழா கொடுக்கப்பட்டது. இறங்கு வரிசைப்படி வெளிகள் பங்கீடு செய்யப்பட்டதும் நடைமுறையில் இருந்தது. இன்னும் இருக்கின்றது. இதனை எதிர்த்த நடுத்தர சாதிகள் தங்களுக்கு கோயில்கள் கட்டிக் கொண்டன. (கிறிஸ்தவர்களிலும் இது நடந்தது). கோயில்களில் நடந்த ஒதுக்கல்களுக்கு எதிராக பின்பு போராட்டங்கள் வெடித்தன. இன்னும் தலித்துக்கள் உள்நுழைய முடியாத கோயில்கள் யாழ்ப்பாணத்தில் உண்டு.

இலக்கியம்:

யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்தில் தோன்றிய இலக்கியங்கள் அரசை நிலைநிறுத்தும் இலக்கியங்களாகவும் அரசுக்கு கருத்து நிலை அந்தஸ்தை வழங்கும் இலக்கியங்களாகவும் இருந்தது. அவ்விலக்கியங்களில் வேளாளர்பற்றிய மிகைப்படுத்தப்பட்ட புலமைத்துவ விளையாட்டு உண்டு. ஒல்லாந்தர் காலத்தில் ஆக்கப்பட்ட யாழ்ப்பாண வைபவ மாலையும், தண்டி கனகராயன் பள்ளும், கரவை வேலன் கோவையும் வேளாளரைச் சிறப்பிக்கத் தோன்றியவையே.

அரசியல்:

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தரகு முதலாளிகளாக மாறிய யாழ்ப்பாண வேளாள ஆதிக்க சக்திகள் இலங்கை அரசியலில் முக்கிய சக்தியாகச் செயற்பட ஆரம்பித்தனர். இன்னொரு பக்கம் ஆங்கிலக் கல்வி கற்ற வேளாள குழுமம் இலங்கை, இந்தியா, தென்னாசியா, தென்கிழக்காசியா, தென்னாபிரிக்கா, மொறி சியஸ் போன்ற இடங்களில் ஆங்கிலேயரின் நம்பிக்கைக்குரிய சேவையாளர்களாக மாறினார்கள்.

சென்ற இடமெங்கும் அதிகாரத்தைப் பேணும் முயற்சியில் அதிகார வர்க்கத்தின் சுரண்டலுக்குத் துணைபோய் தங்கள் மேலாண்மையைப் பேணிக்கொண்டார்கள். இதன் சமூக, அரசியல் விளைவுகள் பின்பு பலமாகவே எதிரொலித்தது.

குறிப்பு 1:

வேளாளர் என்னும் குழுமத்திலே சோழர்காலம் துவக்கம் படைத் தளபதிகளாக, பிரதானிகளாக, நிர்வாகிகளாக வந்தவர்கள் படைவீரர்கள். போர்த்துக்கேய, ஒல்லாந்தர் காலங்களில் முதலிகளாக மாறி நிலமானியம் பெற்றவர்கள் என பல சாதிகள் இணைந்தனர். அவையாவன: மழவர், பாணர், தேவர், செட்டி, கள்ளர், மறவர், அகம்படி, மலையாள அகம்படி (நாயர், தீயர், பணிக்கர்) கணக்கர், மடப்பள்ளி வேளாளர், சீர்பரதர், பட்டினவர், தனக்காரர், தவசிகள், வேளாள சாணார், (சாணாரில் இருபகுதிகள் உண்டு) சிவியார் (சிவியாரில் இருபகுதிகள் உண்டு)

குறிப்பு 2:

கரையார்கள் தொடர்ந்து கடலோடு தொடர்பு கொண்டி ருந்ததால் அவர்கள் கடல் சார்ந்தவர்களாக மாறினார்கள். சில சாதிகள் கரையார் சமூகத்திலும் கலந்தனர். தேவர், சீர்பரதர், பட்டினவர். மயிலிட்டிக் கரையாரின் பூர்வீகம் தேவர்கள் என்று தெரிய வருகின்றது.

குறிப்பு 3:

யாழ்ப்பாண வேளாளரில் இப்போது உட்பிரிவுகள் உண்டு.
1. ஆதிசைவவேளாளர் – பிள்ளைமார்
2. கார்காத்த வேளாளர் – மழவர்
3. மடப்பள்ளி வேளாளர் – மடப்பள்ளி
4. செட்டி வேளாளர் – செட்டி
5. அகம்படி வேளாளர் – அகம்படியார்

குறிப்பு 4:

ஈழத்து வன்னிப தலைவர்களும் பல்வேறு சாதிகளில் இருந்து வந்தவர்களே. வன்னிபம் என்பது பதவிப் பெயரே. மலைய மான்கள், வன்னியர், முக்குவர், படையாட்சி, பாணர் தேவர் போன்றவர்களே வன்னிப பதவிகளை வகித்தனர்.

உசாத்துணை நுhல்கள்:

1. யாழ்ப்பாணக் குடியேற்றம் – முத்துக்குமாரசாமிப்பிள்ளை
2. வையாபாடல்
3. கைலாயமாலை
4. யாழ்ப்பாண வைபவமாலை – மயில்வாகன புலவர்
5. யாழ்ப்பாண வைபவ கெளமுது – க. வேலுப்பிள்ளை
6. யாழ்ப்பாண சரித்திரம் – தொகுப்பு : சி.க. சிற்றம்பலம்
7. யாழ்ப்பாணம் – சமூகம் – பண்பாடு – கருத்துநிலை – பேராசிரியர் கா. சிவத்தம்பி,
8. சிலோன் கசற்றியர்- சைமன் காசிச் செட்டி
9. இலங்கையில் தமிழர் – பேராசிரியர் கா. இந்திரபாலா
10. ஈழத்து இலக்கியமும் வரலாறும் – பேரா. சி. பத்மநாதன்
11. சமூக விஞ்ஞானம் – தொல்குடிகள் – ஆர். பூங்குன்றன்
12. தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு – கலாநிதி வ. புஸ்பரட்ணம்
13. இலங்கையில் தமிழர் ஓர் முழுமையான வரலாறு – கலாநிதி முருகர் குணசிங்கம்


by சயந்தன்

சின்ராசு மாமாவின் சேட்டுப் பொக்கற்றுக்குள் பீடி, சுருட்டு, சிகரெட், சிகரெட் பெட்டி என்பவற்றைப் பார்த்து அவருக்கு இப்ப தொழில் அந்த மாதிரியா, அல்லது நொந்தமாதிரியா என்று நான் சொல்வேன். “என்ன மாமா இண்டைக்கு உங்கடை கடலம்மா பாத்துப்பாராமல் தந்திருக்கிறா போலை” என்று நான் சொன்னால் அவர் சிகரெட்டை பெட்டியாகவே வைத்திருக்கிறார் என்றும் மணிக்கொரு தடவை ஊதித்தள்ளுகிறார் என்றும் அர்த்தம். அவரிடம் சிகரெட், பீடி, சுருட்டு என்பன போலவே கட்டுமரம், கரைவலை, மீன்பிடி வள்ளம், ரோலர் என்ற சாமான்களும் மாறி மாறி வந்து போயின. எப்பவாவது சமாதானம் வாறநேரம் அவர் அங்கையிங்கை கடன்பட்டு நல்ல மீன்பிடிப் படகாக வாங்குவார். பிறகு எல்லாம் முடிந்து வழமைபோல நேவி கடலுக்கை அடிக்கத்தொடங்க ஆழக்கடல் போகாட்டில் வள்ளமெதுக்கு என அதை வித்துப்போட்டு கடனை அடைப்பார். வட்டி கட்ட மனிசியின்ரை சங்கிலி காப்பையும் விற்பார். ஆனா சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல அவர் வலைகளோடை காத்திருந்தார். “பொறு பொறு பிரேமதாசா எல்லாம் சரிப்பண்ணுவான்” “என்ன இருந்தாலும் சந்திரிக்கா ஒரு பொம்பிளை. அவள் எங்கடை கஸ்ரங்களைத் தீர்ப்பாள்” “ரணில் செய்வான்போலதான் கிடக்கு” என அவர் காலாகாலத்துக்கும் காத்திருந்தார். ஒரு கட்டத்தில் “உவங்கள் பூழல்மக்கள் ஒன்றும் புடுங்கமாட்டாங்கள். எங்கடை சொந்தக் கடலம்மா என்ற காலம் வராட்டி நாங்கள் உப்பிடியே கரையில கிடக்கவேண்டியதுதான். அவனவன் வந்து அள்ளிக்கொண்டு போகட்டும்” என்றார். கடலுக்கை இயக்கம் நேவியை அடிக்கிற நேரமெல்லாம் அவர் பேப்பரை ரண்டுமூன்று தடவை படிப்பார். சிலநேரம் சத்தம் போட்டும் படிப்பார்.

சின்ராசு மாமா கடலை ஒருபோதும் கடல் என்றது கிடையாது. கடலம்மா அல்லது அம்மா அல்லது சீதேவி இப்படித்தான் சொல்லுவார். அவரது வீடு கடலோரத்தில் இருக்கவில்லை. ஆனா வீட்டுக்கை எப்பவும் ஒரு கடல் வாசம் வீசிக்கொண்டே இருக்கும். “உந்த வலையளை வேறை எங்கயாவது கொண்டுபோய் பொத்தலாம் தானே” என்றால் அவர் சிரிப்பார். “எடேய்.. இதென்ன வலையில இருந்து வாற வாசம் எண்டு நினைக்கிறியே ? இது இந்த வீட்டின்ரை ஒரிஜினல் வாசம். இது கடலம்மா தந்த வீடு. கடலம்மா தன்ர மடியைச் சுரந்து சுரந்து தந்த செல்வத்தில கட்டின வீடு எண்டபடியால இந்த வாசம் எப்பவும் இருக்கும். இதில்லாட்டி எனக்கு நித்திரை வராது”

என்னை முதலில் கடலுக்குள் கொண்டுபோனவர் சின்ராசு மாமா. ஆழமொண்டும் இல்லை. கரை தெரிகிற தூரம்தான். கட்டுமரத்தில் களங்கண்ணி வலிக்க அவர் கூட்டிக்கொண்டு போனார். அது உலாஞ்சி உலாஞ்சிக்கொண்டு போனது. கடலுக்குள் இரண்டு பேர் குதித்து ஒவ்வொன்றாக வலைத்தடியைப்பிடுங்கி தடிகள் வலைகள் என்றெல்லாத்தையும் சுத்தி மரத்தில் ஏற்றினார்கள். வெள்ளி நிறத்தில் மீன்கள் துடித்துக்கொண்டிருந்தன. மரத்தில என்னைவிட்டு அவர்கள் கடலுக்கை இறங்கின நேரம் நான் கத்தத்தொடங்கியிருந்தேன். “நான் போப்போறன்.. கூட்டிக்கொண்டே விடுங்கோ..”
சின்ராசு மாமா கெக்கட்டம் போட்டுச் சிரிச்சார். “உன்ரை வயசில உசரப்போய் ஐஞ்சு நாள் கிடந்திட்டுவந்தனாங்கள். தெரியுமே.. ” பிறகு டக்கெண்டு அமைதியானார். “இப்ப.. இந்தா கரையைத்தடவிக்கொண்டு இருக்கிறம். இருந்துபார் ஒரு காலம் வருமடா..”

எனக்குக் கடல் பயமாயிருந்தது. கடலுக்கை சுழியெல்லாம் இருக்காம். அதுக்கை அம்பிட்டால்.. ஆளைச்சுழற்றியடித்து உள்ளை அமத்திப்போடுமாம். ஒருதரம் இதைச்சொல்லி “கடல் சனியன்” என்றபோது சின்ராசு மாமா ஓங்கியொரு குட்டு விட்டார். கடல் பரவாயில்லையென்று நான் நினைச்சன். “கடலம்மா ஆரையும் விழுங்கமாட்டாள்” என்றார் அவர். நீண்ட நெடுங்காலத்துக்குப்பிறகு 97 இல் வலைப்பாடு கிராமத்தில் இந்தியாக்கு வெளிக்கிட்ட நூற்றுஐம்பது பேரை கடலம்மா விழுங்கித்தள்ளியபோது நான் கரையில் நின்றேன். “சின்ராசு மாமா ஏன் பொய் சொன்னார்” என யோசித்துக்கொண்டு.

அப்ப அவர் அனலை தீவில வாடிபோட்டுத்தொழில் செய்த நேரம். என்னையும் அனலைதீவுக்கு கூட்டிக்கொண்டு போகச்சொல்லி நான் கேட்டேன். சின்ராசுமாமா என்னை கல்லுண்டாய் வெளியால கூட்டிக்கொண்டுபோனார். பொம்மை வெளி நாவாந்துறை கடல்களோரம் வந்து ரவுணுக்குள் ஏறி சுற்றிக்காட்டினார். “எட அனலைதீவு நல்லாத்தான் டெவலப் ஆகியிருக்கு. பிறகென்ன.. ” என்று நான் நினைத்தேன். இருந்தாலும் அனலைதீவுக்கு றோட்டு இருக்கா என்றது ஒரு டவுட் ஆகத்தான் இருந்தது. “மடையா காரைதீவுக்கே றோட்டிருக்கேக்கை அனலைதீவுக்கு இருக்காதா என்றார் அவர். அவர் சொன்னாச்சரி.

பிறகு எல்லாம் மாறியது. நேவியின்ரை கப்பல் கடலின்ரை அடியில அவ்வப்போது தெரியத்தொடங்கியது. இரவுகளில் கடலுக்கை வெடிச்சத்தங்கள் கேட்டன. எல்லா மீன்பிடி வள்ளங்களும் கரையில கவிண்டு கிடந்தன. நேவியை உச்சிப்போட்டு சிலர் போயிட்டு வந்தார்கள். அப்பிடிப்போன பரன் அண்ணா ஒருநாள் வராமலேயே போனார். ரண்டு மூண்டு நாள் கரையில சோறு தண்ணி இல்லாமல் அவரின்ரை மனிசி காத்திருந்தா பிள்ளைத்தாச்சி வயிற்றோடு..

சின்ராசுமாமா தன்ரை மூன்று வள்ளங்களையும் கொண்டு கிளாலிக்கு வெளிக்கிட்டார். “இனித் தொழில் சரிவராது. கிளாலி ஓட்டம் செய்வமெண்டு போறன்” என்றார் அவர். ஆனையிறவிலும் பூநகரியிலும் ஆமி இருக்க யாழ் குடாநாட்டுச் சனங்கள் கிளாலிக் கடலால வன்னிக்கும் வவுனியாக்கும் கொழும்புக்கும் போய்க்கொண்டிருந்தினம். அதுக்கையும் நேவிக்காரன் வந்து இடையில சனத்தை மறிச்சு வெட்டியும் சுட்டும் தன்ரை விளையாட்டைக்காட்டிக் கொண்டுதான் இருந்தான். சின்ராசு மாமாவின் மூன்று வள்ளங்களும் கிளாலிக் கடலில் இரவுகளில் ஓடின. ஒரு வள்ளத்தோடு மிச்ச இரண்டு வள்ளத்தையும் கயிற்றால் இணைத்து அவரே ஓட்டியாவும் இருந்தார். அந்தநேரம் அவரின்ரை பொக்கற்றுக்கை சிகரெட்டுகள் எட்டிப்பார்த்தன.

திடீரென்று ஒருநாள் சின்ராசு மாமா ஓடிவந்தார். “அவன் அங்கை கிளாலியெல்லாம் வந்து பிடிச்சிட்டான். வள்ளங்கள் கரையில நிக்குது. ” என்று பதைபதைத்தார். மூன்றோ நாலு நாளில் ஒபரேசன் யாழ்தேவியை புலிகள் முறியடித்து இராணுவத்தினரை விரட்டியடித்தனர் என்ற செய்தி வந்தபோது “கிளாலியும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம். வள்ளங்களை இங்காலை கொண்டுவரும்” எனப் போனார். போனவர் 3 வள்ளங்களினதும் எரிந்த எலும்புக்கூடுகளைத்தான் கண்டார்.

அன்றிலிருந்து சின்ராசுமாமா ஒடுங்கிப்போனார். கரைவலை களங்கண்ணியென்று போறதையும் நிப்பாட்டினார். வருத்தங்களும் வந்து ஆளும் நல்லா கொட்டுண்டு போனார். “என்ரை சாம்பலை இந்தக்கடலுக்கை கொட்டுங்கோடா” என்றெல்லாம் புசத்தினார்.

பிறகு யாழ்ப்பாணத்தை ஆமி பிடிச்சு கடலுக்கை நேவிட்டை காட்ட ஸ்பெசல் ஐடென்ரி காட் எல்லாம் கொடுத்து இத்தனை மணிக்குப்போய் இத்தனை மணிக்கு வா என்று நேரத்தைக் கட்டுப்படுத்தி தீடீரென்று போகாதையென்று நிறுத்தி கடலில வந்து மீனைப்பறித்து என எல்லாவற்றையும் நடாத்திக்காட்டியது. பிள்ளைகளுக்காகவும் கடனுக்காகவும் இதெல்லாத்தையும் கடப்பதாய் அவர் சொன்னார்.

0 0 0

சின்ராசுமாமா கதைத்தார். “இப்ப நான் சிகரெட்டெல்லோ பிடிக்கிறன்” என்றார் அவர். இப்ப கொஞ்ச நாளைக்கு முதல்லை கடல் தடையெல்லாம் விலத்தி மீன்கள் கொழும்புக்கு போகுதாம் என்று கேள்விப்பட்டிருந்தேன். அவரும் அதைத்தான் சொல்லியிருக்க வேண்டும். அவரது கடலம்மா திரும்பவும் தன் மடியைச் சுரக்கத்தொடங்கியிருப்பாள்.
ஆனால்…
ஆனால்.. அதெப்படி ஆமிக்காரன் கொடுத்த அனுமதியில் அவர் மகிழ்வுறுகிறார்.. ? அது பச்சைத் துரோகமாயிற்றே.. சுதந்திரத்தை விட சோறு முக்கியமாகி விட்டதா அவருக்கு..?

சின்ராசு மாமா இந்தக் கேள்விகளை எல்லாப்பக்கமிருந்தும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைத்தேன். உப்புச்சப்பில்லாமல் “சந்தோசம் ” என்றேன்.

“ஒண்டு சொல்லுறன்ரா.. என்ரை தொழிலைப்பாழாக்கி என்ரை வள்ளங்களை எரிச்சு என்னோடு கடலுக்கை வந்த சிநேகிதங்களை சுட்டு எல்லாத்தையும் செய்தவன்.. இண்டைக்கு சரி நீங்கள் எல்லாம் கடலுக்கை போகலாம் என்று விட சரி மாத்தையா என்றுவிட்டு போறதை விட வேறை மனசை அரிக்கிற கொடுமை இல்லை.. ஆனா.. நீ சொல்லு.. நான் வேறை என்ன செய்ய… ?

இந்தக்கதையின் கடைசிப்பந்திக்கு முன்பதாக இதை எழுதிய சயந்தனுக்கு ஒரு டவுட் வந்தது. இந்தக்கதையை ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பலாமா என அவர் யோசித்தார். அவருக்குத் தெரிய அவரின்ரை எந்த நண்பரோ.. அல்லது நண்பரின் மகளோ எந்தப் பத்திரிகையிலும் வேலை செய்யவில்லை. இந்தக்கதையை யாரும் ஒரு பொருட்டாகத்தன்னும் மதிப்பினம் என்று சயந்தனுக்குத் தோன்றவில்லை. அவர் தனக்குத் தெரிந்த ஒரு பேப்பருக்கும் தெரியாத ரண்டு இணையத்தளத்துக்கும் இந்தக்கதையை அனுப்புவது என்று முடிவு செய்தார்.

எழுத்தாளர் சயந்தன் மூன்று ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு கடிதம் எழுதினார். அன்புள்ள ஆசிரியருக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கதையையும் மற்றும் தனி இணைப்பாக இணைக்கப்பட்டிருக்கிற இதன் முடிவும் உங்களது பத்திரிகைக்கு ஏற்றதாக இருந்தால் தயவுசெய்து பிரசுரிக்கவும் என்று கடிதங்களை எழுதினார். பத்திரிகைக்கு ஏற்றதாக இருந்தால் என்றதை தனியே அடிக்கோடிட்டார் சயந்தன்.

ஆசிரியர் : ஒருபேப்பர்.
கதையின் முடிவு :

சின்ராசு மாமா சொன்னார். “தம்பி நான் பச்சைத் தமிழனடா.. உவை மயிராண்டியள் பெர்மிசன் தந்து.. நான் போய் கடலில இறங்கவோ.. ?உப்பிடியாப்பட்ட ஈனத்தொழில் எனக்கு வேண்டாமடா.. பட்டினி கிடந்து செத்தாலும் சாவனே தவிர கடலுக்கை காலை நனையேன்” என்று சொன்ன மூன்றாவதோ நாலாவதோ வாரத்தில் சின்ராசு மாமா பட்டினியால் செத்துப்போனார்.

ஆசிரியர் தமிழரங்கம்
கதையின் முடிவு :

சின்ராசு மாமா ஓடிப்போய் குசினிக்கை ஒரு உலக்கையை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினார். ஓடமுதல் அவர் சொன்னார். மீனவத் தோழர்களே.. நாம் நம்மைத்திரட்டி கூட்டுப்புரட்சியை ஏற்படுத்தி – அதனூடாக நமது கடலை நமக்காகப்பெறுவோம். நமது எதிரி ஆமிக்காரன் மட்டுமல்ல.. சம்மாட்டியாரும்தான்.” முதலில் எல்லோரும் சம்மாட்டியார் வீட்டுக்கு ஓடினார்கள். சம்மட்டியார் ஊரைவிட்டு ஓடிப்போயிருந்தார். பிறகு எல்லோரும் ராணுவ முகாமுக்கு ஓடினார்கள்.

ஆசிரியர் சத்தியக்கடதாசி
கதையின் முடிவு

சின்ராசு மாமா சொன்னார். “நானொரு உண்மையைச் சொல்லுறன் கேளுங்கோ . வெள்ளாளர் மீன்பிடிக்க கடலுக்கை போவதில்லை என்ற காரணத்தால தான் ஓம்.. அந்த ஒரு காரணத்தினால தான்.. இதுவரை காலமும் புலிகள் நாங்கள் சுதந்திரமா மீன்பிடிக்க ஒரு வழியைச் செய்து தரேல்ல. இப்ப ராணுவம் அதைச் செய்திருக்கு. அந்த ஒரு காரணத்திற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். எங்கே எல்லோரும் பாடுங்கள்.. நமோ நமோ தாயே.. நம் சிறிலங்கா.. நல்லெழில் பூரணி.. நலங்கள் யாவும் நிறை மாமணி

:
 
 
அகமும்,புறமுமிழந்த ஒரு பொழுதில்,மெய்மையும் புனைவும் இருத்தலை நோக்கி கை அசைக்க…
 
 
 
“மெல்லப் பாடும் தென்றலும்
மேனிசிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்
மெட்டு விரிக்கும் முல்லையும்
மோதிக்கொள்ளுமொரு புயலாய்ப் பொழுதுகள்
கண்ணைத் திறந்து வைத்துக்
கப்பல் கட்டும் தம்பியும்
கடுப்பாக அவனோடு மல்லுக்கட்டும் தங்கையும்
அடுப்பில் நெருப்பு வைக்கும் அம்மாவும் நிர்க்கதியாய் நினைவில்”
 
 
அது ஒருகாலம்.மழைக்காலத்து வாழ்வு.இளமை முழுதுமாகச் சின்னமடுமாதாவின் வளவுக்குள்ளே அலைந்த வாழ்வு-மகிழ்வும்,கனவும் பொலிந்து உருவாகிய எமக்குள், தொடர்ந்து அலையலையாக எழுந்த எண்ணங்களுக்கு உருப்போட்ட சின்னமடுமாதாவின் குருசுமரத்தடி.இஃது, என்றுமே என்னை உருவாக்கியதில் தன்னை எனக்குள் பெருமைப்படுத்தும் மரத்தடி.
 
 
எமது வாழ்வும்-சாவும்,காலமெல்லாம் அங்கே இருப்பதற்கானதாகவே நானும், எனது நண்பன் சிவாவும் கனவு கண்டுகிடந்த இந்தச் சின்னமடுமாதா கோவில் எங்களுக்கான சரணாலயம்.எப்பவெல்லாம் எமக்கு வெளியில் உலாவவேண்டுமோ, அப்போதெல்லாம் சின்னமடுமாதாவின் படிக்கட்டுகளில் தஞ்சமடைவோம்.எனக்கான நாணயமான கடவுளாக மாதா இருந்திருக்கிறாள்.
 
 
சிவா…
 
 
எப்படியோ,எதன்படியோ கொல்லப்பட்டான்…
 
 
பனிப்பொழுதுகளில் அவளது படிக்கட்டுகளில் நாம் புகைத்திருக்கிறோம்.புதினமாகச் சுருவங்களைக் கண்டிருக்கிறோம்.ஏசுநாதருக்குச் சிலுவை சுமக்கவைக்கும் படங்களை அலுப்பின்றிப் பார்த்துக் கண்ணீர் சிந்தியருக்கிறோம்.பின்னாளில் நாம் இதையே பெறுப்போகிறோமென்ற சிந்தனையின்றி.
 
 
“சலிப்புத்தான் சாவையும் ஜனனத்தையும்
சகஜமாக்கும் நாட்பொழுதில்
சருமத்தில் நரைபட்ட உரோமம் மேவினும்
சின்னக் குழந்தையாய்ச் சின்னமடுமாதா வளவில் குத்தி விழும் மனம்”
 
 
 
நிலாக் காலத்துச் சித்திரை நிலவுக்கு மாதா கோயில் பகற்பொழுதாகவே இருக்கும்.எங்கள் கும்மாளமும், குதூகலிப்பும் அவளது இருப்பையே அசைத்திருக்கும்.எங்களுக்குச் செபம் தெரியாது.நாங்கள் தேவாரம் பாடியும் அவளைத் தரிசித்திருக்கிறோம்.சின்னமடுமாதாவுக்கு ஆடிமாதத்தில் விழாவெடுப்புத் தொடங்கும்.ஆடிக் கொடியேற்றமும்,ஐப்பசிப் பெருநாளும் நம்மைக் குதூகலிக்க வைப்பவை.சின்னமடுமாதாவின் மணியோசையில் ஊர் உறங்கச் செல்லும் பொழுதுகளில் நாம் உலாத்தப் போவது வழமையாகும்.உறக்கம் கலைத்து ஊருக்குள் மடங்கட்ட முனைந்த நமக்கு சொற்பகாலத்தில் சுகம் தொலையுமெனக் கனவிலும் எண்ணாத வயதவை.
 
 
நாங்கள் தவமிருக்கும் குருசுமரத்தடியை அண்டியபடி மாதாவுக்கு வானுயரக் கொடியேற்றப்படும்.அந்தக் கொடியோடு எங்கள் குதுகாலத்துக்குக் குறைச்சலே இல்லை.கடலைக்கொட்டகையின் வரவுக்கும்,ஐஸ்கிறீம் வானின் வருகைக்கும்,விளையாட்டுச்சாமான் விற்கும்”சோனக”க்கடைகளின் வருகைக்கும் இக்கொடியேற்றமே காரணமென்பதால் நாம் மகிழ்வோம்.நல்லதே நடக்கும்.நாங்கள் பயணித்த பாதைகளில் இப்போது தம்பியய்யா மாமாவின் லையிட் எஞ்சினது பாரிய உடல் விரிந்துகிடக்கும்.வீட்டில் பாயில் புரளும்போதெல்லாம் இந்த இரைச்சல் எங்களுக்கு மீள மாதா கோவில் வளவுக்குள் இழுத்துவரும் ஆசைகளை.நாம் எழுந்து ஆலமரக்கிளைகளில் தவம் இருப்போம்.அப்பப்ப “கம்பு”விளையாடுவோம்.காலையில் காகத்தின் கரைவிலும்,குயிலின் கூவலிலும் அறுபடும் தூக்கம் மாதாவின் வளவுக்குள் விழிகளைத் தூக்கி வீசும்.
 
 
இந்த மாதாவைக் கொணர்ந்து எங்கள் வீட்டு ஒரு வேலிப்புறத்தில் ஊன்றிய கொலனித்துவம், 1858 ஆம் ஆண்டுகளில் நமது கிராமத்தில் ஐரோப்பியக் கட்டக்கலையையும் சுற்றுப் புறத்தைiயும் நட்டுப்பார்த்திருக்கிறது.சீமை மரங்கள் என்று பலவகை மரங்கள் மாதா கோவிலுக்குள் நிற்கின்றது.நாம் குட்டூறு மரமென்றும் அதன் மாங்காய் வடிவிலான காய்களை உடைத்து, அதன் உள்ளே பொதிந்துள்ள இலைவகைச் செட்டையில் கெலிகெப்றர் பறக்கவிட்டத்தையும் தவிர எங்களுக்குக் கொலனித்துவங் குறித்து எதுவுமே தெரியாதிருந்தது அன்று.விழிகளைத் தூக்கி மீளவும் எமக்குள் ஒட்டும்போது,பாடசாலை மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்து கால் நடைக்குக் கட்டளைபோடும்.வேலணை நோக்கி நடக்கும்போது,பையில் சில்லறை இருக்குமா என்ற தேடுதல் கன்ரீன் போண்டாவைக் குறித்ததாகவே இருக்கும்.நான்கு மணிக்கு வீடு மீளுவும்வரை போண்டாவாது உதவுமென்பது, தோட்டக்காரர்களது குழந்தைகளுக்கே வெளிச்சமானது.அம்மாவும்,அப்பனும் தோட்டத்தில் மாரடிக்கும் அதிகாலைப் பொழுதில் அழுவது எமதும் வயிறும்தாம்.
 
 
பின்னாளில்,ஊரும்,உறுவுகளும் அறுத்து அநாதவராக்கப்பட்ட எங்கள் கிராமத்தின் முழு அர்த்தமுமே மாதா கோவிலோடு தொடர்புப்பட்டது.எங்கே விளையாடிக் களித்தோமோ,அங்கே,வருங்கால ஈழத்துக்காகக் கதையாடிப் பார்த்தோம்.கருத்தரித்த கனவுக்குக் காரியத்தை மாதா கோவிற்படிகட்டுகளில் ஆய்ந்திருக்கிறோம்.மெல்லிய நிலாவொளியில் மெலிந்த பல உருவங்களோடு நானும் இருந்திருக்கிறேன்.எங்களுக்கு அரசியல் புகட்டியும்,விடுதலையின் வேட்கையத் தகவமைக்கும் பலர் முனைந்த இந்த மாதா கோவிலுக்குப் பாதர் சிங்கராயர் பிரசங்கம் செய்திருக்கிறார்.
 
 
ஈழத்துவிடுதலைக்கு உண்மையாய் உழைத்தவர்களில் அவர் எப்பவுமே இடம்பெற்றிருக்க வாய்ப்புண்டு.
 
 
“எல்லாத்தையும் இப்படியே வாழ்ந்து
மெல்ல விலகும் வாழ்வோடும்
வேளைக்குக் கிழடுபடும் மேனியோடும்
மெஷினில் சிறைப்பட்டு மெல்லவுடையும் வாழ்வு!”
 
 
நாரந்தனையில் இருந்து நடுப்பொழுதில் மாதாவிடம் ஓடிவரும் வெஸ்லி எனக்கு அண்ணன் வயதுடையவன்.பைபிளைப் படித்துவிட்டு”சாத்தான் வந்தவிட்டான்,சாத்தான் வந்துவிட்டான்”என ஊரெடுபட ஓடிவரும் அவன், எங்களது புகையிலைத் தோட்டத்தை ஊடறுத்துப் புகையிலைகளை முறித்தபடியேதாம் கோவிலுக்குள் வீழ்வான்.
 
 
அவனது “கத்தலில்” நாங்கள் மாதா கோவிலுக்குள் படையெடுப்போம்.அப்போது, அவன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே மாதாவிடம் மன்றாடுவதைக் கேட்டுக்கொண்டிருப்போம்.அவன் சினிமா நடிகன் ரகுவரனின் தோற்றத்தோடும்,அவரைவிட உயரமாகவும் இருப்பான்.இலண்டனில் கல்விக்காரக் குடும்பத்தின் மூன்றாவது பையன்.அண்ணன் மாரும்,தங்கை மாரும் இலண்டனில் படிக்க இவன்மட்டும் சின்னமடுப் படிக்கட்டுகளில் எங்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தருவான்.
 
 
அற்புதமான ஆங்கில நடையில் பைபிள் கதைகள் சொல்லுவான்.நாங்கள் தமிழில் கதை சொல்லக் கேட்போம்.சின்னமடுமாதாவை நினைக்கும்போது, வெஸ்லியின் உடைந்த தமிழ் ஞாபகத்துக்கு வந்து சிரிப்பைக் கூட்டிவருகிறது.அதே தருணத்தில் அம்மாவின் மடியில் தலைவைத்து முற்றத்தில் நாம் நிலாப்பார்த்த காலத்தில், பாதர் சிங்கராயரின் அற்புதமான தமிழ்ப் பிரசங்கத்தைக் கேட்டிருக்கிறேன்.அம்மா,பாதர் சிங்கராயரின் பிரசங்கத்தை மிகவும் சிரத்தையோடு கேட்பதை உணர்ந்திருக்கிறேன்.அவரது மொழியைத் தமிழ் என்பாள் அம்மா.அறுத்துறுத்துப் பேசும் அவரது கலை நாளாந்தத்தில் என்னையும் அங்ஙனம் பேச வைத்திருக்கிறது.
 
 
இந்தப் புலப்பெயர்வு வாழ்வில் ஜந்திரத்தோடு முடக்கப்பட்ட எனது இளமை தொலைந்து போனது, நீண்ட நாளாக அது எனக்கே தெரியாது போய்விட்டது!மெல்ல நரைத்த தலைமுடி இப்போது முழுமையாக நரைத்துவிடுகிறது.முன்புபோல் நடக்க முடியவில்லை.எனினும், மனம்மட்டும் சின்னமடுவுக்குள் அலைந்த இளமையோடே துடிப்பாய்த் துள்ளுகிறது.இருபத்தி நான்கு ஆண்டுகளின்பின்னே மாதா கோயில் புகைப்படத்தை மருமகனின் பேஸ் புக்கில(Facebook) மெல்லப் பார்க்கக்கிடைத்தது.கண்கள் நெடுகக் கனத்தபடி குமிழ் நீராகக் கனத்த பொழுதுகள்,எனது இளமைத் துடிப்பை உரத்தும் மறுத்தும் உரைத்தன.உளம் மலர்ந்த உன்னதங்களை சின்னமடுமாதா கோவில் வளவுக்குள் மீட்டுப் பார்த்த அந்தப் பதின்ம வயதுக்கு அணிலோடும்,கொக்கோடும்,கிளியோடும் ஆயிரெத்தெட்டுக்கதைகளுண்டு.மாரிகாலத்துத் தவளைகளும்,வெள்ளப்பெருக்கோடு சுருவில் கடலிலிருந்து ஊர் நோக்கிவரும் வெள்ளத்தோடு மீன்களும் மாதா கோவில் வளவுக்குள் வந்த எம்மை மகிழ்வித்துத் தம்மைச் சாகடித்திருக்கின்றன-புலிகளது அடிமட்டப் போராளிகள் போல!
 
 
வாழ்வின் பெருமிதம் என்பது நட்பு என்பதே எனது தெரிவு.அப்படியான நட்பை நான் தோழர் சன்னதியிடம் கண்டவன்.எங்கள் கிராமத்தில் நாம் ஒன்றாய் அரசியல் பரப்புரைகளில் ஈடுபட்டோம்.சேரிகளுக்குள் அரசியல்பரப்புரைகள்-கல்வி புகட்டல் என்பதற்கு நாங்கள் புரட்சிகரமான சினிமாக்களை(கண்சிவந்தால் மண்சிவக்கும்,உமை ஜனனங்கள்,உதிரப்பூக்கள் என…)கொண்டு,விளக்கப்படுத்திக்கொள்வோம்.அப்போதெல்லாம்”தோழர் சிறீ,நீங்கள் விளக்கங் குடுங்கோ”என்று அவர் ஒதுங்குவார்.மிகவும் செயற்பாட்டு ஊக்கமுடைய அவர்,சொல்லாற்றல் அற்றவர்.அரசியல் ரீதியாக மிகவும் கூரிய அறிவுடையவர்,எனக்குப் பாதர் சிங்கராயர் போட்ட பேச்சாற்றலால் என்னிடமிருந்து தான் பின் தங்கியதாக உணர்ந்தார்.அவரைத் தோழமையாகக் கொண்ட எனது அரசியலை அவரே பெரும்பாலும் நெறிப்படுத்தினார்.
 
 
மக்களுக்கு மத்தியில் ஆயுதம் எடுத்துச் செல்லப்படாதென்பதில் அவர் மிகவும் கண்டிப்புடையவர்.தீவுப்பகுதிக்கு அவர் பொறுப்பாளராக இருந்தபோது நான் பிரச்சாரத்துக்கு உறுதுணையாக இருந்திருக்கிறேன்.எங்களை ஒருங்கிணைத்தவள் இந்தச் சின்னமடுமாதா.
 
 
வேலைணைச் சங்கக்கடை மனேச்சர் பாலனின் சமூகவிரோதச் செயற்பாட்டை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றதிலும்,அதை அரசியல் போராட்டமாக்கிக் கிராமமட்டத்தில் மக்களை விழிப்படைய வைத்தத்திலும் நாம் ரெலோவுக்கும் அன்று கடமைப்பட்டவர்கள்.அவர்களது ஆயுத ஒத்துழைப்பின்றி,அன்றைய சண்டித்தனக்காரர்களை உடைத்துப் பாலனை சங்கக்கடைக்குள் மடக்கி இருக்க முடியாது.எனினும், இன்னொரு விதமாகப் புளட் செய்த பேரத்தில் இலட்சத்துக்காகப் பாலனை எம்மிடமிருந்து ஆயுத ரீதியாக விடுவித்த புளட், அன்று எமக்குச் சாவு குறித்து எழுதிய புலிகளுக்கு ஒத்தூதியது.இதன் தொடர்ச்சியும் மாதா கோவிலின் படிக்கட்டுகளிலேயே நாம் அடிபிடியாகவும்,கத்திக்குத்துகளாகவும் கண்டபோது, என்றோ ஒரு நாள் தோழர் சன்னதியைக் கத்திக்குத்துக்கு நாம் இரையாக்குவோம் என்பதை நான்மட்டும் அறிந்தே இருந்தேன்.நாரந்தனைச் சன் பேதுருவார் கோயில் கூடுதூக்குவதில் எனது உறவுக்கார நாரந்தனையார்கள் என்னை எச்சரித்தபோது ஊர்காவற்றை பொலிஸ்சில் பரீட்சார்த்தமாக அடைத்தான் என்னை சப் இன்ஸ்பெக்டர் ஞானப் பிரகாசம்.அன்று அவனது திட்டம் சன் பேதுருவார் கோயில் கூடு தூக்கும் அடுத்த ஆண்டு துப்பாக்கிச் சூடாக எமது தோழர்களைப் பதம்பார்த்தபோது, நாங்கள் இன்னுமொரு பொழுதை ஞானப்பிரகாசத்துக்காக ஒதுக்கினோம்.அது,எல்லாம் குழம்பிய குட்டையில் மீன்பிடித்த கதையாகப் புலிகளுக்கு வாய்த்துக்கொண்டது.நாரந்தனை வேளாளக் குடிகள் புலிகளாகித் திரிந்த பொழுதில் சன்னதிக்குச் சமாதிகட்டுவதை நான் அறிந்தே இருந்தேன்…
 
 
“பின்னைய பொழுதொன்றில்
தூங்குவதற்கு முன்
மையைக் கக்கி ஓய்ந்த பேனாவொன்றில்
சுரக்கும்
எமது இருப்புக்காய்
நான் இப்போது தொடர்கிறேன்
உன்னைக் கொல்வதற்கு!”
 
இதற்குப் பின்னாய் காலத்தை அலையவிடுவதில் சின்னமடுமாதாவைத் தரிசிக்க முடியவில்லை.
 
 
நினைத்துப் பார்க்கிறேன்.
 
 
“கடுமழையில் விழுதுடையும் வேம்புபோல்
கொடும் இயக்கக் கொலைகளில் சிரசுடையும் சின்னதுகளையும்
கூன் விழுந்த குமரியளையும் பல்லுப்போன பாலகர்களையும்
பாழுமிந்து இயக்க முரண் அரசியல் விட்டு வைக்காது”
 
 
எங்களுக்குப் புளியம் பழம் தந்த சின்னமடுமாதப் புளியமரத்தடியில் சின்னதாகவும்,பெரியதாகவும் நாம் கூடியிருக்கிறோம்.நடுநிசிப் பொழுதுகளில் சாதியத்தின் கொடுமைகளுக்கு எதிராகப் பாடங்கள் எடுத்திருக்கிறோம்.அன்றைய சில பொழுதுகளிலேயே சேரிகளை புளியங்கூடலார் தீயிட்டுக் கொளுத்தி மகிழ்ந்தனர்.இராமனும்,கீத மங்கலமும்,எம்மிடம் ஆலோசித்தபோது,இழவு வீட்டுக்கு மேளம் அடிப்பதை நிறுத்தும்படி ஆலோசனை பகிர்ந்தவர்களுள் கனகசபையும்,நானும் முதன்மையாய் இருந்தோம்.சன்னதி,சேரி மக்களின் உணவுக்கு ஆதாரமான தொழிலை நிறுத்துவதில் முரண்பட்டிருந்தார்.மேளம் அடித்தவர்கள் பின்னாளில் உணவுக்குச் செத்தபோது,வெளிநாடுகளில் வேலை பார்த்த”சேரிப் பொடியன்கள்”தயவு அதிகமாகவிருந்தது.
 
 
இயங்கங்கள் சாதி ரீதியாகச் செயற்பட முனைந்தபோது,அராஜகமான அழிப்புகளும் சாதிரீதியாகவும் பிரயோகிக்கப்பட்டது.
 
 
பெரியவர்களின் எத்தனையோ சாதிச் சண்டைகளையும்,சின்னக் குழந்தைகளின் துள்ளித் திரிந்த பாதங்களையும் சின்னமடுமாதா வளவு தரிசித்திருக்கிறது.காதலர்கள் கோவிலுக்குள் குடியிருந்ததையும்,அதைக் கண்ட விடலைகளின் விஷம அடிகளை எதிர்கொண்ட அப்பாவிக் காதல் ஜோடிகள் கண்ணீர் சிந்தியதையும் மாதா தரிசித்தே இருக்கிறாள்.அப்போதெல்லாம் நான்கா பக்கமும் திறந்து கிடந்த மாதா கோவில் அரைச் சுவர்கள், இப்போது மூடிக்கட்டி,புகுமுக வழியும் இரும்புக் கேற்றுப்போட்டு,மாதவையும் சிறைப்படுத்திவிட்டார்கள் நாரந்தனை வேளாளப் பெருமக்கள்.கொலனித்துவ வாதிகளிடமிருந்த மனதுகூட நமது சாதியப் பெருங்குடிகளிடமில்லை என்பதை சின்னமடுமாதாவைச் சிறை வைத்ததில் நான் உணருகிறேன்.
 
 
ஏதோ ஒருபொழுதில், எனது இருப்பை இழக்கும் கணமானது சின்னமடுமாதக் குருசு மரத்தடியிலென்றால்,நான் பெருந்தவப் பேற்றாளன் என்பது என்வரையில் உண்மையானதே.
 
 
இளமையின் வலி?
 
 
சுருங்கக் கூறிவிடலாம்,சுண்ணத்துஞ் செய்துவிடலாம் விடுதலையில் பெயரில்.சில வெற்றிகளில் யுத்தமுனைகள் இரண்டும்சிலகாலம் உயிர்த்திருக்கிறது!
ஒரு தரப்பின் இழப்பில் மறுமுனையின் இருப்பு வலுக்கும்பொழுது இஃது.மறுபடியும்,ஒருநாள் விடுதலையின் பெயரால் “ஏலங்கள் விடப்படும்”குத்தகையை வேண்டுவதற்காக,அது இன்னொரு கொலைக்களத்தை அந்நியருக்காக செய்விப்பதில் எமது வாரீசுகளே வழியெடுத்துக்கொடுப்பர்.
 
 
இதற்கு-ஈழ மண்ணும் விதிவிலக்கல்ல,
சின்னமடுமாதாவும் விலக்கல்ல.
 
 
 
“உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு.”-குறள்
 
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்

A STUDY ON THE INDIGENOUS PEOPLE OF MANNAR AND MATHODDAM

Rev.Fr.M.G.Arulpragasam B.A Hons, Dip.in Education

Introduction

The Mannar district, which is situated in the North-West of Sri-Lanka, is a part of Northern Province. It is also noted that Mannar district is very prominent in Sri-Lankan history. This district is surrounded by Puttalam district in the South, the district of Anuradhapuram in the South -East, Vavuniya district in the East, Mullaithevu district in the North-East, Kilinochy district in the North and the large coastal area in the Western part of the district.

It is true that there was a river in between the Island of Mannar and the Mainland. This river was called Mann-Aru (kz; MW) 1, that is, the colour of the river seemed to be the colour of the sand. That was why the people called the river Mann-Aru. The name of the river became the name of the place. In earlier times the name Mannar was referred only to the Island of Mannar and Mantota or Manthai. Afterwards it was divided into Divisional Secretariat and A.G.A Divisions. Presently Mannar, Nanattan and Musaly are D.S Divisions and Madhu and Manthai West are A.G.A. Divisions. Nearly 88% of the total land area of the Mannar district is in the Mainland.

The main source of income of the people of the district is from cultivation, fishing and animal husbandry. It is to be noted that 70% of the population is engaged in cultivation, 25% in fishing, while the balance 5% is involved in other activities.2

In the mainland, Manthai was called in many names such as Mahathithapattanam, Eailpattanam, Mathoddam, Montota, Mahagama and Rajarapuram. Mahavansa speaks that this Manthai was an ancient urban city mainly occupaied by Tamils most probably the Kurukula people. The most of the Kurukula people of Mantota are from the royal families. The kith and kens of Singhe (rpq;if)dynasty families are still living in Mannar and in Manthai.3 Avurampillai Rosairo Ethirmanasinghe families and Avurampillai Banjamin Ethirmannasinghe families of Periyanavathulam are the Singhe dynasty families in Mathoddam. Some of the Kandian royal families were also brought there by Portuguese.4During the pre-Buddhist period Mahatittha gradually grew a commercial and administrative centre and a sacred place for Hindus. The Kshatriyas of Matottam were related to the Kshatrias of Anuradhapura, Kalaniya and Kathargamam from a very early time.5

Even though there are few fishing villages such as Thalaimannar, Pesalai, Thalvupadu, Pallimunai, Vankalai, Arippu, and Mullikulam, most of the mainland villages are agricultural villages. The Parathavars are occupied in most of the fishing villages. The Kaurava Kurukula people are occupied in most of agricultural villages, such as Periyanagatkulam,Manthai, Ellupitty, Kallikadaikadu, , Parapankandal, Periyapandivirichan, Naruvilikulam, Thirupuri, Mallikainatti, Mathirikeramam, Vanchiyankulam Puthukamam, Thuvarankany, Paddipithanmadhu, Muthalaikuthi, Uiylankulam, Uitharasankulam, Kathankulam, Palaikuli, Sooriyakaddaikadu, Valkaipattankandal, Parikarikandal, Perichakaddu, Kannaddy, Murunkan, Murunkanpitty, pallakaman, Sirukandal, pichakulam, Jeevootham, Periyakunchukulam, Periyamurippu,Sinna kadai , Mannar and so on.

Yalpana Vaipava Kaumuthi, written by Velupallai says that the Kaurava Kurukula people are the highest caste (FUFyNkd;kf;fs;).6 These Kurukula people (Kurukula Maynmakkal) who dwell in more than 40 villages in Mannar and in Manthai are largely agriculturalists from ancient times onwards.7

The early inhabitants of Island of Mannar

Even though Mannar is a small Island, it takes a very important place in the history of Sri-Lanka. From ancient time Mannar was very prominent on account of its nearness to India, its pearl fishery and the Port of Manthai. The Island of Mannar is 18km long and 2km wide. There is a road that connects the mainland and the island of Mannar. It was built by Portuguese. Before that the people used ships, boats and Thappam, that is small boat and so on, to reach to the Island of Mannar and India. It is historically proved that Mannar has one of the earliest settlements in Sri-Lanka. Schurhammer says that there were Karaiyas in the city of Mannar and these received Baptism. He also added that within the interior there were two Karaiyas villages, whose inhabitants were not fishermen but lived on the fruit of the forest.8

The caste name ‘Karaiyas’ is not a common name to be used for all the people who do fishing or who dwell near the coast lands. The caste name ‘Karaiyas’ does not come from the Tamil word ‘Karai’ (fiu) that is sea coast, the word ‘Karaiyas ‘is the corrupted word for ‘Kauravas’. 9 The literal meaning of the word for ‘Kauravas is the descendents of Kuru dynasty.10

Father Antrique Antriquez, the first Parish Priest of the Island of Mannar, a Tamil Scholar says,

“In Mannar, there are two villages of the Christians of the caste of Careas”.

It is said that some historians accepted that the Karaiyas of Mannar became the Catholics in 15th century and they were martyred for the faith.11It is also said that the ancient Nagas and ancient Navigators came through Daniscoti and settled in the Island of Mannar and in Manthai from time to time. The Kurukula people are from the Naga tribes. The Paravar and Kadaiyars were brought by Fr.Antrique Anrriquez in 1560.The indigenous people of Patim of Mannar Island who were Martyred by Sangili, were Kurukula Nagas.(Fr. S. G. Perera : 1941:13)

Hence the earliest settlement in the Island of Mannar is composed of the caste of the Kaurava Kurukula people.

The early inhabitants of the Mantota or Manthai

Mandothari, the wife of Ravana was from Manthai. Mayan, the father of Mandothari and the King of Manthai built the ancient Temple of Thiruketheeswaram to worship Siva. Eelathu poothanthevanar(Thuvarankani) ,Mudinagarayar (Periyanavatkulam) Allirani, Kalisanan the another King of Manthai, Kumarasinghe Mudaliyar(a great poet from Periyanavatkulam) Kurukulanattuthevu (Puthukamam) were from Mathoddam. Archunan married Allirani,the Queen of Mathoddam and lived in Mantota. There is an oldest reference to a Sri-Lankan Tamil speaker and famous poet is found on the oldest Tamil written works dating to the Sangam era called “Eelathu Poothanthevanar” =Poothanthevanar from Eelam (the Tamil name of this island) Eelaththu poothamthevanar was less mythical than Vijayan. His poems are still available to read. The Kurukula people of Mathoddam claim that the above mentioned people were their relatives.

Manthai was one of the Chief ports in Sri-Lanka. It is also said that the Mahathita was one of the International ports in the world. The ruins of Manthai show the ancient civilization of Manthai. If we look into the old history books of Ceylon, India and even China we can come to know the truth that as a result of trade, Manthai and Mannar district enjoyed the highest standard of civilization. In ancient times the town of Manthai was called by many names such as Mahathitapatanam, Mantota, Mathoddam, Eyilpattanam, and Rajarajapuram. Manthai was a flourishing port from the early ages. It is obvious from the different types of pottery revealed at the site of Manthai

The ancient Temple of Thiruketheeswaram which was situated in the town of Manthai show the real history of it. Manthai was a large city thickly populated from early times.12The ancient Temple of Thiruketheeswaram was built by one of the Naga clans namely Ketu clan. This clan Ketu ought to be pronounced as ‘Kiru’. It is significant to note that the Sanskrit word for ‘Priest or Teacher’ is guru and not Kuru. The origin of the word Kuru may be traced to the Dravidian verb Kiru, means ’to incise, inscribe, and draw a picture. It could also be used as a noun. Therefore the ancient Temple of Thiruketheeswaram was built by the Kaurava Kurukula people who were known priest rulers of Manthai.13

There is another claim that the five classes of the artisan castes ruled at Manthai. 14 This claim is not acceptable. Many reputed historians do not accept this as true history. Because the working classes of artisan cannot be the rulers in a country. These five classes of artisans were working or employed under the Kurukula Kings or rulers. The Kaurava Kurukula people were the rulers in ancient times

“The Kauravas or Kurus were the scribes, priests, teachers and the rulers of the proto-Indian society… The priest –rulers were the insiders (cf.Akathiyan) and the working classes were the outsiders (cf.Purathiyan).”15

According to Mddakalappu Manmiyam, the Island of Mannar and Manthai belonged to the Kaurava Kurukula people. In Kalisenan times the Kingdoms of Kurukula Nagars were spread all over Mullaithevu, Manalthedar (Jaffna) and Man-Aru (Mannar). 16 In 14th century, Colombo was under independent King likewise the Manthai was under independent Kings till 500 A.D. 17. So the early inhabitants of Manthai were the Kuru people, that is, Kaurava Kurukulam.

Historical sketches of Mannar and Mathoddam

The ancient Thiruketheeswaram was built by Kurukula Naga people.(Muthuthampipillai:(1915):56,Xavier(1977):8-13) In Kalisenan time the Kurukula Nagas ruled at Mannar. The ancient Tamil Nagas did not come from India. They were in Sri-Lanka when Ceylon was separated from Lamuri continent by heavy waves.18 The Naga tribes Civilized before 300 B.C. using agriculture and irrigation. Some historians say that the Kurukula People of Mathoddam are from the Naga tribe.

Manthai was an ancient urban city mainly occupaied by Tamils most probably the Kurukula people.The highest caste Kurukula people (FUFyNkd;kf;fs;) who dwell in more than 40 villages in Mannar and in Manthai are largely agriculturalists from ancient times onwards.

During the pre-Buddhist period Mahatittha gradually grew a commercial and administrative centre and a sacred place for Hindus.The Kshatriyas of Matottam were related to the Kshatrias of Anuradhapura, Kalaniya and Kathargamam from a very early time. (Ellawala 1969):20). The Velirs of Gathergamam were identified as Kshatriyas who had fish emblem. (Vellavurkopal 2005): 9-10) Likewise the Kurukula people of Mathoddam have this fish symbol. It is called Magaram. (kPd; Nfhl;LUtk;)

The house holds in these villages shall be not impressed for service. This famous commercial centre was thickly populated by Kurukula royal families and merchants. Kurukula people are one of the civilized Naga clan still living in Mannar and Mathoddam.

In Manthai there is a place called Periyanavatkulam. It was once a famous place. There were many educated Arulvedic doctors and pulavars (Poets) lived. Kumarasinghe Mudaliyar a Kurukula Aulvedic doctor and Pulavar was one of the famous persons in British period, lived in Periyanavatkulam.11 There was another person named Ethirmanasinghe mudaliyar who belonged to the Kaurava Kurukula community who lived in Periyanagatkulam. His name, his traditions and culture were mentioned in the Tamil Catholic messenger ‘Sathtiya Vetha Pathugavalan’ which was published on the 4th Saturday July 1891.This Ethirmanasinghe Mudaliyar Salvathor Soosaipillai belonging to the Noble family of Kurukulam.

He inherited a Flag, Umbrella, Alavaddam (It is a kind of fan made by soft articles), Talaipattu (a special way of wearing the hat on the forehead), musical instruments such as natha chinam (drums sets), Thalam (bells rung by hands), and so on. The low caste people can’t use these instruments. The Kurukula people can use these instruments during their ceremonies such as wedding, puberty, and funeral and so on. 12.

The close kith and kens of the Snighe dynasty people are: The sons and daughters of Rosairo Ethirmanasinghe, the retired G.S are Chrisostam, Stanislaus, Philomina Annapupathy, Jeyawathy Maria, and Luthamma. Rev.Fr.M.G.Arulpragasam is the son of Philomina Annapupathy. The son of Singarayer Ethirmanasinghe is Leo Ethirmanasinghe (Retired statistical officer Jaffna). His son is Drivendran Ethirmanasinghe. Daughter of him is Dr .Swarna Suveendran. The sons of Benjamin Ethirmanasinghe are Vimalathas (G.S, Mannar) and Jesuthas. Dr. Anton Cicil, Dr. Anton Anil Dr.Mary Pramila and Agriculture graduate Anton Roy. Mr.P.Amalathas the additional director of education (maths) is the son of Grace, the daughter of Benjamin. There are many students of Singhe dynasty family of Mannar in universities. The barbers and washermen are considered insider people of Kurukula people.13 In Mantota some of them are educated people.

The tradition says that in ancient up to the last King of Jaffna in Tamil society the Kaurava Kurukula people only could assume the Kingship. There is no evidence that govigama or sudra vellalans of Jaffna had Royal status. These Sudra Vellala people should not aspire to dignity of Kingship, (for this would be) like the crow aping the swan. The origin of the Kurukulam or Karaiyar has the line of Kshatriya affiliation rather than fishing. (Rayan, 1993: 99-104)

The background to understand the indigenous people in Mannar

The people who identified themselves as Vellalans with the connection of the Vels or Velirs of the Sangam tribes are not original Veliers.. These velirs’ emblom is fish i.e Maharam. Kurukula people of Manthai (Mathoddam) still use this symbol to identify their cattle. It is a royal emblem. Velirs are the kings of kuru-land.(Kathiravetpillai : (2002) : 1316) Vellalans were called farmers very late. The ancestors of the Vellalans were Sudras and in their ancestry were debarred from the Temple. The plough was the emblem of ulavar i.e Pallans. A child was found in the flood while the Pallan was working in a paddy field of his Master. He took him and named him Vellalan. He brought up him as his brother.Sudra Vellalan wife was wicked lady She was the person who made the pallan as slave.(Pfaffenberger: 1982:55)

When Portuguese came to Sri-Lanka these Vellalans of Kayts and other places of Jaffna were called Parathecikal means foreigners and landless people. They were given lands by Portuguese to do tobacco. Vellalan are not the indigenous people in Sri-Lanka. (P.E.Pieris:(1920):16)Paddy cultivation was invented by Nagars. Giant’s Tank built by Nagas. ( Rajanayagam.C. “Ancient Jaffna.” reprint (1984):82). The ancestors of the Vellalans were Sudras and in their ancestry were debarred from the Temple.19They became hostile to the Tamil community known as Kaurava Kurukula Vamsam.

The early invaders such as Portuguese, Dutch, and British destroyed all the writings and belongings of the Kaurava Kurukula Dynasty people.The latter writers such as Mailvakana Pulavar, Gnanapragasar, Rajanayagam and others who were from the Sudra Vellala caste, tried to avoid the Kurukula Dynasty people and destroyed the real image of them. Their aim was to emerge or raise their caste that is Sudra caste at least up to the level of the Vaisyas. At the beginning the Dutch, Protestant Bishop Kalduvel Maraimalai Adikal were with the Sudra people to raise them from the lower level in India. The Jaffna Sudra Vellalars also joined and cooperated with them to raise themselves from the Sudra level.

In later periods, the Roman Catholic Church also was with the side of them by electing Bishops from the Sudra caste people. There were lot of questions and arguments made by Kurukula Catholics regarding the electing of Catholic Bishops of Jaffna. This Sudra Vellala caste has any connection with the Kings, Nobles and the warriors of the Tamil people. These Sudra vellala people were simple ordinary people.

Most of the writings of the Sudra Vellalar writers show that they are hostile to the Tamil community known as Kurukulam. Only Velupillai mentions that the Kurukula people are the highest caste by saying ‘Kurukula Manmakkal’(FUFyNkd;kf;fs;). He further added that these Kurukula people weren’t fishermen such as Sempadavar and Nulanjar but they were Kings, Nobles, warriors, Landlords, educators and great poets. The other Sudra Vellala writers just ignored the Kurukula dynasty people. Some Sudra Vellala writers did not mention these dynasties. Some Sudra writers degraded the Kurukula people by connecting them with the fishing castes. So everyone should have in mind that the Sudra Vellalars are character assassinators.

Therefore the Kaurava Kurukula people of Mannar, Manthai, and Vanni are the land lords and the Kaurava Thevarkulam and the Varnakulam of Jaffna are the Sea Lords. The Melongi Kurukula people of Jaffna and Manthai are the highly educated people then and now than Sudra Vellalas.

In this background we have to understand the indigenous people of Mannar.

Conclusion

The people who identified themselves as Vellalans with the connection of the Vels or Velirs of the Sangam tribes are not original Veliers. These velirs’ emblom is fish i.e Maharam. Kurukula people of Manthai (Mathoddam) still use this symbol to identify their cattle. It is a royal emblom. Velirs are the kings of kuru-land. Vellalans were called farmers very late. The ancestors of the Vellalans were Sudras and in their ancestry were debarred from the Temple. The plough was the emblem of ulavar i.e pallans. A child was found in the flood while thePallan was working in a paddy field. He took him and named him Vellalan.

When Portuguese came to Sri-Lanka these Vellalans of Kayts and other places were called Parathecikal means foreigners and landless people. They were given lands by Portuguese to do tobacco. Vellalan are not the indigenous people. (P.E.Pieris:1920:16) Paddy cultivation was invented by Nagars. Giant’s Tank built by Nagas. The ancient Temple of Thiruketheeswaram was built by the Kaurava Kurukula people who were known as priest rulers of Manthai. The Kurus were the traditional Ksatriya tribe of the upper Ganga basin.(Gen’ichi Yamazaki 2005:74)

The Kauravas or Kurus were the scribes, priests, teachers and the rulers of the proto-Indian society… The priest –rulers were the insiders (cf.Akathiyan) and the working classes were the outsiders (cf.Purathiyan).” These five classes of artisans employed under the Kurukula Kings or rulers. The Kaurava Kurukula people were the rulers in Manthai in ancient times.

In Kalisenan times the Kingdoms of Kurukula Nagars were spread all over Mullaithevu, Manalthedar (Jaffna) and Man-Aru (Mannar). In 14th century, Colombo was under independent King likewise the Manthai was under independent Kings till 500 A.D. So the early inhabitants of Manthai were the Kuru people, that is, Kaurava Kurukulam.It was only after the coming of the British censuses in the nineteenth century that the Sudra (Cooli) Vellalans began to claim for themselves a higher rank in the sastric terms. (Bryan Pfaffenderger:( 1982):33)

The Kurukula people of Mannar,Mathoddam ,Jaffna,Batticallo and other Tamil places tried their best to avoid marrying the Sudra vellalans. Sudra vellalan want to classify the Kurukula highest caste as fishers. As Naga people the Kurukula people also have both agrarian and maritime culture. Kurukula society remained mainly agrarian and conservative with slow urban development. Ksatriya group of Kurus still exist in Mantota. Achchankula Vellalans and Sandars are fishermen. This fishing Vellalans marry the other Sudra vellalans of Nanattan areas. Most of Vellalars of Nanattan areas came from Pannaivedduvan. The settlers of Pannaivedduvan were Otters. They came from the north central and North-Western Provinces. They are chiefly engaged in the quarrying of stones, in the sinking of wells and in the construction of tank bunds. (Navaratnam: 1964: 178)

The Saiva Kurukula people of Jaffna are more pure than worldly Sudra Vellalans. The Nalaver and Pallars are hardly more impure than the peninsula’s very worldly Siva Sudra vellalans.The Saiva Sudra Vellalans abstain from beef eating but they eat other kinds of meat and sacrifice animals’ blood to their deities such as Kali and Amman. The climax of Kathavaran Koothu is sacrificing a life. Hence the Sudra Vellalans purity is questionable.

The Invaders gave lands thus they become wealthy people in Jaffna peninsula. That’s all. They can’t clime for higher status. In order to rise up from the lower strata they became character assassinators and tried their best to interpret the original history of Sri-Lankan Tamils as they like. Character assassination is worse than other assassinations. According to Yalpana Vaipava Kaumuthy the people who identified themselves as Vellalas are a mixed crowd. The writer of the Yalpana Vaipava Kaumuthy says that these Sudra Vellala people married the Koviyars, ottars, Parathesikal, Portuguese, Pallars, Nadduvars (the drummers) and so on.

Most of the writings of the Sudra Vellala writers show that they are hostile to thr Tamil communities known as Kurukulam Only Velupallai mentions that the Kurukula people are the highest caste by saying ‘Kurukula Maanmakkal’. He further adds that the Kurukula people weren’t fishermen such as Sempadavar and Nulanjar but they were Kings, Nobles, warriors, Landlords, educators and great poets. The other Sudra Vellala writers just ignored the Kurukula dynasty people. Some Sudra Vellala writers did not mention these dynasties. Some Sudra Vellala writers degraded the Kurukula people by connecting them only with the fishing castes.

The Nagas are, Maravars, Aruvalar, artisans and Parathavars.(Kanakashabai (1997) : 42 ) Maddakalappu poorveeha sarithiram i.e. ancient history of Batticaloa mentioned that the Kurukula people are also one of the Naga tribes. (Kamalanathan (2005): 14, 35, 42) J.T Xavier says that the Aruvalar is the Kurukula people. (J.T.Xavier (1977): 183) Nagas were the ancestors of the Tamils. They were in religion Saivaits. They were highly civilized from the ancient time onwards. The Kurukula Nagas established their kingdom in Manal Thidar (Jaffna) Mann-Aru (Mannar) and in Mullaithevu. These places Manal Thidar, Mullaithevu and Mannar were the land of the Kurukula people. Right from the beginning the Mannar including Manthai were occupied by the Kaurava Kurukula people and ruled by the Kurukula Kings. The Kurukula people are the indigenous people of Mannar and Manthai.

If anyone goes with the Sudra Vellala people’s ways of understanding the history of the Tamils, he or she can’t understand the real genuine indigenous people of Mannar and Mathoddam. The Sudra Vellalas tried their best to degrade the Kaurava Kurukula people, the highest caste by connecting them only to the fishing communities. Therefore all should have in their mind that the Sudra Vellalas is really hostile to the Kaurava Kurukula community.

It is also noted that the Sudra Vellalas of Jaffna boast that they had lands and slaves. But the Kurukula people of Mannar, Mullithavu, Manthai and Vanni had lands and slaves more than the Jaffna Sudra Vellalas. In Vanni there are also Kurukula Vanniyars doing cultivation.20 The Vellalas were called cultivators only later. (Rajanayagam.C. “Ancient Jaffna” Reprints, (1984): 82) .The sudra Vellalars who connect themselves with the Velirs of India are not the original farmers.

The cultivation was begun by the Naga people. It is said that the Naga people invented cultivation and built the Giants tank in Manthai,

“The existence of the extensive ruins at Manthai and of the celebrated Giant’s tank close to it., are indubitable signs of an immense population well advanced in agriculture…, The giant’s tank must ,therefore ,have been the work of the remotest times, constructed probable by the ancient Nagas, who were the people then living in the part of Ceylon.” 21

The Kurukula people have the connection with the Nagas who were civilized human beings from the ancient times onwards.

Is there a big tank to do cultivation in Jaffna? It is very strange that the Sudra Vellalas claim to be high caste just because they have lands. They were the hired workers for cultivation. In later periods the Sudra Vellalas might have grabbed or looted the lands and important things of Kings and the Nobles. Even though they grabbed the lands of the Kings they have a few plots of lands.

In 14th century Colombo was under independent Kings;likewise the Manthai was under independent Kings till 500 A.D. The ancient Naga tribes of Kurukula people who dwell in Mannar and in Manthai from ancient times are traditionally agriculturists. According to Mahavansa the Nagas were dominating the western and the Northern parts of Ceylon. That was why North Ceylon was called Nagadipa. According to the Mahabharata, the Nagas who were living in various parts of Ceylon were highly civilized. It is also to be noted that the Kurukula people are called Illa people.

The Nagas and Yakkhas were the original Tamils and were the highest castes and civilized people in Ancient times. The invaders and the Sinhalese considered the Nagas and the Yakkhas were asuras. This kind of thinking helped the Sudra kooli Vellalans to come forward in Tamil places to rice up themselves. The Nagas and Yakkhas are human beings. It is said that the Kaurava Kurukula people, Parathavars, Maravars and Artisans are the real Naga people. The Kurukula people are the Kings,Nobles, Scribes, Teachers and warriors of Tamils. The cooli Sudra Vellala people wanted to hide all the facts of ancient Tamils of Eelam.

According to some historians the Island of Mannar and Mathoddam belonged to the Kurukula people. It is understood and accepted by some historians in India and in Sri-Lanka that the Nagas and the Yakkhas were the indigenous inhabitants in India and in Sri-Lanka. Right from the beginning they are in Sri-Lanka and especially in Mantoal and in the Island of Mannar. The Nagas were the earliest inhabitants in Mantota. Kurukula Nagas are the highly civilized, highest and well educators in Manthai and in Mannar than Sudra Vellans of Jaffna then and now.

——————
Footnotes

1. Velupillai.K., “Jalpana Vaipava Maumuthy.” (1918):8 Thanapachiyam.K.:Maddakalappu Manmiyam.” (1993):3
2. Statistical report of Mannar 2005
3, Puvirajasingha.J., “The Singhe Dynasty in Jaffna Pattam”: (1968):76
4. Interview: Mr. S Leo Ethirmannasinghe, retired Statistical officer Jaffna Kachckari.
5. Ellawala.H., “Social History of Early Ceylon”: (1969): 20
6. Velupillai .K.,”Yalpana Vaipava Kaumuthy.” (1993):177-181
7. Raghavan M.D. “Tamil culture In Ceylon.” (1968):143
8. Schurharmmre.G. “Francis Xavier, His life His time” Vol. II.(1977):348
9. Raghavan.M.D., “The Karava of Ceylon.” (1961): 158
10. Lifco. Tamil. Tamil, English, Dictionary. 2nd print (1977):259
11. Antoninus. A .J. B. “The Martyrs of Mannar” (1944):13-15
12. Raghavan.M.D. “Tamil culture in Ceylon.”(1968):67
13. Xavier.J.T. “The Land of Letters” (1977):8-13
14. Rajanayagam.C. “Ancient Jaffna” reprints (1984):15
15. Xavier.J.T. “The Land of letters” (1977):8-11
16. Thanapakiyam.G. “Maddakalappu Manmiyam.” (1993):3-5
17. Kaditrinton. H.W., “Ilankaiyen Surukka Vatalaru: (1939):29
18. Jeganathan.T.J., “Kavinthamil”:(2004):5-7
19. Holmes. w. Roberts. “Jaffna 1980.” (1980):227
20. Raghavan.M.D MD. “The Karava of Ceylon Society and culture” (1961): 20
21. Rajanayagam.C. “Ancient Jaffna.” reprint (1984):82

REFERENCES

ANTONINUS, A. J. B.,“The Martyrs of Mannar” (From Authentic Documents) 4th Centuey, St Joseph’s Catholic Press, Jaffna, 1944.
MATHAS, ANTON. , “The Catholic Church in Jaffna”, The United Merchants, Colombo, 1992
PUVIRAJASINGHE, JOHN. , “The Singhe Dynasty in Jaffnapattanam from A.D 1400 to 1962”, Times of Ceylon Colombo, 1968.

PERNIOLA, V. , “The Catholic Church in Sri-Lanka, The Portuguese Period 1505- 1565”, vol.I Tisara Prakasakaya Ltd. Sri-Lanka 1989

PFAFFENBERGER, B., Caste in Tamil Culture the religious foundations of Sudrs Domination in Tamil Sri-Lanka Vikas Publishing House PVT LTD, New York, 1982
RAJANAYAGAM. C., “Ancient Jaffna”, Asian Educational Services, New- Delhi. Reprinted, 1984
Raghavan, M.D,”Tamil Culture in Ceylon”, Kalai Nilayam LTD. Colombo 1971

—————— “The Karava of Ceylon” Society and culture, K. V. G. De. Silva and sons, Colombo,1961
VELUPILLAI, MES, G., “Yalpana Vaipana Kaumuthy” Jayasri Radha peedanthera salai, Jaffna, 1918

XAVIER, J.T., “The Land of Letters” Skyline printers, Trincomalee, 1977

Reply – Quote