Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

கரம்பொன் செபஸ்தியார் ஆலயம் மறைக்கப்பட்ட வரலாறு

கரம்பொன் செபஸ்தியார் ஆலயம் , கரம்பொன் தெற்கை சேர்ந்த திமிலருக்கும், வடக்கை சேர்ந்த , கேரளா “வேளாளருக்கும் ” சொந்தமானது. அக்கோயில் , இன்றைக்கும் உள்ள ஆதரத்தின்படி ( யாழ் – பெரிய கோவில் ஆவணபகுதியில் உள்ளது ) மீனவர்களின் / திமிலரின் வருமானத்திலேயே கோவிலின் பெரும்பகுதி கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட பின், பெரும்பகுதி பணத்தை இறைத்தவர்களை, ஆலயத்துக்குள் விட மறுத்தார்கள் கேரளத்து வெள்ளாளர் . அவர்களுக்கு அதரவாக , அதே சாதியை சேர்ந்த- அதே ஊரைச் சேர்ந்த பிஷப் மற்றும் பங்கு சுவாமியாரும் இயங்கினார்கள் .
அதன் பின் மீனவசமூகம் , தனக்கென ஒரு ஆலயத்தை கட்டியது . இந்த நிகழ்வை மெலிஞ்சி முதன் பாடுகிறார் இங்கே. இன்று கரம்போனின் கேரளா வெள்ளாளர் , கனடாவில் தொடர்கிறார்கள் தமது சாதி வெறியை . செபஸ்தியார் ஆலயம் இப்போ ஒடுக்கபட்ட சாதிகளின் அலையாமாக இன்று உள்ளது . (இதே போன்று தான் நாரந்தனை புனித . பேதுறுவார் ஆலய வரலாறும் . நளவர் சமூதயத்தின் உளைப்பில் கட்டிய கோவில் , வேளாளரால் பறிக்கபட்டது. திமிலரைபோல , அவர்களும் தமக்கென பரலோக ராசா ஆலயத்தை கட்டினார்கள் ).

வீடியோ பாடலை காண கீழே சொடுக்கவும்

கரம்பொன் செபஸ்தியார் ஆலயம்

Advertisements

சிறுவர் போர் வீரர்களின் உளவியல் பிரச்சினைகள்

(பகுதி 3)

பேராசிரியர்.தயா சோமசுந்தரம் மற்றும் கலாநிதி.எம்.ஜயதுங்க

அறிவாற்றலின் மேம்பாடு

சிறுவர்களை இராணுவ நோக்கங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்வது மற்றும் எதிர்த்து போராட அவர்களை முன்னிலையில் வெளிப்படுத்துவதும், அவர்களின் அறிவாற்றல் மேம்பாட்டுக்கு சிக்கலாகிறது. சிறுவர்களுக்கு போதனை செய்து அவர்களை கொலைகள், அழிப்புகள், மற்றும் சித்திரவதைபோன்ற செயல்களை செய்யும்படி கட்டாயப்படுத்துவதனால் அவர்களின் அறிவாற்றல் அமைப்புகள் ஒரு நோயியல் மாற்றத்துக்கு திரும்புகின்றன. பிரச்சினைகளை தீர்க்கும் செயற்பாடுகள் மறைந்துபோவதுடன் தர்க்கரீதியான சிந்தனைகளும், சித்தாந்தங்களால் அடக்கி ஆளப்படுகின்றன. சிந்திப்பதற்கு பதில் செயற்படுத்துவதற்கே அவர்களுக்கு கற்றுத்தரப் பட்டுள்ளது. அவர்கள் தங்கள் மூத்த தலைவர்களின் கட்டளைக்கு கீழ்படிந்து மிகச்சரியான ஒரு கொலை இயந்திரத்தை போலவே செயற்படுகிறார்கள். பயற்சிக் காலத்தில் அவர்கள் செலவழித்த நேரத்தின்போது அவர்கள் காடுகளில் மறைந்திருத்தல், பதுங்கு குழி கடமையை நிறைவேற்றுவது மற்றும் பலவகையான தாக்குதல்களில் பங்கு கொள்வது போன்றவைகளை மட்டுமே செய்துவந்ததால் பயனுள்ளவைகளைக் கற்கும் வாய்ப்புகள் தீவிரமாக மட்டுப்படுத்தப் பட்டுவிட்டன.

ரஷ்யன் உளவியலாளர் லெவ் வாகொட்ஸ்கியின் சமூக கலாச்சார கொள்கை வலியுறுத்துவது, சிறுவர்கள் மற்றும் சமூகத்தில் உள்ள அதிகம் அறிவுடைய அங்கத்தவர்கள் இடையே கூட்டுறவான ஒரு உரையாடலின் முன்னேற்றமான பங்கினைப்பற்றியே. சிறுவர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் இராணுவ பயன்பாடு என்பன சிறுவர்களை, சமூகத்தின் அறிவுடைய அங்கத்தவர்களான ஆசிரியர்கள்,குருமார்கள், மற்றும் ஏனைய சமூகத் தலைவர்கள் போன்றவர்களுடன் இணைவதை மட்டுப்படுத்துகின்றன. இந்த சிறுவர் போராளிகளுக்கு கல்வி அல்லது அறிவுசார் தூண்டுதல்கள் எதுவும் கிடைப்பதில்லை. வாகொட்ஸ்கி தெரிவிப்பது சிறுவர்கள் இந்த இடைத்தொடர்புகள் மூலமாக தங்கள் சமூகத்தின் கலாச்சாரங்களை கற்றுக் கொள்கிறார்கள் என்று.

சிறுவர் போராளிகளுக்கு இந்த இடைத்தொடர்புகள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதுடன் அவர்களினது உலகம் போராட்டம் மற்றும் வன்முறை என்பனவற்றுடன் மட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றன. இந்தச் சிறுவர்களுக்கு எழுதவும் மற்றும் வாசிக்கவும் மட்டுப்படுத்தப்பட்ட நேரமே கிடைப்பதால் அவர்கள் கலாச்சார கருவிகளை இழந்து விட்டிருக்கிறார்கள். அவர்களது அகராதி பெரும்பாலும், யுத்தம் மற்றும் வன்முறை என்பனவற்றை அடிப்படையாக கொண்ட பதங்களையே கொண்டிருக்கின்றது. படைக் கலைப்பு செய்யப்பட்ட சிறுவர்களுக்கு வரையறுக்கப்பட்ட சொல்லகராதி மற்றும் மொழித் திறமை கிடைத்திருக்கிறது. வரையறுக்கப்பட்ட சொல்லகராதி அறிவுடன் இணைந்த சிறுவர்கள் காலப் போக்கில் வளமான சொல்லகராதி அறிவுள்ள அவர்களது சகாக்களைக் காட்டிலும் மிக மெதுவாகத்தான் முன்னேறுவார்கள். அநேகமான இளம் சிறுவர் போர்வீரர்களால், வாசித்து புரிந்துகொள்வது அல்லது கணிதச் சொற் பிரச்pனைகளை தீர்ப்பது, போன்ற அறிவாற்றல் பணிகளை அவர்கள் கிளர்ச்சியாளர்களுடன் இருந்த காலத்தில் அவர்களால் செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது. அநேகமான சிறுவர் போராளிகளிடம் பகட்டுக்காக கைக்கடிகாரங்கள் இருந்தபோதிலும் அவர்களால் நேரத்தை வாசிக்க இயலாது.

கற்றல் சிரமங்கள்

புனர்வாழ்வளிக்கப்பட்டதும் சிறுவர் போராளிகள் திரும்பவும் பாடசாலைகளுக்கு செல்ல ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் பாடசாலைச் சூழலிருந்து பல வருடங்களாக வெளியேறி இருந்தார்கள். அவர்களது அறிவாற்றல் மற்றும் கற்கைப்பணிகள் ஒரு குறிப்பிடத்தக்க மட்டத்தில் போரினால் மிகமோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. இத்தகைய முரண்பாடுகள் இருந்த போதிலும் பிள்ளைகள் புதிய பல பணிகளை கற்றுக் கொள்வதற்காக படிப்பதற்கு போராடி வருகிறார்கள். ஆனாலும் யுத்த நினைவுகள் அவர்களைவிட்டு முற்றாக நீங்கிவிடவில்லை. உணர்ச்சிகரமான பிரச்சினைகளில் சந்தேகத்துக்கிடமான பதட்டம் சிறுவர்களிடம் இருப்பதை அவர்கள் எளிதில் நிரூபித்தார்கள்.

முன்னாள் சிறுவர் போர்வீரர்களிடத்தில் பரந்த அளவிலான கற்றல் பிரச்சினைகள் இருப்பதை ஆசிரியர்கள் அவதானித்தார்கள்.அவர்களின் வழிகாட்டிகளிடமிருந்து பரந்த அளவிலான கற்கைக்கான நேரத்தை அவர்கள் தவறவிட்டிருந்தார்கள், மற்றும் துரதிருஷ்டவசமாக அவர்கள் முக்கியமான நேரத்தை போராளிகளுடன் கழித்திருந்தனர். எழுதுவதற்கும், படிப்பதற்கும், மற்றும் கணக்கு போடுவதற்கும் பதிலாக அவர்களுக்கு எப்படி சுடுவது மற்றும் கொல்வது என்றே போதிக்கப்பட்டது.

சில சிறுவர்களுக்கு கவனத்தை செலுத்துவது பிரச்சினையாக உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் ஞாபக சிரமங்களுக்கு அவர்கள் அனுபவிக்கும் உளவியல் நெருக்கடிகள் காரணமாக இருக்கலாம். வகுப்பறைகளில் பாடங்களைக் கற்பதற்கு அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். சில பாடசாலைகளில் அவர்களின் கடந்தகால யுத்த அனுபவங்களின் வரலாற்றை காரணங்காட்டி சக மாணவர்கள் அவர்களை நிராகரிப்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முன்னாள் சிறுவர் போராளிகளை சமூகங்கள் முற்றாக ஏற்றுக் கொண்டுவிடவில்லை. சமூக நிராகரிப்புக்கு முகம் கொடுக்கும்போது சிறுவர் போர்வீரர்கள் சங்கடம், குழப்பம், மற்றும் அவமானம் போன்றவற்றை அனுபவிக்க நேருகிறது, மேலும் அது கைக்கு கை மாறி அவர்களின் பாடசாலையிலுள்ள சக மாணவர்களின் பின்னால் சென்று நிற்கிறது. சிலர் மோசமான உந்துதல் காரணமாக பாடசாலைகளில் கோபத்தையும் வெறுப்பையும் காண்பிக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படும் சிறுவர்கள் வெட்கம், ஆவல், மற்றும் சுயமதிப்பை தாழ்வாக மதிப்பிடுவதால் எற்படும் உதவியற்ற நிலை,மற்றும் தாழ்வான சொந்த எதிர்பார்ப்புகள், என்பனவற்றை மீளவும் அடைகிறார்கள்.

நிபுணர்கள் கல்விதான் சமூக ஒருங்கிணைப்புக்கான சக்திமிக்க ஒரு அமைப்பு மற்றும் புனர்வாழ்வுக்கான ஒரு கருவியின் வடிவம் என்று நம்புகிறார்கள். எனவே போரினால் பாதிப்படைந்த அநேகமானவர்களுக்கு வெளிச்செல்லும் ஒரே வழியாக இருப்பது கல்விதான். எனினும் மேலதிக ஆய்வுகளிலிருந்து கண்டறிந்திருப்பது, பெரும்பான்மையான சிறுவர்கள் கல்விக்கான வழியில் அதிக நன்மைகளைப் அடைந்தாலும், சில முன்னாள் சிறுவர் போர்வீரர்கள் தங்கள் கல்வியை தொடர்வதில் ஆர்வமற்று இருக்கிறார்கள் என்று.

கற்றல் உத்திகளுக்கான பயிற்சி அல்லது சிகிச்சை போன்றன உட்பட பொருத்தமான உதவி கற்றல் சிரமங்களுக்கு ஆளாகும் இந்த முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஒப்பீட்டளவில் சில அடிப்படை கல்வியறிவு மற்றும் அரம்ப மட்ட தகுதிகள் என்பனவற்றை ஒரு குறுகிய கால அளவில் அடைவதற்காக அவர்கள் திரும்பவும் செயல்படக் கூடியதாக இருப்பதால்,கல்விப் பாலமான திட்டங்கள் இந்த அமைப்பில் நன்கு செயல்படும். கல்விப் பாலத் திட்டங்கள், பிள்ளை அடுத்த கற்றல் தெரிவை நோக்கி நகரக்கூடிய விதத்தை அடிப்படையாகக் கொண்டு திறமையான முறையில் உருவாக்கப்பட வேண்டும்.அநேகமான விடயங்களில் சிறுவர்கள் தொழிற்பயிற்சியை நோக்கி முன்னேறுகிறார்கள். இப்போதுள்ள தொழிற்பயிற்சிகள்; விவசாயம், கால்நடை வளர்ப்பு, வெதுப்பு, தச்சுவேலை, கைவினை, கட்டிடவேலை, இயந்திரவியல் ,தையல்,மற்றும் பலவகையான இதர தொழில்களில் சிறுவர்கள் தொழில் அனுபவம் பெறுவதில் உதவக்கூடியனவாக உள்ளன.

நடத்தை சிக்கல்கள்

முன்னாள் சிறுவர் போராளிகள் போர் தொடர்பான வன்முறையின் கொடுமையான காட்சிகளை வெளிப்படுத்தியிருப்பதால் ஒரு வரையறைக்குட்பட்ட நடத்தை சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். அதற்கு மேலதிகமாக மோதலின் பின்னான காரணிகள், பாதிக்கப் படக்கூடிய மோசமான நடத்தைகளின் வெளிப்பாட்டை மாறுபாடான கோணங்களில் பங்களிப்பு செய்யவும்கூடும். லெவ் வாகொட்ஸ்கியின் கூற்றுப்படி, சிறுவன் வாழும் அவனது கலாச்சாரம் மற்றும் சமூகம், அவனது மாற்றம் காரணமாக பெருமளவில் பாதிக்கப்படுகிறது. வாகொட்ஸ்கி சிறுவன் கற்றுக்கொள்ளும் முக்கிய பாடம் சமுக ஒருங்கிணைப்பு மூலமே ஏற்படுகிறது என நம்பினார்.

பல வருடங்களாக சிறுவர் போராளிகள் தங்கள் நேரத்தை வளர்ந்த போராளிகளுடன் கடுமையான சட்டதிட்டங்களின் கீழ் கழித்துள்ளார்கள். அந்த சிறுவர்கள் தங்களின் உளவியல் நலன்களுக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய முரண்பாடான போராட்ட சூழ்நிலைகளையே தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார்கள். அந்த சிறுவர்களின் சிந்தனை வடிவம்,மற்றும் அறிவாற்றல் அமைப்புகள், மிகவும் தீவிரமான வன்முறையான திசையை நோக்கித் திரும்பிவிட்டது. சிறுவர்கள், கேள்விகள் எதையும் கேட்காமலே அட்டூழியங்களைப் புரிவதற்கு போதிக்கப்பட்டுள்ளார்கள். தங்கள் நடத்தையில் மோசமான மாற்றங்களை ஏற்படுத்திய இருண்ட யதார்த்தத்துக்கு அவர்கள் சாட்சியாக இருந்துள்ளார்கள். கடந்த காலங்களில் அட்டூழியங்களைப் புரிந்துள்ள சிறுவர்களின் மனநல சுகாதார பிரச்சினைகள் பொருத்தமான முறையில் தீர்க்கப்படாவிட்டால், அவர்களின் நடத்தையில் கோளாறுகள், அல்லது சமூக விரோத ஆளுமை கோளாறுகள், மற்றும் போதை மருந்துக்கு அடிமையாகும் பிரச்சினைகள் போன்றவவை உருவாவதற்கான அதிகளவு ஆபத்து உள்ளது.

நேபாளத்தில் கோர்ட்டும் அவரது குழுவும் 2008ல், மோதலின் பின்னான காரணிகள் அதாவது அதனால் ஏற்பட்ட களங்கம், மோசமான மனநிலை வெளிப்பாடுகளை உருவாக்குவதற்கான பங்களிப்பினை வழங்கக்கூடும் என்கிற முடிவுக்கு வந்தார்கள். அவர் மாதிரிக்கு எடுத்துக் கொண்ட முன்னாள் சிறுவர் போராளிகள், அதிர்ச்சிகரமான நிகழ்வுகளின் வெளிப்பாடுகளை கட்டுப்படுத்திய பின்பும் ஒப்பீட்டளவில் மன அழுத்தம் மற்றும் பி.ரி.எஸ்.டி போன்றவற்றுக்கு குறிப்பிடத்தக்களவு உயர் விகிதத்திலான நோய் அறிகுறிகளைக் காண்பித்தார்கள்.

2010ல் ஆராய்ச்சியாளர் பெற்றான்கோட் முன்னாள் சிறுவர் போராளிகளிடத்தில் உளவியல் சரிசெய்தலை ஆராய்ந்து ஒரு ஆய்வினை மேற்கொள்வதற்காக சியாரலியோனில் உள்ள ஆண் மற்றும் பெண்களான முன்னாள் சிறுவர் போராளிகளான 156 பேரை பயன் படுத்தினார். 2 வருடங்களுக்கு மேலாக அவர்களை கண்காணித்தபோது, யுத்தத்தின்போது காயமடைந்த அல்லது மற்றவர்களைக் கொன்ற இளைஞர்களது விரோதப்போக்கான மனநிலை அதிகரித்து இருப்பதாக விளங்கியது. அறிக்கைகள் தெரிவிப்பதின்படி உகண்டாவில் உள்ள முன்னாள் சிறுவர் போராளிகள், படைக்கலைப்பிற்கு பின்னர், பல்வேறு வகையான பழக்க வழக்க பிரச்சினைகளுக்கு உள்ளானதாகவும் அவர்களில் சிலர் சமூக விரோதச் செயல்களுக்காக தண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.குலு மாவட்டத்தில் உள்ள இளம் குற்றவாளிகள் பிரிவில் உள்ள கைதிகளில் 70 விகிதமானவர்கள் முன்னாள் சிறுவர் போராளிகளாவர். உகண்டாவில் உள்ள முன்னாள் சிறுவர் போராளிகள் கற்பழிப்பு, தாக்குதல், மற்றும் கொள்ளை, போன்ற சம்பவங்களில் தொடர்புபட்டதால் தண்டனைக்கு ஆளாகியுள்ளனர்.

உளவியலாளர் யூரி புரௌண்பென்பிரீனர் விளக்கியதன்படி சமூகத் தொடர்புகள் பிள்ளைகளின் நடத்தையில் ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. சமூக உறவுகளின் உட்பொதிவு தொடர்பான கோளங்கள், சமூக சூழலியலில் பகுப்பாய்வு செய்வதற்கான அடிப்படை கூறுகளாக தனிப்பட்ட நடத்தைகள் மற்றும் நலன்களையே தீர்மானிக்கிறது. இந்த சிறுவர்களை கடத்திச்சென்று முகாம்களில் வைத்திருந்த வேளைகளில்,ஆரோக்கியமான சமூக உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு அவர்களுக்கு ஒரு வழியும் இருக்கவில்லை.

சிறுவர் போராளிகள் மற்றும் சமூகத்தில் அவர்களை மீள ஒருங்கிணைப்பதில் உள்ள சிக்கல்கள்

முன்னாள் சிறுவர் போர்வீரர்களை மீள ஒருங்கிணைப்பது சவாலான ஒரு விடயம். சிறுவர் போராளிகள் அநேகமாக உளவியல், மற்றும் சமூகவியல், சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். சிலவேளைகளில் அவர்களது சமூக அங்கத்தவர்கள் அவர்களது யுத்தகால நடவடிக்கைகளையிட்டு அச்சம் கொண்டு அவர்களை ஊரைவிட்டே ஒதுக்கி வைக்கிறார்கள். இந்தப் பிள்ளைகளில் சிலர் அவாகளது உறவினர்களை கொலையோ சித்திரவதையோ செய்திருக்கலாம். இந்தக்காரணிகள் சிறுவர் போராளிகளை திரும்பவும் சமூகத்துடன் மீள ஒருங்கிணைப்பது, மற்றும் அர்த்தமுள்ள மற்றும் உற்பத்தியான வாழ்க்கையை வாழ்வதை தடை செய்யலாம்.

ஆபிரிக்கா, ஆசியா,மற்றும் இலத்தீன் அமெரிக்கா நாடுகளில் மேற்கொண்ட ஏராளமான ஆய்வுகள் தெளிவு படுத்துவது, முன்னாள் சிறுவர் போராளிகள் சமூகத்தில் மீள ஒருங்கிணைக்கப் படும்போது இதுபோன்ற சவால்களை எதிர்நோக்குகிறார்கள் என்று. சில நாடுகளில் மோதல் இன்னமும் நிலவுகிறது, மற்றும் விடுதலையான சிறுவர் போராளிகள் இன்னமும் கிளர்ச்சியாளர்களால் திரும்பவும் பிடிபடும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி உள்ளதுடன், அதிகாரிகளின் அடக்குமுறை, மற்றும் கடந்தகால அட்டூழியங்களுக்காக அவர்களின் சமூகத்தவர்கள் அவர்களைத் தாக்க முயற்சிப்பது, போன்ற ஆபத்துக்களுக்கும் ஆளாகி உள்ளார்கள்.

உகண்டாவின் குலு மாவட்டத்தில் உள்ள சிறுவர்களை காப்பாற்றுங்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், 2004 – 2005ல், சுமார் 300 முன்னாள் சிறுவர் போராளிகளைக் காப்பாற்றிய பின்னர் கண்டது, அவர்கள் மீள ஒருங்கிணைக்கப் படவேண்டிய சமூகத்தை சோந்த யாரும் அங்கு காணப்படாததையே. சரணடைந்த அல்லது பிடிபட்ட சிறுவர் போராளிகளை அல்ல தண்டிக்க வேண்டியது, சிறுவர் போராளிகளை சோப்பதற்கும், பயிற்சி வழங்கி அவர்களை சிறுவர் போர்வீரர்களாக மாற்றுவதற்கும் பொறுப்பாக இருந்தவர்களைத்தான் யுத்தக்குற்றவாளிகளாகக் கருதி தண்டிக்க வேண்டும், என்று வலியுறுத்த வேண்டும். சரணடைந்த அல்லது பிடிபட்ட சிறுவர் போராளிகளை, குற்றவாளிகளைப்போலவோ அல்லது இளங் குற்றவாளிகளைப் போலவோ நடத்தக் கூடாது, ஆனால் பொருத்தமான உளவியல் சிகிச்சை,சமூக பொருளாதார, மற்றும் கல்வி வாய்ப்புகளை புனர் வாழ்வாக வழங்க வேண்டும். சமூகத்துடன் சிறுவர் போராளிகளின் மீள் ஒருங்கிணைப்பு, உலகின் பல நாடுகளில் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

1995 முதல் 1997 வரை இடம்பெற்ற அங்கோலாவின் படைக்கலைப்பு நடவடிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றிலேயே மிகவும் விரிவான ஒரு நடவடிக்கை.ஒருவேளை அதுதான் முதல் தடவையாக சிறுவர்களை சமாதான நடவடிக்கைகளில் தனித்தன்மையாக சேர்த்துக் கொள்ளப்பட்ட செயல்பாடு என்றும் கூறலாம்;. அதேவேளை 1994 லுசாக்கா விதிப்படி வெளிப்படுத்தப் படாவிட்டாலும்,அவர்களது படைக்கலைப்பு மற்றும் மீள ஒருங்கிணைப்பு என்பன சமாதான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைக்கப்பட்ட ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட முதல் தீர்மானத்துக்கு முன்னுரிமையளித்து பிரகடனப் படுத்தப்பட்டது. உள்ளுர் சிவில் சமூக வலையமைப்புகளுடன் ஏற்படுத்திய கூட்டு,அநேக சிறுவர்களுக்கு தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு சாத்தியமான வழியை அமைத்தது.

மோதலின் பின்னான அனுபவங்களைப்பற்றி மேற்கொண்ட ஒரு நீண்டகால ஆய்வின்படி பதிவு செய்யப்பட்டிருப்பது, குடும்ப ஆதரவு, மற்றும் பொருளாதார வாய்ப்பு போன்ற மோதலின் பின் அனுபவங்கள் மனநல ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றி உள்ளது என்பதை, மீள் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட 39 மொசாம்பியன் ஆண்களை 16 வருடங்களின் பின்னர் மீண்டும் நேர்காணல் செய்தபோது அறிய முடிந்தது என்று.மோதலின் பின்னான புனர்வாழ்வு முன்னாள் சிறுவர் போராளிகளின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாகும்.அதிர்ச்சியின் பாதிப்பிலிருக்கும் இந்த சிறுவர்கள் அதிலிருந்து மீண்டு உற்பத்தி திறன் கொண்ட அங்கத்தவர்களாக சமூகத்துடன் மீள ஒருங்கிணைவதற்கு, சமூகமானது அவர்களைப்பற்றிய நல்லெண்ணங்களைக் கொண்டிருப்பதுடன் அதற்காக ஒரு ஆரோக்கியமான சூழலையும் உருவாக்க வேண்டும். ஆராய்ச்சியாளரான பெற்றன்கோட்டின் கண்ணோட்டத்தில்,முன்னாள் சிறுவர் போராளிகளின் கடுமையான யுத்த அனுபவங்கள்,நீண்டகால பின்விளைவுகளைக் கொண்டிருக்கும்,ஆனால் இந்த விளைவுகளின் இயல்பும் மற்றும் அதன் விரிவாக்கமும் மோதலின் பின்னான ஆபத்தினதும் மற்றும் பாதுகாப்பு காரணிகளினதும் தாக்கத்திலேயே தங்கியிருக்கின்றன. அநேக நிபுணர்கள் சிறுவர் போராளிகளின் மீள் ஒருங்கிணைப்பு மூன்று கூறுகளை வலியுறுத்துவதாக முதன்மைப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள் அவையாவன: குடும்ப மீள் ஒருங்கிணைப்பு, சமூக – உளவியல் ஆதரவு, கல்வி மற்றும்பொருளாதார வாய்ப்புகள் என்பனவே.

மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

சிறுவர் போர் வீரர்களின் உளவியல் பிரச்சினைகள்

(பகுதி 2)

– பேராசிரியர்.தயா சோமசுந்தரம் மற்றும் கலாநிதி.எம்.ஜயதுங்க

உகண்டா, சியரலியோன்,மற்றும் கொங்கோ போன்ற நாடுகளில் உள்ள பெண் சிறுவர் போராளிகள் வழமையாக பாலியல் அடிமைகளாகவே பயன்படுத்தப் பட்டார்கள். இவர்கள் வளர்ந்த போராளிகளால் திரும்பத்திரும்ப கற்பழிக்கப்பட்டார்கள். எல்.ரீ.ரீ.ஈ தாங்கள் ஆபத்தான கிராமவாசிகளை தாக்கிய பின்னர் அவர்களை கொலை செய்வதற்கு பெண் சிறுவர் போராளிகளைப் பயன்படுத்தியது. பிரதானமாக சிறுவயது பெண்களை கொண்ட ஒரு எல்.ரீ.ரீ.ஈ பெண் அங்கத்தவர் குழு ஒன்றிருந்தது. இதனை “சுத்தமாக்கும் பகுதியினர்” என்று அழைத்தனர். இந்த சுத்தமாக்கும் பகுதியினர், தாக்குதல் குழுவின் பின்னால் முன்னேறிச் சென்று, அவர்களின் பிரதான பணியாகிய காயம்பட்ட பொதுமக்களை அல்லது படையினரை வெட்டுக் கத்தியினால் கொலை செய்வதை நிறைவேற்றுதல் ஆகும்.

யுத்தமானது அனைத்து வழிகளிலும் பெரியவர்களை பாதித்தது போலவே சிறுவர்களையும் பாதித்துள்ளது, ஆனால் மாறுபட்ட வழிகளில். போரின் அதிர்வுகள் சிறுவர்களின் வாழ்க்கை தொடர்பான அனைத்து சம்பவங்களிலும் நீண்டகால விளைவுகளை ஏற்படக்கூடிய வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்,அதை இப்போது சிக்கலான பி.ரி.எஸ்.டி எனபெயரிட்டுள்ளார்கள். இது வெளிப்படுத்தும் பொதுவான அறிகுறிகள், சீர்படுத்தாமையை தொடர்ந்து வகைப்படுத்திய பதட்டநிலை, நாள்பட்ட தற்கொலைச் சிந்தனைகள், சுய காயமேற்படுத்தல், மற்றும் வெடித்து சிதறும் கோபம், தொடர்பற்ற நிகழ்வுகள் (இவை ஆபிரிக்க நாடுகளில் நினைவிழந்த அல்லது வசமுள்ள நிலைகளின் வடிவங்களில் காணப்படுகிறது), உளவழி அழுத்தங்கள், நினைவக தொந்தரவுகள், உதவியற்ற உணர்வு, நம்பிக்கையற்ற நிலை, தனிமைப் படுத்தலும் மற்றும் மீளப்பெறும் தன்மையும்,உறவுகளில் பற்றின்மை,விசுவாசமின்மை அல்லது நம்பிக்கை இழப்பு என்பனவாகும்.

எங்கள் அவதானிப்புகளின்படி சிறுவர்கள் குறிப்பாக அவர்களுக்கு எளிதில் பாதிப்பை உருவாக்க கூடிய காலத்தில் பாதிப்புக்கு உட்படுகிறார்கள், அது அவர்களின் வளர்ந்துவரும் ஆளுமையில் நிரந்தரமான வடுவை ஏற்படுத்திவிடுகிறது. கிளர்ச்சியாளர்கள் தங்கள் தெரிவுகளுக்கு இளையவர்களே பொருத்தமானவாகள் என வெளிப்படுத்தியுள்ளார்கள் ஏனெனில், ”அவர்கள் பெரியவர்களின் கட்டளைகளுக்கு எதிராக குறைவான கேள்விகளையே கேட்பதுடன், அதிகம் பயமற்றவர்களாகவும் உள்ளார்கள், தாங்கள் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்தினை அவர்கள் பாராட்டுவதில்லை. அவர்களின் உருவ அமைப்பும், விரைவுத் திறனும், அபாயகரமானதும் இரசியமானதுமான பணிகளுக்கு அவர்களை ஏற்புடையவர்களாக்குகிறது”.

சில சிறுவர் போராளிகள் தங்கள் நாட்டைவிட்டு தப்பியோடுவதை சமாளித்து வெற்றி கண்டபோதிலும், இன்னும் கடந்தகால யுத்த நினைவுகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கனகரட்னம் மற்றும் ஏனையவர்கள், மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி (2005) கவனத்தை ஈர்த்திருப்பது நாடுகடந்து தற்சமயம் நோர்வேயில் வாழும் முன்னாள் ஸ்ரீலங்கா சிறுவர் போராளிகளின் மாதிரியானது, அதிர்ச்சியின் பின்னான மன உளைச்சல்களின் சிந்தனை ஈடுபாடுகளுக்கு சிறப்பான எடுத்தக்காட்டாக உள்ளது .20 முன்னாள் சிறுவர் போராளிகளை மாதிரியாகக் கொண்டு, ஆராய்ச்சியாளர்கள், அவர்களது சிந்தனை ஈடுபாடுகளையும் மற்றும்; உளவியல் பிரச்சினைகள் உருவாதலையும் இசைவுபடுத்தி ஒரு தொடர்பினைக் காண முயற்சித்தார்கள்.

வழமையாக சிறுவர் போராளிகளான பெண்கள், யுத்த முன்னரங்குகளில் கஷ்டங்களையே சந்தித்தனர். உகண்டா, சியரலியோன்,மற்றும் கொங்கோ போன்ற நாடுகளில் உள்ள பெண் சிறுவர் போராளிகள் வழமையாக பாலியல் அடிமைகளாகவே பயன்படுத்தப் பட்டார்கள். இவர்கள் வளர்ந்த போராளிகளால் திரும்பத்திரும்ப கற்பழிக்கப்பட்டார்கள். எல்.ரீ.ரீ.ஈ தாங்கள் ஆபத்தான கிராமவாசிகளை தாக்கிய பின்னர் அவர்களை கொலை செய்வதற்கு பெண் சிறுவர் போராளிகளைப் பயன்படுத்தியது. பிரதானமாக சிறுவயது பெண்களை கொண்ட ஒரு எல்.ரீ.ரீ.ஈ பெண் அங்கத்தவர் குழு ஒன்றிருந்தது. இதனை “சுத்தமாக்கும் பகுதியினர்” என்று அழைத்தனர். இந்த சுத்தமாக்கும் பகுதியினர், தாக்குதல் குழுவின் பின்னால் முன்னேறிச் சென்று, அவர்களின் பிரதான பணியாகிய காயம்பட்ட பொதுமக்களை அல்லது படையினரை வெட்டுக் கத்தியினால் கொலை செய்வதை நிறைவேற்றுதல் ஆகும்.ஆராய்ச்சியாளர் ஹம்பிளென் (1999) குறிப்பிட்டதைபோல பாலினம் பி.ரி.எஸ்.டி தோன்றுவதற்கு ஒரு ஆபத்தான காரணியாக தோன்றுகிறது, அநேகமான ஆய்வுகள் வெளிப்படுத்தியிருப்பது, பி.ரி.எஸ்.டி யினால் பாதிப்புக்கு உள்ளாவதற்கு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு சாத்தியங்கள் அதிகம் என்று.

இணைப்புச் சிக்கல்கள்

சிறுவர்கள் அவர்கள் பெற்றோரிடமிருந்து பலவந்தமாக பிரிக்கப்பட்டதும், அநேக சிறார்கள் பிரிவினை பதட்டத்தை அனுபவிக்கிறார்கள். சிலர் பிரிவினைப் பதட்ட நோயின் அறிகுறியினால் முற்றாக மூழ்கடிக்கப் படுகிறார்கள். இந்தப் பிள்ளைகள் தொடர்ந்து அழுவதும் ,பிடித்து வைத்திருப்பவர்களிடமிருந்து தொடர்ந்து தப்பியோட முயற்சிப்பதும், தனிமையில் இருக்க அச்சமடைவதும் மற்றும் சில சமயங்களில் கெட்ட கனவுகளால் துன்பப்படுவதுமாக இருப்பார்கள். மூத்த அங்கத்தவர்கள், உடல் உபத்திரவங்களை விளைவித்தும் மற்றும் மிரட்டல்களை விடுத்தும் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சிறுவர் போராளிகளை பயிற்றுவிப்பார்கள். பிரித்தான உளவியல் நிபுணர் ஜோண் பௌல்பி அந்த இணைப்பு நடவடிக்கைகள் உள்ளுணர்வுடன் தொடர்புபட்டுள்ளதால் எந்த நிலையிலும் அது பிரிவினை பாதுகாப்பின்மை மற்றும் பயம் போன்றவை அருகாமையில் செயற்படுத்துவது போன்ற அச்சுறுத்தலை தோற்றுவிக்கும் என நம்புகிறார்.

அநேக முன்னாள் சிறுவர் போராளிகள் அவர்கள் பெற்றோருடன் அக்கறையற்ற மோசமான இணைப்பையே கொண்டுள்ளார்கள்.அவனுடைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளை திடீரென நாடகீயமாய் மாற்றம் பெற்றுவிட்டான், அவனால் தனது அன்பையும் பரிவையும் பதிலுக்கு திருப்பிக் காட்டமுடியாமலிருக்கிறதே என்று வருத்தப்படுவார்கள். பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையில்; ஒரு கண்ணுக்குத் தெரியாத சுவர் இருப்பதாக சிலர் விளக்குகிறார்கள். அந்தப் பிள்ளை பெரியவர்கள் மீதிருந்த நம்பிக்கை உணர்வை இழந்துவிட்டிருப்பதுடன், சமூகத்தில் ஒரு மதிப்பான அங்கத்தவன் என்று தனக்கிருந்த மதிப்பும் தொலைந்துவிட்டது என அவன் எண்ணுகிறான். பிள்ளை எதிர்ப்புக் காட்டுபவனாகவும், ஐயப்பாடும், உணர்ச்சித் தாக்கம் உள்ளவனாகவும் மாறிவிடுகிறான், பிள்ளை இந்த உலகத்தை சேராதவனைப்போலவும் மற்றும் வளர்ந்தவர்களுடன் சாதகமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாதவனாகவும் இருக்கிறானே என்று பெற்றோர் கவலைப்படுவார்கள். சில பிள்ளைகள் தங்களைக் கடத்திச் சென்றவர்களோடு அவர்களோடு இருந்த காலத்தில் பிணைப்புகளை ஏற்படுத்திக்கொண்டு, தாங்கள் பெற்றோர்களுடன் இருந்ததைக் காட்டிலும் போராளிகளுடன் இருந்தபோதுதான் மிகவும் சிறப்பான நேரத்தை அனுபவித்ததாக உணர்வார்கள்.

ஒழுக்க நெறியின் வளர்ச்சி

சிறுவர்களின் ஒழுக்க நெறியின் வளர்ச்சி, அவர்கள் ஆயுதப் போராட்டங்களில் பங்கு பற்றுவதின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகலாம் .பொதுவாக சிறுவர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சமூக விதிகள் மற்றும் எதிர்பார்ப்புகளை, அவர்கள் கலாச்சாரத்தில் பங்கு கொள்ளும்போது உறுதிப்படுத்தக் கற்றுக் கொள்கிறார்கள். கொலம்பியாவில் உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்கள் மற்றும் வயது வந்தவர்கள் எதிர்பார்த்ததாக அறியப்படுவது, ஒழுக்க நெறியில் அப்படிச் செய்வது தவறு என்பதை ஏற்றுக்கொள்வதை விடுத்து, அவர்களும் மற்றும் ஏனையவர்களும், திருடியும் மற்றவர்களை துன்புறுத்தியும் வாழவேண்டும் என்பதாக,மற்றும் அவர்களில் பெரும்பாலானோர் விசேடமாக வயது வந்தவர்கள், சில குழுக்களைப் பழிவாங்குவது நீதியானது என தீர்மானித்தார்கள்.

சமூக கற்கை கோட்பாட்டாளர்களான அல்பேட் பந்துரா போன்றவர்கள் கூறுவது, சிறுவர்கள் ஆரம்பத்தில் கற்றுக் கொள்வது முன்மாதிரிகள் ஊடாக எப்படி அறநெறிகளை வளர்ப்பது என்பதைத்தான். அநேக சிறுவர் போர்வீரர்கள், தங்கள் சமூக பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொண்டது, வயது வந்த போராளிகளைப் பார்த்துத்தான்

,மற்றும் பல வருடங்களாக இந்த மூத்த தலைவர்கள் அவர்களின் இலட்சிய முன்மாதிரிகளாகத் திகழ்ந்துள்ளார்கள். ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறை என்பன ஏற்றுக்கொள்ளக்கூடிய பழக்கங்கள் மற்றும் எதிரியை கொல்வது சரியானது என அவர்கள் கற்றுக் கொண்டிருந்தார்கள். இரக்கம், பரிவு,மற்றும் மன்னிப்பு போன்ற குணங்கள் பலவீனத்தின் அறிகுறி என அவர்களுக்கு தொடர்ச்சியாக போதிக்கப்பட்டு வந்தன.கிளர்ச்சி குழுக்களின் மூத்த தலைவர்கள், கொலை மற்றும் சித்திரவதை போன்ற செயல்களை சிறுவர்களின் முன்பாகவே, அவர்கள் அதை அவதானித்து கற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக செய்து வந்தார்கள்.

பந்துராவின் விளக்கத்தின்படி, ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தனிநபர்கள், அவர்கள் புரியும் ஏனைய சிக்கலான அமைப்பிலான சமூக நடைமுறைக்கு தங்கள் நேரடி அனுபவத்திலிருந்தோ அல்லது மற்றைய முன்மாதிரிகளிலிருந்து அவதானித்ததின்படியே, அதேவகையான பொறிமுறையின்படியிலான பதில்களையே வழங்குகிறார்கள். பல வருடங்களாக நிகழ்ந்த வன்முறை இந்த சிறுவர்களுக்கு வாழ்க்ககையின் ஒரு வழியாக மாறிவிட்டது.வருடக்கணக்காக ஒருவரின் இலட்சியத்தை அடைவதற்கு வன்முறைதான் சட்டபூர்வமான வழி எனவும், அதுதான் ஏற்றுக்கொண்ட ஒரு நடைமுறை எனவும் அவர்கள் நம்பிவந்தார்கள்.வன்முறைச் சிந்தனைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு,ஒரு வன்முறையற்ற வாழ்க்கைமுறைக்கு தங்களை உருமாற்றிக் கொள்வது கடினம் என அவர்கள் கண்டார்கள். போரில் பங்களிப்பு செய்ததாலும் மற்றும் வெறுக்கத்தக்க வன்முறைச் சித்தாந்தங்களின் போதனைகளை பெற்றதாலும் சிறுவர்களின் ஒழுக்க நெறிகளின் உணர்வுகள் சிதைக்கப்பட்டுவிட்டன. சிறுவர்கள் தங்கள் கரங்களிலிருந்த துப்பாக்கிகளை வேண்டுமானால் ஒப்படைத்திருக்கலாம்,ஆனால் அவர்களால் தங்களுக்கு பயிற்றுவிக்கப்பட்ட வன்முறை வழிகளில் சிந்திப்பதை வெகு சுலபத்தில் கைவிட்டுவிட முடியாது. படைக்கலைப்பின் ஒரு பகுதி, சிறுவர்களை வன்முறைகளிலிருந்து வெளிக் கொண்டுவரவும்,மற்றும் அனைத்தையும் உட்படுத்திய ஆக்கபூர்வமான வழியில் வாழ்க்கையை முன்னேற்றுவதையும் உள்ளடக்கியுள்ளது சமாதானக் கல்வியை பாடத்திட்டத்தில் புகுத்தும் வசதிக்காகவே இந்த நடவடிக்கை.

(தொடரும்)

சிறுவர் போர் வீரர்களின் உளவியல் பிரச்சினைகள்

(பகுதி 1)

– பேராசிரியர். தயா சோமசுந்தரம் மற்றும் கலாநிதி. எம்.ஜயதுங்க

உலகின் பலநாடுகளிலும் சிறுவர்களை ஆயுத மோதல்களில் பயன்படுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆபிரிக்கா, ஆசியா,மற்றும் இலத்தீன் அமெரிக்கா போன்றவற்றில் உள்ள நாடுகளில் இருக்கும் பல்வேறு கிளர்ச்சிக் குழுக்களும் மற்றும் எப்போதாவது ஒரு சில அரசாங்கங்களும், தங்களது ஆயுதப் போராட்டங்களில் சிறுவர்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். 18வயதுக்கு கீழ்பட்ட ஆண் மற்றும் பெண் என இருபாலாரையும் கொண்ட சுமார் 30,000 சிறுவர்கள் இன்று உலகெங்கிலுமுள்ள சுமார் 30 போராட்டங்களில் தொடர்பு பட்டுள்ளார்கள். (2001ம் ஆண்டின் சிறுவர் போர் வீரர்களைப்பற்றிய உலகளாவிய அறிக்கையின்படி).அநேகமாக இந்தச் சிறுவர்கள் அவர்கள் பெற்றோர்களிடமிருந்து கடத்தப்பட்டு, மற்றும் அவர்களுக்கு போதனைகளை ஊட்டி, சுருக்கமான சிறு பயிற்சிகளை வழங்கி, வளர்ந்த கிளர்ச்சி அங்கத்தவர்களுடன் சேர்த்து, பூரண ஆயுதப்பயிற்சியும் மற்றும் பூரணமான ஆயுதங்களையும் வைத்திருக்கும் அரசாங்க படைகளை எதிர்த்து போராடுவதற்காக அனுப்பப்படுகிறார்கள்.

ஏராளமான சிறுவர் போர் வீரர்கள் யுத்தத்தின்போது கொல்லப்பட்டுவிடுகிறார்கள். அதிலிருந்து தப்பிப் பிழைப்பவர்கள், ஆழமான உடல் மற்றும் உளவியல் பேரதிர்ச்சிகளினால் துன்பப்படுகிறார்கள். இத்தகைய பேரதிர்ச்சிகள் அவர்களது சமூக மற்றும் புலனறிவு வளர்ச்சிகளில் பாதிப்பை உண்டாக்குகிறது போர் முடிவடைந்ததும் அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள், அல்லது தப்பியோடுகிறார்கள், சாத்தியமான வகையில் இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றிணைவதற்கே பெரும்பாலும் முயற்சி செய்கிறார்கள். சிலர் படைக்கலைப்பு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் ஊடாக செல்கிறார்கள். மீள் கல்வி நடவடிக்கைகள்,புனர்வாழ்வு, மற்றும் சமூக ஓருங்கிணைப்பு நடவடிக்கைகள் போன்றவைகள் இடம்பெற்றாலும்கூட, பெரும்பான்மையான சிறுவர் போர் வீரர்கள் தொடர்ந்தும் யுத்தத்தின் எதிர்மறை விளைவுகளால் தொடர்ந்தும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

1989ல் நடத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறுவர்கள் உரிமைகள் மாநாட்டை (சி.ஆர்.சி) ஏற்றுக் கொண்டதன் பின்னரும்கூட, வயதுவந்த ஆண்களின் சுயசிந்தனைப்படி செயற்படவேண்டிய யுத்தமானது இன்னமும் சிறுவர்களை சுரண்டி வருகிறது. இந்த சிறுவர் போராளிகள் நிகழ்ச்சி மூலம், குழுக்களிடையே கலாச்சார அல்லது இன அடையாளத்தை தெளிவாக வரையறை செய்யும் கிடைமட்ட ஏற்றத்தாழ்வுகளை வெளிபடுத்தும் சூழ்நிலைகளை காணக்கூடியதாக உள்ளது. வன்முறை மற்றும் மோதல்களுக்கு வழிவகுக்கும், நிலையற்ற சமூகத்தன்மை குழுக்களிடையே அரசியல், பொருளாதார, மற்றும் சமூக பரிமாணங்களில் கடுமையான ஏற்றத்தாழ்வுகளை வளர்த்து வருகிறது. இன மற்றும் கலாச்சார இழப்புகள் சக்திவாய்ந்த அமைப்புகளை ஒன்று திரட்டும் முகவர்களாக மாறக்கூடியவை.

பலவீனமான மற்றும் குறைவான வளங்களை உடைய கிளர்ச்சிப்படைகள் மட்டுமல்லாது சில நேரங்களில் அரசாங்கங்கள்கூட சிறுவர்களை படைவீரர்களாக இணைக்கும் நிலையில் தங்கியிருந்தன. அநேகமாக வளர்ந்த படைவீரர்கள் கொல்லப்பட்டு, அல்லது போராட விருப்பமின்மையால் அல்லது ஆட்கள் கிடைக்காமல் போதல், போன்ற மனித சக்திகளின் பற்றாக்குறை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பலவீனமான தலைவர்கள் ,பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற சமச்சீரற்ற போர் கருவிகளின் பக்கம் திரும்ப நேருகிறது. நவீன ஆயுதங்களின் பெருக்கம் காரணமாக சிறுவர்களினால்கூட அவைகளை எளிதில் கையாளக்கூடியதாக உள்ளது ( ஏகே 47 அல்லது ரி 56 போன்ற தாக்குதல் துப்பாக்கிகள், அல்லது சிறியரக நிலக்கண்ணி வெடி போன்றவை மிகவும் இலேசானதாகவும், கையாள்வதற்கு எளிதானதாகவும் உள்ளதால் சிறுவர்களுக்கு அவற்றின் பயன்படுத்தலைப் பற்றிய பயிற்சி வழங்குவது சுலபமாக உள்ளது),

மேலும் இந்த சிக்கலான சமன்பாடுகளின் உதவியால் ஆயுத வியாபாரிகளுக்கு அவற்றின் விநியோகத்தை உறுதி செய்வது முக்கியமானதாக உள்ளது. இந்த ஆயுத வியாபாரத்தினால் மிகப்பெரிய பொருளாதார இலாபம் கிட்டுவதோடு, அதன் தயாரிப்பு மற்றும் விநியோக பாதை என்பன பெரும்பாலும் சர்வதேச சமூகத்தின் ஈடுபாடுகளில் தங்கியிருக்கிறது. மேலும் போராட்டத்தின் நிலை கணிசமானளவு நுட்பமான திறன்களையும் பெற்றுள்ளது. பயிற்சியும் மற்றும் ஆயுதங்களும் பல்வேறு அபிவிருத்தி அடைந்த நாடுகளிடமிருந்தே வருகிறது. யுத்தமுன்னிலையில் நிறுத்தப்படும் சிறுவர்களின் நிலை வளர்ந்த ஆண்களின் விளையாட்டில் உள்ள பகடைக்காய்களின் நிலையை ஒத்ததாக உள்ளது.

சிறுவர்களைக் கட்டாயமாக படையில் இணைப்பது, ஒருவகையான உடல், உணர்வு, மற்றும் தார்மீக துஷ்பிரயோகம் என்கிற வடிவத்தில் உள்ளதோடு, இன்னும் சொல்லப்போனால் 1998ல் டி சில்வா எமுதிய “தற்கொலைக்கான பதிலாள்” என்ற நூலில் வருவதைப் போல இருக்கும். எனினும் அது வெறுமனே சிறுவர்களின் ஆட்சேர்ப்பை கண்டிப்பதாகவோ அல்லது தடை செய்வதாக இருந்தால் மட்டும் போதாது, ஆனால் இன்னும் ஆழமான பல கேள்விகளை கேட்கவேண்டியிருக்கும்,

“சிறுவர்கள் ஏன் அதில் இணைகிறார்கள்?. அந்தப் பின்னணியை விளங்கிக் கொள்வதும் அதேபோல முக்கியமானதாகும், குறிப்பாக சிறுவர்கள் போர்வீரர்களாக மாறுவதற்கான முறையான காரணியை கண்டறிவதோடு,அதை நாங்கள் திறமையான முறையில் தடுக்க வேண்டுமானால் அந்த நிலைமைகளை மேம்படுத்துவதற்காக பணியாற்ற வேண்டியது முக்கியமானதாகும். அதேநேரம் சிறுவர் போர் வீரர்களின் தற்காலிக காரணிகளையும் மற்றும் நிலமைகளை புரிந்துகொள்வது, மிகவும் விரிவானதும் மற்றும் திறமையானதுமான, படைக்கலைப்பு, புனர்வாழ்வு,மற்றும் அவர்களின் குடும்பம் மற்றும் சமூகம் என்பனவற்றுடன் மீள ஒருங்கிணைதல் போன்றவற்றை வழிநடத்த தேவையான ஒரு புது வடிவத்தைக்கொண்ட நிகழ்ச்சித் திட்டத்தை அவர்களுக்காக உருவாக்க கூடியதாக இருக்கும்.

சிறுவர்களை போராடக் கட்டாயப்படுத்தும், சமூக – அரசியல்,பொருளாதார,மற்றும் உளவியற்காரணிகள் மிகவும் சிக்கலானவை. அவைகளை தள்ளக்கூடிய மற்றும் இழுக்க கூடிய காரணிகள் என பிரிக்க கூடியதாக உள்ளன. இந்த தள்ளும் – இழுக்கும் பிரிவுகளை பயன்படுத்தி சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சிறுவர் தொழிலாளர்களை ஒழிக்கும் சர்வதேச திட்டத்தின்கீழ் மிகவும் விசேடமாக சிறுவர் போராளிகள் விடயத்தை கையாளலாம்.

அதிர்ச்சியான காயங்கள்

யுத்தத்தின்போதும் மற்றும் வன்முறை மோதல்களின்போதும், அந்த பொதுவான அனுபவங்களான தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள், குண்டு வீச்சுக்கள், உலங்கு வானூர்தி துப்பாக்கி சூடுகள், சுற்றிவளைப்புகள், தேடுதல் நடவடிக்கைகள், மரணங்கள்,காயங்கள், அழிவுகள், பெருந்தொகை கைதுமுயற்சிகள், தடுப்புக்காவல்கள், துப்பாக்கி சூடுகள், கையெறிகுண்டு வீச்சுக்கள்,மற்றும் கண்ணிவெடி தாக்குதல்கள் என்பனவற்றின் காரணமாக, சிறுவர்கள் அதிர்ச்சியுடன் கூடிய காயங்களுக்கு இலக்காக நேரிடலாம். யுத்த சூழலில் உள்ள சிறுவர்கள் தொடர்பான ஆய்வுக் கற்கைகள் வெளிப்படுத்துவது உதாரணத்துக்கு மொசாம்பிக் (றிச்மன் 1988) மற்றும் பிலிப்பைன்ஸ்(சி.ஆர்.சி,1986) போன்ற அறிக்கைகள் மூலம் தெரிய வருவது கணிசமானளவு உளவியல் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக.

வளரும் அவர்களின் மனங்களில் யுத்தம் ஏற்படுத்திய தாக்கங்கள், அதன் விளைவாக ஏற்பட்ட அதிர்ச்சியான காயங்கள் மற்றும் கொடூரத்தனம் என்பன சிறுவர் போராளிகளாக அவர்கள் மாறுவதை மேலும் தீர்க்கமான நிலைக்கு தள்ளியிருக்கலாம். சிறுவர்கள்; மீதான நேரடி தாக்கத்துக்கு மேலதிகமாக, யுத்தத்தின் விளைவாக குடும்ப மற்றும் சமூக மட்டத்தில் கூட்டான வேதனைகளும் அதிர்ச்சிகளும் ஏற்பட்டிருக்கலாம். குடும்ப மற்றும் சமூக நடவடிக்கைகள், ஆதரவுக் கட்டமைப்புகள் மற்றும் வலையமைப்புகள், நன்னெறி மற்றும் தார்மீக மதிப்புகள், இணைப்பு மற்றும் நோக்கம் என்பனவற்றில் ஒரு முறிவு ஏற்பட்டிருக்கலாம். இந்த நிச்சயமற்ற,பாதுகாப்பற்ற, மற்றும் நம்பிக்கையற்ற சூழலில் உள்ள சிறுவர்கள் அநேகமாக மாற்று வாய்ப்புகளை தேடுவது சகஜம், அதன்காரணமாக வசீகரிக்கும் சாத்தியங்களைப் பின்பற்றி பாதிப்பு ஏற்படக்கூடிய தெரிவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். வன்முறை தண்டனை, மற்றும் அநீதி என்பனவற்றுடன் சேர்ந்து வளர்ந்ததின் விளைவாக கொடூரத்தனம் அவர்களிடம் ஏற்பட்டுவிடுகிறது, மற்றும் பாதுகாப்பின்மை, தங்கள் பாதுகாப்புக்கான அச்சம், மற்றும் உண்மையான அச்சுறுத்தல்கள், (மற்றும் அவர்களின் கற்பனைகள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்கள்) என்பன, தங்களை பாதுகாக்க ஆயுதங்களை ஏந்தவும் பயிற்சிகளை மேற்கொள்ளவும் அவர்களைத் தூண்டுகிறது.

இழப்பு

இடம்பெயர்ந்த அநேக குடும்பங்கள், வருவாய், வேலை வாய்ப்பு ,மற்றும் உணவு என்பன கிடைக்காமல், இன்னல்பட்டபோது குறைந்தது அவர்கள் உண்பதற்கு உணவாவது கிடைக்குமே என்கிற நப்பாசையில் தங்கள் பிள்ளைகளில் ஒருவரை இணையும்படி ஊக்கப் படுத்தியிருக்கலாம். போர் அழித்து நாசப்படுத்திய இடங்களில் அதிகளவு போஷாக்கின்மை மற்றும்; உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவங்கள் ஏராளம் இடம்பெற்றுள்ளன. சில இடங்களில் சுகாதார பாதுகாப்பு வசதிகளின் ஒதுக்கீடு மற்றும் விநியோகம் (அலுவலர்கள், மருந்துகள், உபகரணங்கள் என்பன) குறிப்பிடத்தக்க வகையில் விகிதாசாரமற்ற முறையில் உள்ளன. கல்வி மற்றும் பாடசாலைகள் ஒழுங்கற்ற அமைப்பாக மாறிவிட்டன. மேல் படிப்பு, விளையாட்டு, வெளிநாட்டு உபகாரச் சம்பளம் வழங்குதல், மற்றும் சில அதிக சலுகைகள் உள்ள குழுக்களுக்கு வழங்குவதைப் போன்ற வேலை வாய்ப்புகளுடன் ஒப்பிடும்போது சில குழுக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிட்டாமை போன்ற விடயங்களில் வாய்ப்பு பெறுவது அநேகமாக உண்மையான அல்லது அனுமானிக்கப்பட்ட அளவில் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. அதிகம் மனச்சாட்சி உணர்வு மற்றும் அக்கறை உள்ள பிள்ளைகள் இந்த இழப்புகளையும் பாகுபாட்டையும் காணும்போது அல்லது அதை தங்கள் குடும்பம் மற்றும் சமூகம் அனுபவிக்க நேரும்போது அந்த நிகழ்வுகள் அவர்களை ஆயுத எதிர்ப்பு குழுக்களில் இணைவதற்கு தள்ளிவிடும்.

சமூக கலாச்சார காரணிகள்

மற்றொரு சக்தியான தள்ளிவிடும் காரணியாக இருப்பது சமூக அடக்குமுறை நடவடிக்கைகள், அங்கு கீழ் வகுப்பு மற்றும் சாதியினர், அதிகாரமும், சக்தியும், உள்ள மேல்மட்டத்தினாரால் ஒடுக்கப்படும் நடைமுறை. கீழ் வகுப்பை சேர்ந்த அநேகர் இந்த ஆயுத எதிர்ப்பு குழுக்களில் இணைந்ததும் இந்த அடக்குமுறை நடவடிக்கையிலிருந்து வெளியேறுவதற்கான ஒரு வழியாக கருதியே.அதேபோல இளம் பெண்கள் ஆணாதிக்க அடக்குமுறைகளினால் தாங்கள் அனுபவிக்கும் பாலியல் அடக்குமுறையிலிருந்து தப்பி, விடுதலை பெறுவதற்கான ஒரு மார்க்கமாக இதனை கருதுகிறார்கள்.

இழுக்கும் காரணிகள்

பிள்ளைகள் அவர்களது வயது,போதிய முதிர்ச்சியடையாமை,ஆர்வம், மற்றும் சாகச்செயலகள் மீதுள்ள காதல் போன்றவை காரணமாக மோடிவித்தைக்காரனின் குழலோசையில் மயங்கி எளிதில் பாதிப்படைவதுபோல, பல்வேறு வகையான உளவியல் கவர்ச்சியில் மயங்கி அதன் பின் செல்கிறார்கள். யுத்த துணைக் கருவிகளை பகிரங்கமாக காட்சிப்படுத்துவது, போரில் இறந்த வீரர்களின் மரணச் சடங்குகள் நடத்தி அவர்களின் சுவரொட்டிகளை காட்சிப்படுத்தல், பேச்சுக்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை விசேடமாக பாடசாலைகளில் வெளியிடுவது, வீரப் பிரதாபங்கள், மெல்லிசைப் பாடல்கள்,மற்றும் கதைகள் போன்றவற்றை கூறி, தேசப்பற்று உணர்ச்சிகளை கிளறிவிட்டு ஒரு தியாகியாக மாறுவதற்கான பரபரப்பை ஊக்கிவித்து இணைவதற்கு நிர்ப்பந்திக்கும் சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. வெளியேறும் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, பொறிக்குள் அகப்பட்டதைப்போன்ற ஒரு உணர்ச்சியை உருவாக்கியதுடன் அதேபோல தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது என்பதையும் உறுதிப்படுத்துவது. இராணுவத் தன்மையான பயிற்சிகள் ஒரு இராணுவ சிந்தனையையே ஊற்றெடுக்க வைக்கிறது.

யுத்தம் மற்றும் வன்முறையான சூழலில், சமூக கலாச்சார மற்றும் சமயத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்கள், சிறுவர்களை படையில் சேர்ப்பதை பாதுகாக்கவோ அல்லது எதிர்க்கவோ முன்வருவதில்லை. அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும், பாரிய சுடுகலன்கள், துப்பாக்கிச் சூடுகள், குண்டுத் தாக்குதல்கள், ஏறிகணை வீச்சுகள், தடுத்து வைத்தல்கள், மற்றும் ஒரு சமூகத்துக்கு எதிரான சித்திரவதைகள் போன்ற பாகுபாடற்ற வன்முறைகள் ஒரு சக்திவாய்ந்த ஊக்குவிப்பு காரணியாக உள்ளன.

உளவியல் ரீதியிலான விளைவுகள்

உளவியல் ரீதியிலான விளைவுகளை ஒருவர் பார்க்கும்போது,மரணம் மற்றும் காயமடைதல் என்பனவற்றுக்கு அப்பால், சிறுவர்களை ஆட்சேர்த்தல்,மிகவும் கொடூரமான செய்கையாக தோன்றுகிறது. எங்களிடம் சிகிச்சைக்கு வந்த அப்படியானவர்களிடம் நாங்கள் கண்டது அவர்களின் முழு உளவியல் நிறமாலையும்,நரம்புத் தளர்ச்சி நிலையிலிருந்து மன மற்றும் உணர்ச்சி அழுத்தங்கள், மற்றும் உளவழி அமுத்தங்களினால், உடல் நோய்களின் வடிவத்தில் மாற்றம் பெற்றிருப்பதையும், பி.ரி.எஸ்.டி எனப்படும் அதிர்ச்சிகளுக்கு பின்னான அழுத்த நோய் இன்னும் கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வீரியம் மிக்கதாக மாறியிருப்பதை, அது அவர்களை உளவியல் மற்றும் சமூக ரீதியாக முற்றாக தகர்த்து விட்டிருந்தது.

பலவகையான ஆய்வுகள் தெரிவிப்பது இந்த சிறுவர் போர் வீரர்கள் , பி.ரி.எஸ்.டி எனப்படும் அதிர்ச்சிகளுக்கு பின்னான அழுத்த நோய் தோன்றுவதற்கான அதிகபட்ச ஆபத்து நிலையில் இருந்தார்கள். ஒக்கெல்லோ, ஒணென், மற்றும் மியுசிசிவ் என்பவர்களின் ஆய்வு (2007) 27 முதல் 34.9 விகிதம் வரையான உகண்டா நாட்டு சிறுவர் போராளிகள் இந்த பி.ரி.எஸ்.டி யினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள எனக் கண்டுபிடித்திருந்தது. கோர்ட்டும் மற்றவர்களும் மேற்கொண்ட ஆய்வுப்படி 75 நேபாளி சிறுவர் போராளிகள் (இது 52.3 விகிதம்) மன அழுத்த அறிகுறியை சந்தித்து இருப்பதாகவும்,65 பேர்கள் (46.1 விகிதம்)மனப் பதட்ட நிலைக்கு ஆளாகி இருப்பதாகவும், 78 பேர்கள் (55.3 விகிதம்) பி.ரி.எஸ்.டி நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும்,55 பேர்கள்(39 விகிதம்) பொது உளவியல் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் ,மற்றும் 88 பேர்கள ்(62.4 விகிதம்) செயல்பாட்டு பலவீன நிலையில் உள்ளதாகவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி வளர்ந்தவர்களைக் காட்டிலும் அதிக அளவிலான சிறுவர்கள் அதுவும் கட்டாயமாக படையில் இணைக்கப்பட்டவர்கள் பி.ரி.எஸ்.டி யினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சோகமான மனநிலையில் இருந்தவர்கள் உட்பட நேர்காணல் செய்யப்பட்ட பெரும்பான்மையான சிறார்களின் உணர்வு மயமான பின்விளைவுகள், முன்னீடுபாடாக, தற்கொலை சிந்தனைகள், மற்றும் அச்சங்கள் என்பனவாகவே இருந்தன. இவர்களில் பெரும்பாலானோர்கள் அவர்களின் நடவடிக்கைகளின் விளைவாக தங்கள் குடும்ப உறுப்பினர்களின் மரணம் மற்றும் சமூக அந்தஸ்து என்பனவற்றை இழந்து விட்டிருந்தார்கள். இந்த ஆய்விலிருந்து மேலும் கண்டறிந்தது, ஸ்ரீலங்காவில் வளர்ந்து வரும் எல்லா சிறார்களிடையே ஒரு தலைமுறை சிறுவர்கள் போரைத்தவிர வேறு எதையும் தெரியாதவர்களாக உள்ளதுடன் போதனைகளுக்கு உட்படுத்தப் பட்டிருப்பதால், தங்கள் எதிரிகளைப் பற்றி வெறுப்பான உணர்வுகளையே கொண்டிருக்கிறார்கள். அத்தடன் கட்டாயமாக படையில் இணைக்கப்பட்ட சிறுவர்கள் வறமையில் வாழும் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். வசதியுள்ள குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் ஒன்றில் அந்த இடத்தைவிட்டு குடிபெயர்ந்தோ அல்லது அவர்களை கட்டாயமாக இணைத்தபின் விடுதலை செய்யப்பட்டோ இருக்கவேண்டும்(டிசில்வா,ஹோப்ஸ் மற்றும் ஹன்க்ஸ்,2001)

கார்பரினோ மற்றும் ஹோஸ்டென்லி(1993) தங்கள் ஆய்வில் தெரிவித்திருப்பது, அரசியல்; தொடர்பான வன்முறைகள் மற்றும் யுத்தம் என்பன நன்கு நடத்தப்பட்டு வரும் குடும்ப நலன்களுக்கு தீவிரமான ஆபத்தை ஏற்படுத்துகின்றது. அநேகமான சிறுவர் போராளிகள் நீண்ட காலமாக தங்கள் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டவர்களாகவும் மற்றும் அநேகமானவர்கள் குடும்ப உடமைகளின் உணர்வுகளை இழந்து விட்டவர்களாகவே உள்ளனர். அவர்களின் குடும்ப பிணைப்புகள் உடைந்து போய்விட்டன. இந்தச் சிறுவாகள் தங்கள் கலாச்சார, சமூக, மற்றும் தர்ர்மீக அடையாளங்களை இழந்துவிட்டிருக்கிறார்கள், அதன்காரணமாக அவர்கள் உளவியல் மற்றும் சமூக எதிர்விளைவுகளினால் பாதிப்படையக் கூடியவர்களாக இருக்கிறார்கள். பி.ரி.எஸ்.டி பாதிப்புக்கு உள்ளாகியிருப்பவர்கள் போரைப்பற்றிய உள்ளுடுருவிய நினைவுகள் மற்றும் கடந்தகால நிகழ்வுகளின் மீட்டல்கள்,உணர்வுமயமான எழுச்சிகள், மரத்துப்போன உணர்வுகள் போன்ற பல்வேறுவகையான பதட்டமான நோய் அறிகுறிகளைக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களின் கடந்தகால அனுபவங்கள் தொடர்பாக தவிர்க்கப்பட வேண்டிய அநேக இடங்களும், உரையாடல்களும், உள்ளன. சில சிறுவர்கள் தங்கள் சொந்தக் கிராமங்களுக்கு திரும்பிச்செல்லத் தயக்கம் காட்டுவது அவமானம் அல்லது குற்ற உணர்வு காரணமாக இருக்கலாம். முன்னாள் சிறுவர் போராளிகள் விவரித்ததைப்போல சமூக நிலமைகள், பௌதீக இடங்கள், அல்லது கடந்தகாலத்தை பற்றிய மன உளைச்சல் அறிகுறிகளை தூண்டிவிடும் நடவடிக்கைகள் உட்பட அனைவற்றையும் திறமையாக அடையாளம் காண்பதை தவிர்ப்பதுடன், எதிர்காலத்திலும் அவைகளை தவிர்ப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடுமையான அதிர்ச்சி கலந்த மனஉளைச்சலை தூண்டிவிடக்கூடிய மீள் அனுபவத்தை ஏற்படுத்துவது பௌதீக இடங்கள், சில முன்னாள் சிறுவர் போராளிகள் முன்பு தாங்கள் பங்கேற்ற வன்முறையான மனிதாபிமானமற்ற அட்டூழியங்கள் நடைபெற்ற இடங்களை பார்ப்பதை தற்போது தவிர்த்து வருகிறார்கள்.

(தொடரும்)

1964ம் ஆண்டு காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஸ்தாபனங்களின் ஐக்கியத்தில் அச்சுவேலியில் நடந்த மாநாடும், அந்த மாநாட்டில் கலந்துகொண்டு ”ஆறுமாத காலத்துள் உங்கள் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும்” என சாவகச்சேரி எம்.பி திரு வீ.என். நவரெத்தினம் அவர்கள் தந்த வாக்குறுதியும், காலஞ்சென்ற கோப்பாய் எம்.பி திரு.எஸ்.வன்னியசிங்கம் அவர்கள் 61இல் ஸ்ரான்லி பாடசாலை வட்டமேசை மாநாட்டில் தந்த வாக்குறுதியும் பற்றிய தாற்பரியங்களும் 1965இல் ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய இயக்கத்தினால் இணுவில் கந்தசாமி கோவிலில் இருந்து திருவாளர்கள்: நல்லையா, சுப்பிரமணியம் முதலானோர் தலைமை தாங்கி நடாத்தப்பட்ட – முற்றுமுழுதாகத் தாழ்த்தப்பட்ட மக்கைளையே கொண்ட – மௌன ஊர்வலமும் அத்தோடொத்த பல காரியங்களும், மீளாய்வு செய்யப்பட்டு, ”தியாகங்களுக்கஞ்சாத விட்டுக்கொடாத போராட்டம் ஒன்றே ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கக்கூடியது” என்ற கொள்கையில் வெகுஜன இயக்கம் நெறிப்படுத்தப் பட்டது. இந்த நெறிப்படுத்தலின் அடிப்படையில் ஆலயப்பிரவேச இயக்கங்கள், தேனீர்க்கடைப் பிரவேசப் போராட்டங்கள் நாடெங்கும் விரிவடைந்தன. இந்தப் போராட்டங்கள் இழப்புக்கள் பலவற்றுக்கும் உட்பட்டதாயிற்று. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை இயக்கங்கள் காலத்தில் இந்த மக்களுக்கு ஒத்தாசையாக இருந்த தமிழ்த் தலைவர்களும், பிரமுகர்களும், தந்த ஆதரவுக்கு முற்றும் வேறுபட்ட விதத்தில் அப்போதைக்கப்போது உரிமைப்போர் நடந்த இடங்களுக்கு நேராகச் சென்று ஆலோசனை கூறியும், உற்சாகமளித்தும், இலங்கையின் சகல பகுதிகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை விளங்கவைத்தும், சிங்கள சாதாரண மக்களின் அனுதாபத்தைப் பெற்றுத் தந்தும் இன்றுவரை தொடர்ச்சியாக வெகுஜன இயக்கத்தின் நடவடிக்கைகளை உற்சாகப்படுத்தியும் வரும் என்.சண்முகதாசன் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும் அதேவேளை சாதி வெறியர்களுக்குச் சிம்ம சொற்பனமாகவும் இருக்கிறார் என்பது விசேஷமாகக் குறிப்பிடக் கூடியதாகும்.

66-78க்கிடையிலுள்ள காலப்பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொண்ட வெற்றிகள் முன்னே காட்டப்பட்ட 30 ஆண்டுகால இயக்க வழியில் இந்தப் 12 ஆண்டு காலம் குறுகியதாயினும் இந்தக் குறிகிய காலத்திற் சாதிக்கப்பட்ட காரியங்கள்தான் விகிதத்தில் மிகமிகத் தாக்கமானதும், நிரந்தரமானதுமாகும். இந்தக் குறுகிய காலப் பலாபலன்களை அரைநூற்றாண்டு காலப் பலாபலன்களுடன் ஒப்பிடுவதில் கருத்துவேறுபாடு யாருக்குமே இருக்க முடியாது!

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகள்!
மாவிட்டபுரம் கந்தன், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள், செல்வச்சந்நிதி முருகன், வல்லிபுர ஆழ்வார் ஆகியவைகள் உட்படப் பல பகுதிகளின் ஆலயங்களின் கதவுகள் திறக்கப்பட்டதும், எவ்வளவு சரித்திரப் பிரசித்தி பெற்ற சம்பவங்களோ அதேயளவுக்குப் பிரசித்தி பெற்றவையே தேனீர்க்கடைகள், பொது நிலையங்கள் திறக்கப்பட்ட சம்பவங்களும், பொதுக் கிணறுகள் புழக்கத்துக்கு விடப்பட்ட செயலுமாகும்.

1968-78க்கிடையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் யாவும் மக்கள் மனத்திற்கு வலிந்து கொண்டுவர வேண்டியதில்லை. ஏனெனில் இவை மிகச் சமீபத்திலே நடந்த 10ஆண்டுகாலச் சம்பவங்களாகும்.

அதற்காக ஒரு வரலாறு பிறக்க இருக்கிறது. அந்த வீர வரலாறு ஒடுக்கப்பட்ட மக்களின் பலநூறு சந்ததியினருக்கும் வழிகாட்டியாகவே நிற்கப்போகின்றது.

இந்த இடையில் சாதிக் கொடுமையின் வேள்வித் தீக்கு 11 ஒடுக்கப்பட்ட வீரர்கள் பலியிடப் பட்டனர். பொருட்சேதம், இரத்தசேதம் கணக்கிட முடியாதவை. இந்தத் தியாகங்கள் யாவும் ஒடுக்கப்பட்ட மக்களின் 50ஆண்டுகாலத் தியாகங்களைவிட மேலானவை என்பதற்குப் பின்னே வரும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு சான்றுகள் பகரும். இச்சிறு கட்டுரைக்குள் அவைகளை எல்லாம் அடக்க முடியாது.

இந்தப் பத்தாண்டு காலத்துள் ஒடுக்கப்பட்ட மக்களாலும், அதற்கு ஆதரவு தந்த சக்திகளாலும் சரித்திரப் பிரசித்தி பெற்ற கோவில்கள் நான்கு உட்படப் பலவும், தேனீர்ச் சாலைகளும், பொது நிலையங்களும் வெல்லப்பட்டன.

”தியாகங்களுக்கஞ்சாத விட்டுக்கொடாத போராட்டமே முடிவான விடுதலையைத் தரவல்லது” என்ற வழியில் முன்னேறிச் செல்லத் துடிக்கும் மக்கள் பரப்பில் மாற்றங்களை வரவேற்கும் சகலரும் இணைந்துகொள்ளக் கடமைப்பட்டவர்களாகின்றனர்.

பின்னணி (இங்கு சில பகுதிகள் காணாமல் போய்விட்டன)

அவ்வேளை இந்துக்கல்லூரி ஆசிரியராக இருந்த நெவின்ஸ் செல்லத்துரை அவர்களைத் தலைவராகவும், அமரர் ஜேக்கப் காந்தி அவர்களைச் செயலாளராகவும் கொண்டு உதயமாகிய ”ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கத்திற்கு” மேலே குறிப்பிடப்பட்ட நால்வரும் போஷகர்களாக இருந்தமையிலிருந்து அன்று தொடக்கம் இன்றுவரை சாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டும் தன்னந்தனியனாக நிற்கவில்லை என்பதும், காலத்துக்குக் காலம் நல்லெண்ணம் கொண்ட மக்கள் பலரும் ஒத்தாசை நல்கியுள்ளனர் என்பதும் புலனாகின்றது.

இந்தப் போஷகர்களில் மூவர் வெள்ளையர்கள் ஆதலால் அவர்கள் பிரதானப் படுத்தப் படவில்லையாயினும், உருத்திர கோடீஸ்வர ஐயரைப் பொறுத்தவரை அவர் சாதித் தமிழர்களின் கண்டனங்களுக்கும், எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் இலக்காக வேண்டியதாயிற்று. இதேபோல் இந்த ஸ்தாபனத்தின் யோவேல் போல் எண்ணற்ற எதிர்ப்புகளுக்கும் பயமுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்துப் பெருமையைச் சம்பாதிக்கத் தவறவில்லை.

1927ம் ஆண்டுக் காலகட்டத்தில் இலண்டனில் இருந்து தனது நண்பர் மூலமாக இலங்கைவாழ் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை, இலண்டனில் குடியேற்ற நாடுகளின் பிரச்சனைகளைக் கவனிக்கவென நிறுவப்பட்ட சபைக்குத் தெரிவித்ததில் அமரர் யோவேல் போல் அவர்கள் எடுத்த முயற்சியின் பலாபலனாக டொனமூரைத் தலைவராகக் கொண்டு இலங்கைக்கு வந்த அறுவர் அடங்கிய கமிஷனாகும். ”வயதுவந்தோருக்கு வாக்குரிமை அளித்தல்” என்ற கொள்கையின் கீழ் அன்று குடியேற்ற நாடுகளின் காரியதரிசியாக இருந்த அமெரி என்ற M.P யினால் நியமிக்கப்பட்ட இந்த டொனமூர்க் கமிஷனுக்கு எதிர்ச் சாட்சியமளிக்க சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் இலண்டன் மாநகரம் சென்றதில் இருந்துதான், ”பஞ்சமச் சாதியிடம் வாக்குக் கேட்டுச் சாதிமான்கள் யாசகம் போவரோ?” என்ற கேள்வி சாதிமான்களிடையே ஆக்ரோஷமாக எழுந்து சாதி அடக்குமுறைகள் கோரவடிவங்களை எடுத்தன என்பது முக்கிய கவனத்துக்குரியதாகும். பின்னர் இங்கே வந்த டொனமூர் கமிஷன் ”வயது வந்தோருக்கு வாக்குரிமை” கிடைப்பதன் மூலம் பல உரிமைகளை அவர்கள் அடைய வழி பிறக்கும் என அறிக்கை மூலம் பிரகடனப் படுத்தியபோதும் உள்நாட்டு அரசு இயந்திரங்களைப் பெருஞ்சாதியினரே ஆளுகை நடத்தி வந்தமையால்- ஒடுக்கப்பட்ட மக்களால் எதிர் பார்க்கப்பட்டவைகள் நடந்தேறவில்லை. பதிலுக்கு அடக்குமுறைகள் அதிகரித்தன. விதானை, உடையார், மணியகாரன் என்ற பதவிகளில் குந்தியிருந்தவர்கள், காவல்ப் படையினைச் சேர்ந்தவர்கள், சிவில்சேவை அதிகாரம் வகித்தவர்கள் உட்பட சகல பிரிவினரும் தேசவழமைச் சட்டத்தின் அடிப்படையில் துரித கதியில் செயற்படத் தொடங்கினர். இவைகளைத் தாக்குப் பிடிக்க முடியாத ஒடுக்கப்பட்ட மக்கள் மதமாற்றம் போன்ற குறுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இதனால் ஒருசில சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின என்பது உண்மையே.

அந்தக் காலத்துத் திண்ணைப் பள்ளிகளுக்குக்கூட அனுமதி கிடைக்கப்பெறாத மக்களுக்குப் பிற மதப் பாடசாலைகள் சற்று வழி விட்டன. சுற்றுச்சார்புகளை மீறிப் பாடசாலைகளுக்குச் சென்ற பலர் தண்டிக்கப்பட்டனர், இம்சிக்கப் பட்டனர்.

பகிரங்க வீதிகளில் தலைநிமிர்ந்து நடமாடத் தடை- சுடலைகளில் பிணம் சுடத் தடை- பொது ஸ்தாபனங்களில் உள்நுழையத் தடை- சுதந்திரமான வாகனப் போக்குவரத்துக்குத் தடை- கோவிற்பக்கம் செல்லத் தடை- மேளம் அடிக்கத் தடை- மீசை விடத் தடை- கடுக்கன் அணியத் தடை- குளங்களில் குளிக்கத் தடை- பந்தல் போட்டு வெள்ளை கட்டத் தடை- முளங்கால் மட்டத்திற்குக்கீழ் வேட்டியணியவும், மேலங்கி அணியவும், சால்வை போடவும் தடை- வண்டில் ஆசனத்தட்டில் ஏறியிருக்கத் தடை- புகைவண்டியின் ஆசனங்களில், பஸ் ஆசனங்களில் இருக்கத் தடை- கடை போன்றவை வைக்கத் தடை- செய்த வேலைக்குக் கூலி கேட்கத் தடை- குழந்தைகளுக்கு நல்ல பெயரிடத் தடை- பால்மாடு வளர்க்கத் தடை- விறுமர், அண்ணமார், காளி, பெரிய தம்பிரான், வீரபத்திரர், வைரவர், நாச்சிமார், காத்தவராயர் ஆகிய தெய்வங்களின் பெயர்களைவிட ஏனைய பெயர்களில் கோவில்கள் அமைக்கத் தடை- குடை பிடிக்கவும், வெள்ளை வேட்டி அணியவும், செருப்பு அணியவும், பெண்கள் குடுமி போட்டுக்கொள்ளவும் தடை- தாவணி போடத் தடை, தங்கத்தாலி, நகை நட்டுக்கள் அணியத் தடை- இப்படித் தடை வரிசையோ கணக்கற்றவை. இவை யாவும் தேசவழமை என்ற மதிப்பீட்டுக்கு உட்பட்டவையாகவே கணிக்கப் பட்டன.

சர்வசன வாக்குரிமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறையில் இராமநாதன் துரை அவர்கள் இலண்டன் சென்றிருந்தபோது அவரைத் தலைவராகக் கொண்டிருந்த சைவ சித்தாந்த சபைக்குத் தற்காலிகத் தலைவராக, ஆறுமுகநாவலரின் மருமகனாகிய த.கைலாசபிள்ளை அவர்கள் நியமிக்கப் பட்டிருந்தார்கள். அப்போது பரமேஸ்வராக் கல்லூரியில் சைவ சித்தாந்த அறக்கல்விப் போதனைக்காக மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அப்போது திரு.யோவேல் போல் அவர்களால் உந்தப்பட்ட சுன்னாகத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டோர் சிலர், தாமும் சைவ சித்தாந்த அறக்கல்வியைப் பெறவேண்டும் என்று கோரி, மாநாட்டு மண்டபத்துக்குள் நுழைய முற்பட்டபோது, ”நிரந்தரத் தலைவர் இல்லாதபோது இதை அனுமதிக்க முடியாது” என மாநாட்டுத் தலைவர் கைலாயபிள்ளை மறுக்கவே, அறக்கல்விக்கு அனுமதி கேட்டுப் போயிருந்த ஒடுக்கப் பட்டோர் அவரின் மறுப்பை எழுத்தில் பெற்று, டொனமூர்க் கமிஷனுக்கு தந்திமூலம் இலண்டனுக்கு அனுப்பி வைத்தனர். அந்த வேளையும் உயர்சாதியைச் சேர்ந்த நாகநாதி அதிகாரம், இலங்கைச் சட்டசபை உறுப்பினராக இலண்டனிலிருந்த தம்பிமுத்து ஆகியோர் இந்த மக்களுக்கு ஆதரவாய் இருந்தனர். நம்மவர் துணிந்து செயற்பட்டமையால்த்தான் இராமநாதன் துரை அவர்களின் இலண்டன் பிரயாணம் தோல்வியில் முடிந்ததெனலாம்.

1930ம் ஆண்டுக்காலப் பகுதியில் கண்டி எச்.பேரின்பநாயகத்தைத் தலைவராகவும், செனட்டர் நாகலிங்கம், ஓறேற்றர் சுப்பிரமணியம், கலைப்புலவர் நவரெத்தினம், ஏ.எஸ்.கனகரெத்தினம் ஆகிய முக்கியஸ்தர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய இளைஞர் காங்கிரஸ் என்ற ஸ்தாபனம் தோன்றியது.

இந்த ஸ்தாபனம் பல தேசியப் பிரச்சனைகளைக் கொண்டிருந்தபோதும், சாதி ஒழிப்பு விவகாரத்தில் பெருமளவு செயற்பட்டு, ”சம ஆசனம்- சம போசனம்” என்ற கொள்கையை ஏற்று நாடெங்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டது. அப்போது இவர்களுக்குச் சாதிமான்களால் கிடைத்த எதிர்ப்புகள் பெருமளவாகும். இதன் பிரச்சாரத்துக்கென தமிழகத் தமிழறிஞர் திரு வி.க அவர்கள் அழைக்கப்பட்டு, சமபந்தி, சமபோசனப் பிரசாரத்தில் ஈடுபடுத்தப் பட்டதும் அவர் திரும்பிப்போன மறுகணமே அவர் பேசிச் சென்றதும், சம ஆசன நடவடிக்கையில் ஈடுபடுத்தப் பட்டதுமான பல பாடசாலைகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. வசாவிளான் வடமூலை, ஒட்டகப்புலம், சுழிபுரம், புன்னாலைக்கட்டுவன், காங்கேசன்துறை, பருத்தித்துறை ஆகிய இடங்களில் சுமார் 14பாடசாலைகள் சாதிவெறியர்கள் வைத்த தீயில் எரிந்து சாம்பராகின.

1931இல் வரவிருந்த ஆட்சிமன்றத் தேர்தலைத் தமிழர்களின் உரிமைக்காகப் பகிஷ்கரிக்கத் திட்டமிட்டுப் பிரசாரம் செய்துவந்த வாலிபர் காங்கிரசினர், அவ்வேளை சாதிவெறியர்களின் கோபாக்கினிக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. இந்தக் காலகட்டத்தோடு வீறுகொண்டெழுந்து நின்ற சாதி வெறியர்கள் கிராமப்புறங்கள் எங்கும் தங்கள் தாக்குதல்களை மேற்கொண்டனர். அத்தாக்குதல்களுக்கு முதன்முதலில் பலியிடப்பட்டவன் புத்தூர்ப் பகுதியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டவன் ஒருவனாகும். பீதிமிகுதியால் பனைமரத்தில் ஏறியிருந்த அந்த அப்பாவிப் பஞ்சமன் மரம் தறித்து வீழ்த்தப்பட்டு- கொல்லப்பட்டு- அந்த மரத்தின் அடியிலேயே கொழுத்திப் பிடிசாம்பராக்கப் பட்டான்! ஏனைய கிராமப் புறங்களில் இல்லாத அளவில் புத்தூர்ப் பிரதேசத்தில் நில ஆதிக்க முறையும், சாதி ஒடுக்குமுறையும் மேலோங்கியிருந்தன என்பதற்கு இன்றும் அழியா அடையாளச்சின்னங்கள் பல உண்டு. பல பாரம்பரிய குடும்பங்களின் பழைய நால்சார் வீடுகளில் இன்றுவரை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பல்லக்குகளும், வீட்டு முற்றங்களின் நீள்வரிசைகளில் சுற்றுவட்டாரத்தில் உண்டாக்கப்பட்ட பல அளவுகள் கொண்ட பொருக்குப் பட்டையற்ற நேர்மரங்களும் இன்றைய அமைப்புக்குச் சற்று வேறுபட்ட, சற்று உயர்ந்த அமைப்பிலுள்ள ஏர்க் கலப்பைகள் இடம்பெற்றுள்ளதும் இன்றும் நாம் பார்க்கக்கூடிய சின்னங்களாகும். அக்காலத்தில் பல்லக்கு முதலிகுடும்பம் எனப்படுவோர் தங்கள் பிரயாணத்திற்குப் பயன்படுத்திய பல்லக்குகளைச் சுமந்துசெல்லக் கோவியர் சமூகத்தினரை அமர்த்தி வைத்துக் கொண்டிருந்ததையும், ஊரிலுள்ள பஞ்சமர்களிடையே ஏற்பட்ட குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்க, அளவான மரத்தைப் பார்த்து அவர்களைக் கைகொடுக்க வைத்துச் சவுக்கடி கொடுத்த தர்பார்த்தன வழக்கத்தையும், மாட்டுக்குப் பதிலாக அடிமை மனிதனை ஏரில் பூட்டி, உழுது பயிரிட்டமையையும் இந்த அடையாளச் சின்னங்கள் இன்றும் நினைவுறுத்திக் கொண்டிருக்கின்றன.

கலியாணப் பெண்களுக்கு சீதனம் கொடுக்கும்போது அந்த சீதன வரிசையில் ஒரு கோவியனும், ஒரு பள்ளியும் நிச்சயமாக இடம் பெற்றே தீர வேண்டும் என்பது இறுக்கமான நடைமுறையாயிருந்தது.

இந்தக் குடும்பங்களின் மரண வீடுகளில் தொண்டு வேலைகள் புரியும் வரிசைகள் சில இன்றுவரை இருந்து வருவதைக் காணலாம்.

இயற்கை மரணத்தை எதிர் நோக்கி நிற்கும், நயினார் அல்லது நயினாத்தி மரணப் படுக்கையிற் கிடக்கும்போது கண், வாய் பொத்த, கோவியன், அல்லது கோவிச்சி காத்திருக்க வேண்டும். மரணம் நிகழ்ந்த பின்பு சகல தொண்டு வேலைகளையும் கோவியக் குடும்பம் செய்து முடிக்க வேண்டும். மரணித்தது ஆணாக இருப்பின் ”பரியாரி” என்று இவர்களால் அழைக்கப்படும் அம்பட்டன் பிணத்தைச் சவரம் செய்வதும், ”கட்டாடி” என்று அழைக்கப்படும் வண்ணான் தனது சேவைகளைச் செய்வதும் முதன்மையான அடிமைத்தனத் தொண்டுகளாகும். இவைகளுக்குப்பின் பிரேத ஊர்வலத்தில் நடைமுறை வரிசை பார்ப்பதற்கே மனங்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

கட்டை குத்தி அடுக்கும் பள்ளர் பச்சையான கட்டை குத்திகளைச் சுமந்துகொண்டு முன்னே செல்ல, அதையடுத்து மாராயச்சாதிப் பெண்கள் குடமூதி நடக்க, அதை அடுத்து ”சாம்பான்” என்ற பறையன் பறை கொட்டிச் செல்ல, அதன் பின்னே வண்ணான் நில பாவாடை விரித்துவர, நான்கு கோவியர்கள் பாடை காவியும், நாலு கோவியர்கள் மேலாப்புப் பிடித்தும்வர, கடைசியில் பரியாரி என்ற அம்பட்டன் பாடைக்குப் பொரி எறிந்து நெருப்புச்சட்டி தூக்கிவரும் காட்சி சாதி முறையின் பூரண வெளிப்பாடானதாகும். சகலவிதமான அடிமை குடிமை முறைகளோடும் நடந்து வந்த வைபவ முறைகளில் பெரிய அளவு மாற்றங்கள் எதுவுமே இல்லாது இன்றுவரை அவை நடைமுறையில் இருப்பதைக் காணலாம்.

ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கம் சற்று விரிந்து பரந்ததன் பலாபலனாய் 1940ம் ஆண்டில் ஒடுக்கப்பட்ட சகல மக்கள் பிரிவினரையும் உள்ளடக்கிய ”சிறுபான்மைத் தமிழர் மகாசபை”யாகப் பரிணமித்தது.

அன்று சமூக சிறுசிறு இயக்கங்களோடும், தனித்தனியாகவும் இருந்து செயல்பட்டு வந்த எஸ்.ஆர்.யேக்கப் காந்தி, ஆ.ம.செல்லத்துரை, டீ.யேம்ஸ், வீ.ரீ.கணபதிப்பிள்ளை, எம்.சி.சுப்பிரமணியம், எம்.ஏ.சி.பெஞ்சமின், எஸ்.நடேசு, ஜீ.நல்லையா, வி.ரி.அரியகுட்டிப்போதகர், ஜீ.எம்.பொன்னுத்துரை, யோனா, யே.டீ.ஆசீர்வாதம், எம்.வி.முருகேசு, விஷயரட்ணம், பேப்பர் செல்லையா, A.P.இராசேந்திரா ஆகியோர்களையும் உள்ளடக்கிக்கொண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த ஸ்தாபனம் உடனடியாகவே பல் சாதிக் கொடூர நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிற்று. வில்லூன்றி மயானத்தில் முதலி சின்னத்தம்பி சுட்டுக் கொல்லப் பட்டதும், பூநகரியில் நடந்த சாதி வெறியினால் மூவர் உயிர் இழந்ததும் 26வீடுகள் தீக்கிரையாக்கப் பட்டதும் இந்தக் காலகட்டத்தில்தானாகும்.

யாழ்ப்பாணத்து நீதிமன்றத்தில் முதலி சின்னத்தம்பியின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நியாய தரந்தரர்கள் தங்களுக்கள் ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு முதலி சின்னத்தம்பிக்கான பக்கத்திற்கு வழக்காட மறுத்தபோது திரு.தர்மகுலசிங்கம் அவர்கள் ஒருவர் மட்டுமே சாதிமான்களின் கட்டுப்பாட்டை உடைத்துக் கொண்டு வழக்குரைக்க முன் வந்தார். இதன்மூலம் தனது நல்லெண்ணத்தைத் தெரிவித்துக் கொண்டபோதும், மகாசபைக்கு அது போதுமான ஆதரவாகப் படாமையால் கொழும்பு நீதிமன்றத்திற்கு வழக்கை எடுக்க அப்போது யாழ்ப்பாணத்திலிருந்த சிங்கள நியாய துரந்தரர் உதவியோடு முயற்சித்து வெற்றி கண்டதுடன், கொழும்பு விசாரணையில் மூவர் தண்டிக்கப்படவும் வைத்தனர். இதேபோன்றே பூநகரி கொலை, வீடெரிப்பு வழக்குகள் கண்டி நீதிமன்றத்தின் பின்பு கொழும்பு நீதிமன்றத்திலும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுக் குற்றவாளிகள் தண்டிக்கவும்பட்டனர்.

அப்போதைக்கப்போது, அவ்வப்பகுதிகளில் சாதி அடக்குமுறைத் தாக்குதல்களுக்கெதிராகச் சட்ட நடவடிக்கைகள் மூலம் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாதென்பதனைச் சிறிய அளவில் இவர்கள் உணர்ந்து கொண்டமைதான் சில அரசியல் இயக்கங்களுக்கான ஆதரவுக் குரலையும் இவர்கள் வைக்க முற்பட்டமைக்கான காரணமாயிற்று. இந்த முயற்சியில் முதலாவது பலனாகச் சங்கானையைச் சேர்ந்த பொன்னர் என்பவர் கிராமச் சங்க உறுப்பினராகவும், பளையைச் சேர்ந்த செல்லையா என்பவர் கிராமச் சங்க உறுப்பினராகவும் வந்தனர்.

கிராமச் சங்க உறுப்பினர் முதன்முதல் கிராமச் சங்கக் கூட்டத்திற்குச் சென்றபோது, கைத்தறி நெசவுக் கிடங்கு போல கிடங்கமைத்து, அதிலே கால் செருகிக்கொண்டு உட்காரும்படியும், செல்லையா சென்றபோது, தென்னைமர அடிக்குத்தி ஆசனமாக வைக்கப் பட்டிருந்தமையும், தமிழர்களின் ஜனநாயக அமைப்பு முறையின் சரித்திரத்தில் குறைந்தபட்சம் பித்தளை எழுத்துக்களாலேனும் பொறித்து வைக்கப்பட வேண்டியவையாகும். அத்தோடு, அந்தக் காலகட்டத்தோடு ஒட்டிய ஐந்தாண்டு இடைவெளியில் எரிக்கப்பட்ட வீடுகள் என்று கணக்கை நிரைப் படுத்தினால் அவை:

பூநகரி- 26
காரைநகர்———————–10
கரவெட்டி————————14
ஊர்காவற்றுறை—————5
பருத்தித்துறை(சல்லி)— 3

கன்பொல்லை, கரவெட்டி மேற்கு, கலட்டி, இளவாலை, நாரந்தனை மேற்கு, பளை, அல்லைப்பிட்டி, புத்தூர், சங்கானை மொத்தமாக 65க்குக் குறையாததுதான் அமையும்.

இந்த இடைக்காலத்தின் சாதிவெறி நடவடிக்கைகளில் பலியான உயிர்கள் என்று குறிப்பிடும் போது:-

பன்றித்தலைச்சி————————- 3
பூநகரி—————————————– 3
சண்டிலிப்பாய்—————————– 1
வில்லூன்றி——————————— 1
ஊரெழு————————————— 1
நயினாதீவு———————————– 1
பருத்தித்துறை-சந்தாதோட்டம்—- 1
காரைநகர்———————————– 1
கெருடாவில்——————————– 1
புத்தூர்—————————————- 1
கோண்டாவில்—————————– 1
புன்னாலை———————————- 1
கம்பர்மலை——————————— 1

இக் கட்டுரைக்குள் அடக்கப்படாத 68க்குப் பின் சம்பவங்களினால் இழக்கப்பட்ட உயிர்கள் பற்றிய தொகுப்பு:

சங்கானை———————————– 3
கன்பொல்லை—————————– 3
கரவெட்டி———————————— 1
அச்சுவேலி———————————- 1
சண்டிலிப்பாய்—————————– 1
கொடிகாமம்——————————– 1
பளை—————————————— 2
மிருசுவில்———————————— 1
என நிரைப்படுத்திக் கொள்ளலாம்.
உயிர்ச் சேதமற்ற துப்பாக்கிச் சூடு, வாள்வெட்டு, கத்திக்குத்து, எலும்பு முறிவு, மானபங்கம் ஆகியவை என்று குறிப்பிடும்போது, யாழ்ப்பாணக் குடா நாட்டில் எத்தனை சிறு கிராமங்கள் உள்ளன என்று கணக்கெடுத்து, சிறுநகர் எத்தனை இருக்கிறது என்று பார்த்து இரண்டையும் சேர்த்துக் கணக்கெடுத்து, சராசரி 75னால் பெருக்கினால் வரும் எண்ணிக்கை எதுவோ, அதுதான் உத்தேச- ஆனால் சரியான கணக்காகும்.

இந்தக் காலத்தில் விஷேசமாக நடைபெற்ற இன்னொன்று குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
சோல்பரிப்பிரபு தலைமையிலான ஒரு கமிஷன் இந்தச் சாதி அடக்குமுறையில் விசாரணைக்காக நியமிக்கப் பட்டது.

இந்தக் கமிஷனுக்கு சிறுபான்மைத் தமிழர் மகாசபையினர் ஒரு விபர வியாக்கியானக் கொத்துச் சமர்ப்பித்திருந்தனர். இந்த வியாக்கியானக் கொத்துச் சமர்ப்பிக்கப் பட்டதுதான் தாமதம், அப்போது பருத்தித்துறைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் சபையினரைச் சென்.சாள்ஸ் பாடசாலையில் சந்தித்து, அந்த வியாக்கியானக் கொத்தை மீளப் பெறும்படியும், தான் சகல சாதிப் பிரச்சனையையும் தீர்த்து வைக்க ஆவன செய்வதாகவும் கூறினார். இதை மகாசபையினர் நிராகரித்தனர். அதன்பின் மகாசபையினர் சோல்பரியால் அழைக்கப் பட்டனர். பத்துப்பேர் கொண்ட ஒரு குழு கொழும்பு சென்று விபரக் கொத்தின் வியாக்கியானத்தைத் தெளிவு படுத்தியதன்மேல் சோல்பரி இதை ஏற்றுத் தனது யாழ்ப்பாண வருகையின்போது சாதி ஒடுக்குமுறைக்குட்பட்ட ஒரு கிராமத்தைத் தனக்குக் காட்டும் படியும் கேட்டு, இந்தக் காரியத்தைத் தான் வந்து பார்க்கும் வரை இரகசியமாக வைத்திருக்கும்படி கூறினார். குறிப்பிட்டபடி சோல்பரி யாழ்ப்பாணம் வந்தபோது, நெல்லியடிச் சந்தியில் பொன்னம்பலம் அவர்களால் பெரு வரவேற்பொன்று அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு முடிந்தபின், இரகசியத் திட்டத்தின்படி பருத்தித்துறை வாடி வீட்டிலிருந்து சோல்பரிப் பிரபுவை மகாசபையினரைச் சேர்ந்த திருவாளர்கள். எம்.சி.சுப்பிரமணியம், டீ.யேம்ஸ், வீ.ரீ.கணபதிப்பிள்ளை ஆகியோர் அழைத்துச் சென்று கன்பொல்லைக் கிராமத்தைக் காட்டினர். இரண்டொரு நாட்களுக்கு முன் சாதி வெறியர்களால் தீயிடப்பட்டுப் புகைந்து கொண்டிருந்த வீடொன்றையும் சோல்பரி பார்த்துக்கொண்டு திரும்பியபின், குறிப்பிட்ட மூவரும் பஸ் எடுப்பதற்காக நெல்லியடிக்கு வந்தனர். இவைகளை அவதானித்திருந்த சாதி வெறியர்கள் மூவரையும் சிறைப் பிடித்து எம்.சி.சுப்பிரமணியம் அணிந்திருந்த கதர் சால்வையாலேயே சுற்றி மூவரையும் கட்டி நையப்புடைத்துப் பட்டப் பகலில் நெருப்பு வைக்க முற்பட்டனர். அந்தவேளை தற்செயலாக டாக்டர் பஸ்ரியான் என்பவரும், மூன்று பொலிஸாரும் காரில் வந்தபோது, சாதி வெறியரின் தீ வைப்பு முயற்சி முறியடிக்கப்பட்டு இம்மூவரும் காப்பாற்றப் பட்டனர். இந்தச் சம்பவம் இன்று பகிரங்கப் படுத்தப் படுவதைச் சாதித் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வந்தவர்கள்கூட விரும்ப மாட்டார்கள்.

1949 செப்டம்பர் 14ம் திகதி அப்போதைய உள்நாட்டு மந்திரியும், கிராம அபிவிருத்தி மந்திரியுமாயிருந்த ஒலிவர் குணத்திலகா அவர்கள் இந்துக் கோயில்களில் பலியிடுதல், நிதி நிர்வாகம் ஆகியன பற்றியும் தனக்குக் கிடைத்த குற்றச் சாட்டுதல்களை யோசிக்க கீழ்சபையிலும், மேல் சபையிலும் அங்கத்தவர்களான தமிழ் உறுப்பினர்களை அழைத்துச் சம்பாஷித்தார். அப்போது திரு. சி.சிற்றம்பலம் இவைகளைவிட ஒரு பகுதியினரைக் கோவிலுக்குள் விடாமல் தடுத்து வைத்தல் பெருங் குற்றம், எனவே அதை முதற் பிரச்சனையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனப் பிரேரிக்க செனட்டர் பெரியசுந்தரம் அதை ஆதரிக்க இந்த ஆலய வழிபாடு விஷயம் பற்றித் தனியாக விசாரிக்க ஒரு கமிஷன் வைக்கிறேன் எனக் கூறி வாய்மூலம் நேருக்கு நேராகவும், எழுத்து மூலமாகவும் கமிஷனுக்குச் சாட்சியங்கள் அளிக்கப்பட்டன. வடக்கில் சுமார் 60ஸ்தாபனங்களினதும் கோவில் நிர்வாகிகள், குருக்கள் என்ற விதத்தில் 80பேர்களினதும் வசதி படைத்த கொழும்பு வாசிகளின் ஸ்தாபனங்கள் 13இனதும் தனியானவர்கள் 12பேர்களினதும் சாட்சியங்கள் பதிவாகின. ஆலயப் பிரவேசத்தை ஆதரித்த விதத்தில் யாழ்ப்பாணம் காந்தி நிலையம், மனோகரா சேவா சங்கம், சுன்னாகம் தாழ்த்தப்பட்டோர் ஐக்கிய சங்கம், தேவரையாளி சைவ கலைஞான சபை, பருத்தித்துறை திராவிடர் கலைமன்றம் ஆகியவை தர்க்கரீதியான முறையில் வழிபாட்டை வற்புறுத்தி நின்றன. அத்துடன் வட பகுதியிலுள்ள ஸ்தாபனங்களையும், தனி மனிதர்களையும் தவிர்ந்த ஏனைய ஸ்தாபனங்களும் தனி மனிதர்களும் நூற்றுக்கு நூறு இந்தத் தர்க்க நியாயங்களுக்குச் சார்பாகவே சாட்சியமளித்துள்ளனர். இதற்கு மாறாகச் சாட்சியம் கொடுத்தவர்களுடைய தர்க்க நியாயங்களுள் ”தாழ்த்தப் பட்டவர்கள் மனிதப் பிறவிகள் அல்லர்” என்ற கருத்துக்களே பொதுவில் பரவலாக இடம் பெற்றிருந்தன.

முதன்முதலில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இந்து சமய வழிமுறைகளில் தமக்கென பாடசாலை ஒன்றை அமைக்கும் முயற்சியில் வதிரியைச் சேர்ந்த கா.சூரன் என்பவர் எடுத்த விடா முயற்சியால் 1914ம் ஆண்டிலேயே வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரி அமைக்கப் பட்டதும், அதைத் தொடர்ந்து கல்வி அடிப்படையிலான முயற்சிகள் எடுக்கப் பட்டதும், அப்பகுதி மக்கள் மேலும் முன் செல்ல உதவியது.

1940 – 41 காலப் பகுதியில் டீ.ரீ.சாமுவேலைத் தலைவராகவும், கவிஞர் செல்லையாவைக் காரியதரிசியாகவும், சைவப்புலவர் வல்லிபுரத்தைத் தனாதிகாரியாகவும் கொண்டு தொடக்கப்பட்ட வடமராட்சி சமூக சேவா சங்கம், வடமராட்சிப் பகுதியில் தொடக்கப்பட்டபோது அப்பகுதியைச் சேர்ந்த பல உயர்சாதி இந்துக்களும் அதற்கு ஆதரவளித்து உற்சாகப் படுத்தினர்.

1944 – 46ம் ஆண்டுக் காலத்தில் அச்சங்க மாநாடொன்றில் தலைமை உரையாற்றிய டாக்டர் பசுபதி என்பவர் ”தாழ்த்தப்பட்ட மக்களைக் கோவிலுக்குள் அனுமதிக்காத வரையில் நான் இன்றிலிருந்து கோவிலுக்குள் போக மாட்டேன்” என்று சபதம் எடுத்துக் கொண்டார். இந்தச் சபதத்தை அவர் உயிர் உள்ளவரை – நீண்டகாலம் கடைப்பிடித்தே வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பல சம்பவங்கள் மறப்பதற்கரியனவே!

1956-ம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் மகாசபையின் இணைக் காரியதரிசிகளாகப் பொறுப்பேற்றுக் கொண்ட இ.வி.செல்வரட்ணமும், கவிஞர் பசுபதியும் திரு.எம்.சி.சுப்பிரமணியம் தலைமையில் எடுத்துக்கொண்ட நடைமுறை வேலைகளுக்கு நாடெங்குமிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் பகுதிகளிலிருந்து ஆதரவு கிடைத்தது. அதன் பெறுபேறுகளாக 14க்கு மேற்பட்ட பாடசாலைகள் அமைய வழி பிறந்தமையாலும், அந்தக்கால வடபகுதி முதலாவது இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினரான பொன்.கந்தையா அவர்களின் துணிவான, நேரடியான ஒத்துழைப்புக் கிடைத்தமையாலும் இந்த இளைய தலைமுறையினர் மேலும் உற்சாகமுடன் செயற்பட்டனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் குரலின்கீழ் பல சாதியினரையும், பல மதத்தினரையும் பெருவாரியாகக் கலந்துகொள்ள வைத்த அனுபவத்திலிருந்துதான் ”தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்” பிறப்பிக்கப் பட்டதாகும். பல பிற்போக்காளர்களாலும், தமிழர் அரசியல் இயக்கங்களாலும் ஒருமுகமாக இந்த எழுச்சி எதிர்க்கப்பட்டபோது பெருஞ்சாதித் தமிழர் வழி வந்த திரு.என்.சண்முகதாசன் அவர்களால் தலைமை தாங்கப்பட்ட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த எழுச்சியை ஏற்று ஒத்துழைப்புத் தர முன் வந்ததோடல்லாமல் ஆக்கபூர்வமான காரியங்களில் நேரடியான ஒத்துழைப்பையும் நல்கியது. இந்தச் செயற்பாடு அதுவரை திறக்கப்படாது யாழ்நகர் எங்குமிருந்த தேனீர்க் கடைகளையும், யாழ் நகருக்கப்பால் கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களின் தேனீர்க் கடைகளையும் திறப்பதற்கு வாய்ப்பளித்தது. மகாசபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்களில் இருந்துதான் பொதுவான ஒரு அரசியல் உணர்வையும், சமூக மாற்றத்திற்கான செயற்பாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் பங்கையும், ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியெங்கும் பரப்ப முடிந்தது.

ஆரம்ப காலத்தில் செனற் சபையில் ஏ.பி.இராசேந்திரா அவர்களுக்கு நியமனங் கிடைத்த பின்னும் சிறிதளவேனும் நகர்ந்து கொடுக்காத சாதிமுறையில் சற்றுத் தளர்ச்சி ஏற்பட்டது, இந்தத் தலைமையின் நடவடிக்கைகளுக்குப் பின்புதான் என்பதைத் துணிந்து கூறிவிடலாம். இதேபோன்று பிற்காலப் பகுதியில் திரு.ஜீ.நல்லையா அவர்களுக்குச் செனட்டில் இடம் கிடைத்தபோதும், திரு.எம்.சி.சுப்பிரமணியம் அவர்களுக்குப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்தபோதும், ஒடுக்கப்பட்ட மக்களால் எதிர் பார்க்கப்பட்ட பலாபலன்கள் கிடைத்து விடவில்லை. இதிலிருந்து அரசாங்க மட்ட நியமனங்களைவிட இயக்க ரீதியான காரியங்களும், நடவடிக்கைகளுமே உரிமைகளை வென்றெடுக்கக் கூடியனவென்பது புலனாயிற்று.

திருவாளர்கள் சுப்பிரமணியமும், நல்லையாவும் பதவிகள் பெறாத காலத்தில் மக்கள் பெற்று வந்த பேறுகளை, அவர்கள் பதவி வகித்த காலங்களில் பெற முடியவில்லை. இதை அவர்களே ஒப்புக்கொள்வர்.

56க்கும் 66க்கும் இடையே உள்ள காலப் பகுதியில் சமூக ரீதியில் சலுகைகளைப் பெறும் முயற்சியில் சற்று வெற்றி காண முடிந்ததேயன்றி அந்தச் சலுகைகளால் சமூகக் கொடுமைக்குத் தீர்வு காண முடியவில்லை. இதற்கான காரண காரியங்களைத் தேடிப் பிடிப்பதில் அரசியல் கோட்பாடுகளுக்கூடான முயற்சிகள் நடந்தன. இதன் பிரதிபலிப்பாகவே 57ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமூகக் குறைபாடுகள் நீக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது சட்டமாக்கப்பட்டபோது சாதிக் கொடுமைகளிலிருந்து முற்றாக விடுபட இது வழி வகுக்கும் என்று பலரும் நம்பினர். ஆனால் அந்தச் சட்டம் ஒரு பரீட்சார்த்த முன்னறிவித்தல் போலவே நிலப் பிரபுத்துவ கெடுபிடிக்குட்பட்ட அரசு யந்திர சேவையாளர்களின் ஆளுகைக்கு உட்பட்டு தானாக அட்டை போலச் சுருண்டு கொண்டது.

இந்த நிலைமையை நன்கு உணர்ந்துகொண்ட இளம் சந்ததியினர் 1966 அக்டோபர் 21ல் ”சாதி ஒழிப்புச் சட்டத்தை அமுல் நடத்து” என்ற சுலோகத்தைத் தூக்கிப் பிடித்து ஆயிரக் கணக்கிற் திரண்டு சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாண நகரத்தை நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் மேல் குண்டாந்தடிப் பிரயோகம் செய்யப் பட்டது. பலர் காயமுற்றனர். சிலர் சிறைப் பிடிக்கப் பட்டனர். ஆயினும் திட்டமிட்டபடி ஊர்வலம் நகர்வரை எழுச்சி பொங்க வந்தே சேர்ந்தது!
இந்த ஊர்வலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடன் என்றுமில்லாத விதத்தில் வேறு சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.

தமிழர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள சாதி பிரச்சினை பற்றி பேச வாய் திறந்தால், ஒரே கேள்வியில் எங்களை மடக்குவார்கள். “சிங்களவன் சாதி பார்த்தா அடிக்கிறான்?” உண்மை தான். அவன் தான் “மோட்டுச் சிங்களவன்” ஆயிற்றே?(தமிழின வாதிகள் அப்படித் தான் அழைப்பார்கள்) தமிழர்கள் சாதி வாரியாக பிரிந்திருக்கிறார்கள் என்று மோட்டுச் சிங்களவனுக்கு தெரியுமா? தமிழ் இனவாதிகள் சிங்களவர்கள் அனைவரும் சாதி வேறுபாடற்ற ஒரே இனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரித் தான் சிங்கள இனவாதிகளும் தமிழர்களைப் பற்றி நினைக்கிறார்கள். இனக் கலவரங்களை தூண்டி விட்ட சக்திகள், தமிழர்கள் சிங்களவர்களை விட தாழ்ந்த சாதி என்ற கருத்தை விதைத்தன. தமிழர் தீண்டத் தகாத சாதி என்ற கருத்துப் பட, “பறத் தெமலோ” என்று கோஷமிட்டு கொண்டு தான் அடித்தார்கள், கொன்றார்கள். சிங்கள இனவெறியால் பாதிக்கப்பட்ட “பறத் தமிழர்கள்” அகதி முகாமிலும் தமக்குள்ளே சாதி பார்த்து ஒதுங்கிக் கொண்டார்கள்.

தமிழ் தேசியம் தோன்றுவதற்கு முந்திய காலங்களில், தமிழர்கள் சாதிப் பிரச்சினைகளை மறைக்கும் வலுவற்று இருந்தனர். அதற்கு மாறாக சிங்கள தேசியம், தனக்குள்ளே இருந்த சாதிப் பாகுபாட்டை வெளித் தெரியா வண்ணம் பூசி மெழுகியது. (பௌத்த மதம் சாதியத்தை எதிர்ப்பது முக்கிய காரணம்.) இருந்தாலும் சிங்களவர்களிடையே அவ்வப்போது எழும் சாதிப் பிரச்சினைகள் குறித்து, தமிழ் ஊடகங்கள் மௌனம் சாதித்து வந்தன. இன்றைக்கும் அது தான் நிலைமை. உண்மையில் இனப்பிரச்சினை கூட, இலங்கையின் ஆதிக்க சாதிக்குள் (வெள்ளாளர்+கொவிகம) எழுந்த முரண்பாடுகளின் வெளிப்பாடு ஆகும். சிங்கள- தமிழ் இன முரண்பாடுகள் வெடிக்க முன்னர், சாதிய சிந்தனையே மேலோங்கி இருந்தது. அவர்களுக்கு இடையே திருமண பந்தங்கள் கூட ஏற்பட்டிருந்தன.

தமிழர்கள் மத்தியில் ஆதிக்க சாதியாக இருக்கும் வெள்ளாளர்கள் அரசியல்-பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கி வந்துள்ளனர். அதே போல, சிங்களவர்கள் மத்தியில் ஆதிக்க சாதியான கொவிகம இன்று வரை இலங்கையின் அரசியல்- பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றனர். சிங்கள மொழியில் “கம” என்றால் ஊர், அல்லது வயல் என்று அர்த்தப் படும். தமிழில் கூட கமம் என்ற சொல் வழக்கில் உள்ளது. வெள்ளாள- கொவிகம ஆதிக்கம் இலங்கையின் சரித்திரத்தை தனக்கேற்றவாறு எழுதி வந்துள்ளது. இந்து பார்ப்பனீய பாரம்பரியத்தில் சூத்திரர்களாக கருதப்படும் விவசாய சமூகம், இலங்கையில் உயர் சாதியினராக தலையெடுத்தது. “கௌதம புத்தரின் தந்தை ஒரு கமக்காரன்” என்பது பௌத்த- சிங்கள புளுகுகளில் ஒன்று. இலங்கையை ஆண்ட தலை சிறந்த மன்னராக கருதப்படும் பராக்கிரமபாகு ஒரு “வெள்ளாளர்” என்கிறது சிங்கள-கொவிகம கற்பிதம். (மகாவம்சம், பராக்கிரமபாகு சத்திரிய வம்சத்தை சேர்ந்தவர் என்று கூறுகின்றது.) இன்றும் கூட அரசியல் தலைவர்கள் தாம் “வெள்ளாளரின் (கமக்காரர்களின்) மேம்பாட்டுக்கு ஆதரவானவர்களாக” காட்டிக் கொள்கின்றனர். அண்மைய உதாரணம், தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏர் பூட்டி உழுத காட்சி. தமிழர்கள் மத்தியிலும் அது போன்ற பிரச்சாரங்கள் சர்வசாதாரணம். “கந்தன் நல்ல கமக்காரன்” போன்ற சாதிய முன்னேற்ற பாடங்கள், ஆரம்ப பாடசாலை தமிழ் பாடப் புத்தகத்தில் போதிக்கப் படுகின்றன.

வெள்ளாள- கொவிகம சாதியினர், தமிழ், சிங்கள சமூகங்கள் மத்தியில் ஒன்றுக்கொன்று தொடர்பற்று காணப் படுகின்றனர். ஆரம்பத்தில் மதம், மொழி போன்ற கூறுகளும், பிற்காலத்தில் இனப் பிரச்சினையும் அந்தப் பிரிவினையை ஏற்படுத்தியது. இருப்பினும் இரு துருவங்களான ஆதிக்க சாதியினர், தத்தமது சமூகங்களில் தலித் சாதியினரின் எழுச்சியை அடக்குவதில் ஒரே மாதிரி செயற்பட்டுள்ளனர். நம் கண் முன்னாலே நடந்துள்ள சமீபத்திய உதாரணங்கள்: இளைஞர்களின் ஆயுதப் போராட்டம். வடக்கில் EPRLF என்ற இயக்கத்தில் அதிகளவு தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த தமிழ் வாலிபர்கள் இணைந்திருந்தனர். அதனால் அந்த இயக்கத்தினை “ஈழப் பள்ளர் புரட்சிகர முன்னணி” என்று உயர் சாதியினர் பரிகசித்தனர். ஆதிக்க சாதியினரின் “நல்ல காலம்”, அது போன்ற இயக்கங்கள் காலப்போக்கில் நிலைத்து நிற்கவில்லை. தெற்கில் ஜே.வி.பி. யில் சிங்கள தலித் சாதியினர் அதிகளவில் சேர்ந்திருந்தனர். அரசு ஜே.வி.பி. கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி அடக்குவதற்கு சாதிய பாகுபாடும் ஒரு காரணம். 1988 – 1991 க்கு இடைப்பட்ட குறுகிய காலத்தில் குறைந்தது அறுபதாயிரம் சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த இளைஞர்கள். அதனால் தான் அவர்களை கொன்று குவிப்பதில் அரசுக்கு எந்த விட சங்கடமும் இருக்கவில்லை.

வெள்ளாள- கொவிகம சாதியினரின் ஆதிக்கம், காலனிய காலத்தில் தோன்றியது. காலனிய எஜமான்களின் தயவால் வளம் பெற்றது. அதனால், இன்றும் கூட தமிழ், சிங்கள ஆளும் வர்க்கங்கள் குறிப்பாக பிரிட்டிஷ் காலனிய எஜமானுக்கு விசுவாசமாக உள்ளனர். காலனியாதிக்க ஐரோப்பியர்கள் இவர்களை எவ்வளவு தான் அலட்சியப் படுத்தினாலும், இன்று வரை இராஜ தந்திர உறவுகளை பேணிப் பாதுகாக்க விரும்புகின்றனர். தமிழர்களாக இருந்தாலும், சிங்களவர்களாக இருந்தாலும் காலனிய விசுவாசம் மட்டும் மாறாமல் அப்படியே உள்ளது. சீனாவும், இந்தியாவும் தமிழினப் படுகொலைக்கு ஆதரவளித்தார்கள் என்று திட்டித் தீர்க்கும் தமிழர்கள், மேற்குலக நாடுகளின் பங்களிப்பு குறித்து பேச மாட்டார்கள். மேற்குலக நாடுகள் புலிகளை வளர்க்கின்றன என்று கூப்பாடு போடும் சிங்களவர்கள், அந்த நாடுகளுடனான உறவுகளை துண்டிக்க மாட்டார்கள். ஏகாதிபத்தியம் எங்கேயும், எப்போதும் ஒரே மாதிரி நடந்து கொள்ளவில்லை. அடிமைகளை சங்கிலியால் பிணைத்து உழைப்பை சுரண்டுவது ஒரு வகை. அடிமை உணர்வை மூளைக்குள் செலுத்தி உழைப்பை சுரண்டுவது இன்னொரு வகை. இலங்கையை ஆட்சி செய்த ஐரோப்பியர்கள் இரண்டாவது வகையை சிறந்தது எனக் கண்டார்கள்.

“கள்ளர், மறவர், அகம்படியார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்.” என்றொரு ஈழத் தமிழ்ப் பழமொழி உண்டு. காலனிய ஆட்சிக் காலத்தில் வெள்ளாளர் என்பது ஒரு வர்க்கமாகவே இருந்தது. அவர்கள் பின்னர் சாதியாக பரிணாம வளர்ச்சி அடைவதை காலனிய ஆட்சியாளர்கள் எதிர்க்கவில்லை. மாறாக அது தமது காலனிய நிர்வாகத்திற்கு அனுகூலமாக இருக்கும் எனக் கருதினார்கள். போர்த்துக்கேயர்கள் ஆண்ட காலத்தில் பணம் வாங்கிக் கொண்டு “டொன்” என்ற பட்டம் கொடுத்து வந்தார்கள். பணம் படைத்த தமிழர்களும், சிங்களவர்களும் அன்று டொன் பட்டம் பெறுவதை மதிப்பாக கருதினார்கள். அதனை உள்ளூர் பாமர மக்களுக்கு காட்டிப் பெருமைப் பட்டனர். ஒல்லாந்தர் காலத்தில் “வெள்” என்ற பட்டம் கொடுக்கும் வழக்கம் தோன்றியது. “வெள்” பட்டம் வாங்கியவர்கள் உயர்சாதி வெள்ளாளர்கள் ஆனார்கள். ஒல்லாந்தர்களுக்கு அது ஒரு மேலதிக வருமானம்.
“பறங்கிகள் ‘டொன்’ பட்டம் விற்றது போலவே, ஒல்லாந்தருஞ் சனங்களின் சாதி எதிர்ப்பை அறிந்து, பனங் கொடுத்தவர்களை ‘வெள்’ அல்லது ‘மடப்பம்’ என்று தோம்பிற் பதிந்தனர்.” (யாழ்ப்பாணச் சரித்திரம், சே. இராசநாயகம்)

இருப்பினும் 19 ம் நூற்றாண்டு வரையில், வெள்ளாளர் என்ற சாதியை பற்றிய குறிப்புகள் இலங்கை சரித்திரத்தில் குறைவாகவே காணப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிர்வாகப் பொறுப்பேற்ற முதலியார்களும், வெள்ளாளர்களும் தம்மை ஸ்தாபனமயப் படுத்திக் கொண்டனர். தமிழ் பிரதேசங்களிலும், சிங்களப் பிரதேசங்களிலும் இது ஒரே நேரத்தில், ஒரே மாதிரியாக நடைபெற்றது. சிங்களப் பகுதிகளில் பௌத்த மத மறுமலர்ச்சி ஏற்பட்டதைப் போல, தமிழ்ப் பகுதிகளில் சைவ மத மறுமலர்ச்சி ஏற்பட்டது. சைவத்தையும் சாதியையும் வளர்த்தவர்களில் ஆறுமுக நாவலர் முக்கியமானவர். ஆறுமுக நாவலர் ஒரு பக்கத்தில் வெள்ளாள சாதியினர் கிறிஸ்தவ மிஷனரிப் பாடசாலைகளில் கல்வி கற்பதை ஊக்குவித்தார். மறு பக்கத்தில் தனது சமூகத்தினர் மத்தியில் சைவ மத கோட்பாடுகளை போதித்தார். ஆறுமுக நாவலர் உயர் சாதியினரை மட்டுமே சைவர்களாக்க பாடுபட்டார். அதற்கு ஒரு உதாரணம் தருகிறேன்.

நாவலர் எழுதிய “சைவ வினா-விடை” என்ற நூலில், விபூதி பூசும் போது பின்பற்ற வேண்டிய விதிகளைக் கூறுகிறார். அதில் ஒன்று. “விபூதி பூசும் போது எதிரே கீழ் சாதியினர் வரக் கூடாது.” பிராமணர்கள் வேதம் ஓதும் பொழுது சூத்திரர்கள் எதிரே வரக் கூடாது என்று எழுதி வைத்த மனுவுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? மனு சூத்திரர்களை பிராமண (இந்து) மதத்தை சேர்ந்தவர்களாக கருதவில்லை. அதே போல ஆறுமுக நாவலரும் தாழ்த்தப்பட்ட சாதியினரை சைவ சமயத்தை சேர்ந்தவர்களாக கருதவில்லை. பிரிட்டிஷ் இந்தியாவில் இந்து மதத்தை வளர்க்கும் பணியில் ஈடுபட்டவர்களுடன் ஆறுமுக நாவலர் நெருங்கிய தொடர்பை பேணினார். பார்ப்பனர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப் படி, வெள்ளாளர்களின் சாதிப் படி நிலையை உயர்த்துவதற்கு பாடுபட்டார். அதன் பயனாக சூத்திரர்களான வெள்ளாளர்கள் பூணூல் அணியும் சடங்கான தீட்சை பெறுதலை இலங்கையில் அறிமுகப் படுத்தினார்.

இவ்வாறு தான் சைவ மதம் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் அடையாளமாக மாறியது. நாவலர் “சைவத்தையும் தமிழையும் வளர்த்தார்” என்று பாட நூல்களில் எழுதப் பட்டுள்ளது. தென்னிலங்கையில் அநகாரிக தர்மபால எவ்வாறு பௌத்தத்தையும் சிங்கள மொழியையும் வளர்த்தாரோ, அதே பணியை தான் நாவலர் வட இலங்கையில் ஆற்றினார். பௌத்த சிங்கள ஞானத் தந்தையையும், சைவத் தமிழ் ஞானத் தந்தையையும் இலங்கை அரசு முத்திரை வெளியிட்டு கௌரவித்தது. வெள்ளாள-கொவிகம ஆதிக்கம் செலுத்திய இலங்கை அரசு, தனது நாயகர்களுக்கு மரியாதை செலுத்த மறக்கவில்லை. அதற்கு சாட்சியமாக “தமிழினத் தலைவரான” பிரபல சாதியவாதி சேர். பொன் இராமநாதனின் சிலை இன்றைக்கும் கொழும்பு நகரில் பழைய பாராளுமன்ற முன்றலில் காணப்படுகின்றது. சிங்கள-முஸ்லிம் கலவரத்தில், சிங்களவர்கள் பக்கம் வழக்காடிய இராமநாதனுக்கு சிங்களவர்கள் சிலை வைத்ததில் வியப்பில்லை. தமிழர்களும் அவரை தமது தலைவராக ஏற்றுக் கொள்வதற்கு என்ன காரணம்? தமிழகத்தின் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போல, இராமநாதனும் தனது சாதியின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஒருவர். ஒரு சாதித் தலைவர் காலப்போக்கில் தமிழ் தேசியத் தலைவராக்கப் பட்டார்.

வெள்ளாள- கொவிகம சாதியினர் காலனிய காலகட்டத்தில் உருவான போதிலும், அவர்கள் தமது வேர்களை பண்டைய மன்னராட்சியில் தேடினார்கள். சிங்களவர்கள் மத்தியிலும், தமிழர்கள் மத்தியிலும் ஆண்ட பரம்பரைக் கதைகள் ஒரே மாதிரித் தான் பேசப் படுகின்றன. பராக்கிரமபாகு போன்ற மன்னர்கள் எல்லாம் கொவிகம சாதியை சேர்ந்தவர்கள் என்று சிங்களவர்கள் வரலாற்றை திரித்தார்கள். சங்கிலியன் போன்ற மன்னர்கள் எல்லாம் வெள்ளாள சாதியை சேர்ந்தவர்கள் என்பது போல தமிழர்கள் வரலாற்றை திருத்தி எழுதினார்கள். பிரிட்டிஷ் காலனியான இலங்கையில் சமூகத்தின் உயர்நிலைக்கு வந்தவர்களுக்கு, நவீன கல்வி பெறும் வசதி கிட்டியது. அன்றிருந்த படித்த மத்தியதர வர்க்கம் வெள்ளாள-கொவிகம சாதியில் இருந்து தான் தோன்றியது. அந்த சமூகத்தை சேர்ந்த புத்திஜீவிகளுக்கு வரலாற்றை தமக்கேற்றவாறு மாற்றி எழுதுவதில் தடையேதும் இருக்கவில்லை. அன்று முதல் இன்று வரை, இலங்கை அரசியலில் அவர்களின் ஒரு பக்க சார்பான கருத்தியல், தேசியக் கோட்பாடாக கோலோச்சுகின்றது.

(தொடரும்)
பகிர்க23 2

“தீண்டாமைக்கொடுமைகளும் தீ மூண்டநாட்களும்” நூலுக்கான அறிமுகம்

தோழர் யோகரத்தினம் தனது சாதியப்போராட்ட அனுபவங்களையும் தான் சந்தித்த தீண்டாமையின் கொடுமைகளையும் சிறு நூலாக பதிவு செய்திருக்கிறார். இவரின் அனுபவப்பதிவுகளின் ஒருபகுதி ஏற்கனவே வடு சஞ்சிகையில் அப்பப்போ பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் என்ற தலைப்பில் இது நூல் வடிவம் பெற்றுள்ளது.

தமிழ் அரசியற்பரப்பில் கடந்த காலங்களில் எவையெவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பதிவுசெய்யப்ட்டிருக்கின்றன, எவையெவை வரலாற்று முக்கியத்துவம் அற்றவையாக இருந்திருக்கின்றன என்பதை இந்த நூல் அறிமுகத்துடன் சேர்த்து நான் இங்கே கிளறிப் பார்க்க விருப்புகிறேன். நீங்களும் அதை தாராளமாகச் செய்யவேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட.

தமிழுக்கும் சைவத்திற்கும் ஆறுமுகநாவலர் தொண்டு செய்தார் என்று நம்பவும் உச்சரிக்கவும் அதை மனப்பாடம் செய்தும், உடல் முழுக்க ஆழமாக பதிவு செய்யவும் பழக்கப்பட்டிருக்கின்றோம். அதை பச்சைப் பாலகரிலிருந்து முதுமை வரைக்கும் இன்னும் மரணம் வரைக்கும் காவிச் செல்லவும் பழக்கப்பட்டுவிட்டோம்.

எல்லாளன் சங்கிலியன் என்ற தமிழ் கதாநாயகர்களில் தொடங்கி ஆறுமுகநாவலர், செல்வநாயகம், அமிர்தலிங்கம், ஜி .ஜி பொன்னம்பலம், சிவசிதம்பரம், ஆனந்தசங்கரி, சம்பந்தன் ஈறாக சந்திரகாசன், குட்டிமணி, தங்கத்துரை, பாலகுமார், பத்மநாபா, சிறிசபாரத்தினம், உமாமகேஸ்வரன், பிரபாகரன் என்று நீழுகின்ற. தமிழ் தேசிய அரசியற் கதாநாயகர்களின் காவியங்கள் தமிழில் திரும்பத்திரும்ப இன்னமும் பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் பதினாறாயிரம் தடவைகளுக்கு மேல் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பதற்கு சாட்சியாக பல நூல்களும், சஞ்சிகைகளும், துண்டுப்பிரசுரங்களும் எங்கள் முன்னே பரவிக்கிடக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இணையத்தளங்களும் பேஸ்புக்கும் இவற்றை பல ஆயிரம் தடவைகள் பதிவுசெய்துவிட்டன. இந்தப் பதிவுகள் எல்லாம் யாருடைய வரலாறாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன எனக் கேட்டால் அது ஆதிக்கச் சாதிகளின் அரசியல் வரலாறாகவே பதிவுசெய்யப்பட்டுள்ளன. இன்னும் தொடர்ந்தும் பதிவு செய்யப்பட்டுக்கொண்டு இருகின்றன.

மேற்குறிப்பிடட் பெயர்களின் அரசியற் தலைமகைளின் தொடர்ச்சி இதை வலுவாக உறுதிசெய்கினறது. இவை ஒன்றும் தமிழ் தேசிய வரலாற்றில் தற்செயலான நிகழ்வுகள் அல்ல. இந்தத் தலைமைகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஆதிக்க சாதி ஆரசியலின் தொடர்ச்சி என மீண்டும் நான் உங்களுக்கு அழுத்திச் சொல்கிறேன். இந்தத் தலைமைகள் ஒன்றும் தற்செயலானவை அல்ல. இந்த ஆதிக்கச் சாதியின் கதாநாயக சாதி அரசியலின்
பிறள்வாகவும் எதிர்வினையாகவும் தோழர் யோகரத்தினத்தின் நூல் அமைகிறது. மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட சொல்லப்படாத பல சம்பவங்களை இந்த நூல் சொல்கிறது.

நாங்கள் சாதியெல்லாம் பாக்கிறேல்லை. இப்ப ஆர் உதையெல்லாம் பார்க்கினம். அதைப்பற்றி இப்ப ஏன் பேசுவான். அது பழைய கதை. இதைவிட்டிட்டு தமிழற்ரை போராட்டத்தைப் பற்றிக் கதையுங்கோ என்ற நயவஞ்சகமான குரல்களின் அரசியலின் மறுதலிப்பதாகவே தோழர் யோகரத்தினத்தின் இந்த நூல் அமைகிறது.

பழையன கழிதல் புதியன புகுதல் என்ற பிரபலயமான தமிழ் பழமொழி ஒன்று உண்டு. அது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கக் கூடும். ஆனால் இந்த சாதித் திமிரை பொறுத்தவரைக்கும் பழையன கழிவதேயில்லை. புதியன புகுவதேயில்லை என்பது தான் வரலாற்றுப் பதிவாக இருக்கின்றது. இதிலிருந்து இந்தத் தமிழ் பழமொழி சாதித்திமிரிடம் தோற்றுப் போய் விட்டது என்ற முடிவுக்கு வருகிறேன். நாம் கற்றதால் ஆன பயன் என்ன என்பதை திரும்பத் திரும்ப கேட்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

நாங்கள் எல்லோரும் இங்கே சர்வதேசத் தமிழர்களின் ஒரு அங்கமாகவே இங்கே கூடியிருக்கிறோம் என்று சொல்லலாமா? ஆம் இல்லை எனத் தீர்மானிப்பது அவரவரின் தெரிவு. ஆனால் இந்த தெரிவு அரசியலின் பின் சாதித் திமிரின் செல்வாக்கை கண்டுகொள்வதென்பது கடினமான விசயம் அல்ல.

எங்கள் குழந்தைகள் தேவராம் திருவாசகம் நரியை பரியாக்கிய கதை, பாட்டி வடை சுட்ட கதை சீ. . சீ . . இந்தப் பழம் புளிக்கும் கதை, திருக்குறள் கூடவே தமிமழ்த் தேசியக் குறள்களையும் கசடறக் கற்று வருகிறார்கள். இந்தக் கற்றதால் ஆய பயனின் தொடர்ச்சியாக குழந்தைகளிடமும் இந்த சாதித் திமிரின் வரலாறு தொடர்கிறது. மறுபக்கத்தில் கந்தன் சுப்பன் காலத்தில் தொடங்கி, மனிக்பாம் வரைக்கும் இரட்டை குவளை முறைக்கு ஒப்பான பழக்கவழக்கங்கள் அமுலில் இருந்திருக்கின்றன. சாதிக்கொரு அடுப்பு மூட்டப்பட்டிருக்கிறது. நாங்கள் கற்றதால் ஆய பயன் என்ன என்றால் ஒன்றுமேயில்லை என்பதே பதிலாக கிடைக்கின்றது. தோழர் யோகரத்தினத்தின் நூலை வாசிக்கும் பொழுது, இதனை மிகவும் ஆழமாக உணரமுடிந்தது.

மந்திரமாவது நீறு
வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு
துதிக்கப்படுவது நீறு
என எல்லாம் திருநிறாய்ப் போன தீருநீற்றுக்குள் அடங்கிவிட்ட சர்வதேசத் தமிழர்களின் இந்துமத தத்துவ வழிபாட்டு வாழ்வு, சாதித்திமிர் அரசியலின் தொடர்ச்சியாக உள்ளது. இதற்கு சாட்சியாக சர்வதேசம் எங்கும் 30 வருட காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட நூற்றுக் கணக்கான இந்துக் கோவில்கள் இருக்கின்றன.

உங்களில் பலர் சங்காய்யைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். மாஓ சே துங் இன் நெடும்பயணத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீகள். ஆனால் சங்கானைப் போரட்டத்தைப் பற்றி கேள்விபட்டிருப்பீர்களோ தெரியாது?
சங்கானையில் சின்ன வியட்னாம் போராட்டம் ஒன்று நடக்கின்றது என்ற அமிர்தலிங்கத்தின் நக்கல் பாராளுமன்ற உரையைப் பற்றி நீங்கள் ஒருக்கால் கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் பராளுமன்ற நக்கல் வாக்கு மூலம் எங்கெங்கே பதிவுசெய்ப்பட்டுள்ளது என்று பார்த்தால் அவை சாதி எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பான பதிவுகளிலும், சாதிய எதிர்ப்புப் போராட்டங்களைச் செய்தவர்களின் பதிவுகளிலும் மட்டுமே பெரும்பாலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் அரசியல் வரலாறு பதினாறயிரம் தடவைகளுக்கு மேல் தமிழில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் கல்வித் தரப்படுத்தலால் தான் தமிழீழப் போராட்டம் உருவானது என்ற கட்டுக்கதையைப் பல உபகதைகளாக, நெடுங்கதைகளாக, பெருங்கதைகளாக, கதைகதையாக நாங்கள் கேள்விப்பட்டிருக்கின்றோம் . யாழ்பாணத் தமிழர்களின் வாரிசு உரிமைச் சொத்தான யாழ் நூல்நிலையம் ஆசியாவிலையே மிகப் பழமைவாய்ந்தது என்று சொல்லப்பட்ட நூல்நிலையம் சிங்கள ராணுவத்தால் தீ மூட்டி எரிக்கப்பட்டது என்ற செய்தியை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தச்செய்தி பத்திரிகைகளிலும் இணையங்களிலும் பல ஆயிரம்தடவைகள் திரும்பத்திரும்ப இன்றளவும் பதிவுசெய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

யாழ்.நூல்நிலையம் தீமூட்டி எரிக்கப்பட்டதை பற்றி டானியலிடம் கேட்டபொழுது, தென்மராட்சித் தொகுதியிலுள்ள மீசாலைக் கிராமத்தின் தலித் சிறுவர்களினது பாடப்புத்கங்கள் சாதிவெறியர்களால் பறித்து தீயிட்டு எரிக்கப்பட்டதை நினைவுகூறியிருந்தார். இலங்கையரசு கல்வித்தரப்படுத்தலை கொண்டுவருவதற்கு முன்இ வடபகுதிகளில் கல்வித்தரப்படுத்தல் முறை அமுலில் இருந்திருக்கின்றது. ஆதிக்கச்சாதியிரால் தலித்சமூகங்களிமன் மீது கல்வித்தரப்படுத்தல் செய்யப்ட்டுவந்தன என்பதற்கு டானியலின் பதில் தெளிவானதொரு சாட்சியமாக இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் செல்லன் கந்தையன் என்ற பெயர் பதிவு அரசியலில் மிகக் கவனமாகத் தவிர்க்கப்பட்ட சாதித்திமிரின் குறியீடு. யாழ் நூல்நிலையம் ஒரு பறையனால் திறந்து வைக்கப்பட்டது என்ற வரலாற்றுப் பதிவிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது.

நடந்து முடிந்தவைகள் யாவும் வெறும் சம்பவங்களாகவே எடுத்துக்கொள்ள நாங்கள் பழக்கப்பட்டுவிட்டோம். நடந்து முடிந்த சம்பவத்தை பல ஆயிரம் தடவைகள் பதிவுசெய்வதற்கும், இன்னொருசம்பவத்தை சில பத்துத்தடவைகள் பதிவுசெய்வதற்கும் உள்ள பதிவு அரசியலை, அந்தப் பதிவு அரசியலின் இடைவெளியையும் அதன் அரசியற் சூதையும் நாங்கள் அக்குவேறு ஆணிவேறு சாதிவேறு பால்வேறாக, தமிழ்வேறு, மதம்வேறு, இனம்வேறாக பிரித்தறிய வேண்டியவர்களாக இருக்கின்றோம். அப்படியொரு பிரித்தறிதல் மூலமே கடந்த காலங்களின் வன்முறையாக நிகழ்த்தப்பட்ட சம்பவங்களை அறிவுபூர்வமாக, அரசியல்சார்ந்து விளங்கிக்கொள்ள உதவும் அல்லது அவை வெறும் சம்பவங்களாகவும் வன்முறையாகவுமே தொடர்ந்தும் பதிவுசெய்து வைத்திருப்போம்.

1977ம்ஆண்டுக்கு முன் தீண்டாமைக்கு எதிராக பல இடங்களிலும் கிராமம் கிராமமாக தீ மூண்டிருக்கிறது. இவை முழுமையாக இன்னும் பதிவு செய்யப்படவில்லை. டானியல், டொமிக்ஜீவா, என். கே. ரகுநாதன், செந்தில் வேல், தெணியான், எஸ். பொன்னுத்துரை இவர்களுக்குபின் தோழர் யோகரத்தினம் சண்டிலிப்பாய் கிராமத்தை முன்வைத்து சாதி எதிர்ப்பு போராட்டத்தையும், அதன் குரூரத்தையும், “தீண்டாமையும் தீமூண்டநாட்களும்” என்ற இந்த நூலின் மூலம் தனது அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார்.

பறையர்கடவை, தச்சக்கடவை, நளக்குறிச்சி, வண்ணாரத்துண்டு, அம்பட்டக்கடவை என ஆதிக்கச் சாதியினரால் அழைக்கப்பட்ட கிராமங்களின் குரலை, அங்கு வாழ்ந்த மக்களின் குரல்களை தோழர் யோகரத்தினம் முடிந்தளவு தனது நூலில் பதிவு செய்திருக்கிறாரர். சண்டிலிப்பாய் கேணிக்கட்டு குறிச்சியில் பிறந்த தோழர் யோகரத்தினம் சாதி எதிர்பபுப் போராட்டத்தில் தனது சொந்த அனுபவங்களையும் தனது மூதாதையரிடமிருந்து பெற்றுக்கொண்ட சாதியக்கொடுமைகளின் அனுபவங்களையும் இந்த நூலில் பதிவுசெய்திருக்கிறார்.

தனது பாடசாலைக் காலங்களின் தான் எதிர் கொண்ட சாதித் திமிரை,
தனது கிராமங்கள் எதிர்கொண்ட சாதித்திமிரை.
தனது முன்னோர்கள் எதிர்கொண்ட சாதித் திமிரை
இந்த நூலில் நினைவு கொள்கிறார்.

அன்றைய இடது சாரிகள் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் உறுதுணையாக நின்றதை நன்றியுடன் நினைவு கொள்கிறார். இன்றும் வி. பொன்னம்பலம், வினோதன் போன்றவர்களையும் நினைவுகொள்கின்றார்.

இந்த நூலில் முக்கியமான பதிவு என்னவென்றால் 100தலித் இளைஞர்களின் பௌத்த மதமாற்றம் பற்றிய குறிப்பு. இது சாதி ஒடுக்குமுறைக்கும் சாதித்திமிருக்கும் எதிரான ஒரு அரசியல் விமர்சனமாக இந்த மதமாற்றம் இருந்திருக்கின்றது. அன்றைய சூழலின் தலித் இஞைர்களின் எதிர்ப்பரசியலாக தொழிற்பட்டிருக்கின்றது.

“யோகரத்தினம் தோழருக்கு 1977 ம் ஆண்டுக்குப் பிறகு ஒண்டுமே தெரியாது. அவர் திரும்பத் திரும்ப பழசையே சொல்லிக்கொண்டிருப்பார்‘‘ என்ற கேலிகளையும், நக்கல்கயையும் நண்பர்களும் தோழர்களும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இந்த நக்கல்காரரர்களுக்கு பதிலாகவும், விமர்சனமாகவும் இந்த நூல் அமைகிறது.

சங்கானையில் என்ன நடந்தது, கன்பொல்லையில் என்ன நடந்தது, சோல்பரி ஆணைக் குழுவை கன்பொல்லையை பார்வையிட யார் யார் உறுதுணையாகவிருந்தனர், மாவிட்டபுர கோவில் போராட்டத்தில் என்ன நடந்தது, பனையோட சேர்த்து எப்பிடி கந்னையும் சுப்பனையும் தறிச்சு விழுத்தினாங்கள், பெண்கள் மேல்ச்சட்டை போட்டால் கொக்கத்தடியால் எப்பிடிப் கிழித்தெறிஞ்சாங்கள், சிரட்டையிலை எப்பிடியெல்லாம் கஞ்சி தந்தாங்கள், தமிழ்த்தேசிய அரசியலின் பெயரால் நாங்கள் எப்பிடியெல்லாம் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டோம் என்பதை திரும்பத் திரும்ப இன்னும் நூறு வருடங்களுக்கு சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம்.

சாதி எதிர்ப்புபோராட்டம் பற்றிய பல புதிய பதிவுகளைத் தோழர். யோகரட்ண்ம் இந்த நூலில் செய்திருக்கின்றார். இலங்கையில் உள்ள பல்வேறு சிறுபான்மைச் சமூகத்தினரின் அரசியல் அபிலாசைகளை குறைந்த பட்சம் புரிந்துகொள்வது எப்படி?, பரஸ்பரம் ஒருவவருக்கொருவர் மதிப்பளித்து வாழ்வது எப்படி என்ற கேள்விகளுக்கு இந்த நூல் விடையாக கூட அமைகின்றது. இன்றும் தொடர்கின்ற சாதித் திமிர் அரசியலுக்கு விமர்சனமாகவும் இந்த நூலின் முக்கியத்துவம் அமைகின்றது